முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கே.எஸ் பரத்திடமிருந்து எதிர்பாராத டி 20 ஆட்டம்



RCB vs Delhi - final league match


கே.எஸ் பரத் நினைத்த இடங்களில் எல்லாம் பந்தை அடிக்கும் திறமை மிகுந்தவர் அல்ல. உள்ளூர் போட்டிகளில் அவருடைய டி 20 சராசரி 18.5. ஸ்டிரைக் ரேட் 110க்குள். ஆக எதைக் கண்டு இவரை பெங்களூர் அணி தேர்ந்தெடுத்தார்கள் என முதலில் வியந்தேன். கோலி இரண்டு நோக்கங்களுக்காக அவரை அணிக்குள் எடுத்து மூன்றாவது எண்ணில் ஆட வைத்தார்:

1) டி வில்லியர்ஸுக்கு முதுகுக்காயம் இருப்பதால் அவரிடத்தில் ஒரு கீப்பர் தேவை. பரத் ஒரு சிறந்த கீப்பர்.

2) ஹைதரபாத், ஆந்திராவை சேர்ந்த பலரையும் போன்றே பரத் சுழல் பந்தை நன்றாக ஆடக் கூடியவர். மத்திய வரிசையில் விக்கெட் இழக்காமல் ஒற்றை, இரட்டை ரன்களை எடுத்து 120 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிற மட்டையாளர் தேவை. அதனால் பட்டிதாரை தியாகம் பண்ணி பரத்தை அவ்விடத்தில் கொண்டு வந்தார் கோலி.


பரத்தோ தன் மீது அழுத்தம், எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையை பயன்படுத்தி சாமர்த்தியமாக, நிதானமாக ஆடினார். அவ்வப்போது சுழலர்களை மிட் விக்கெட்டுக்கு மேல் தூக்கி அடித்தார். பந்தின் திசை off ஸ்டம்புக்கு வெளியே மாறினால் கவர், எக்ஸ்டிரா கவரில் தட்டி விட்டு முயலைப் போல் ஓடி விடுவார். பெரும்பாலான போட்டிகளில் தன்னால் அணியின் மத்திய வரிசை ஆட்டம் சுணங்காமல் மெத்தனமாகாமல் பார்த்துக் கொண்டார். அவர் எல்லா ஆட்டங்களிலும் சிரத்தையுடன், பந்துகளை ஒழுங்காக கவனித்து சமநிலை குலையாமல் அடித்தாடியதை நான் ரசித்தேன். ஏனென்றால் இந்த ஐ.பி.எல் பருவத்தில் பல இளம் மத்திய வரிசை மட்டையாளர்கள் எந்த பந்து விழுகிறது என்பதையே பார்க்காமல் மட்டையை சுற்றி விக்கெட்டை கொடுப்பதைப் பார்த்தோம். பரத் இந்த விசயத்தில் எனக்கு ராகுல் திராவிட் விக்கெட் கீப்பராக இந்திய ஒருநாள் அணியில் ஐந்தாவது / ஆறாவது எண்ணில் வந்து அடித்தாடிவதை நினைவுபடுத்தினார். 


பரத் எனக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கீப்பர் மட்டையாளர் இயன் ஹீலியையும் நினைவுபடுத்துகிறார். திராவிட், ஹீலி போன்றவர்களுக்கு ஆட்டத்திறன் சற்று குறைவு, ஆனால் அதையே தமது வலிமையாக மாற்றிக் கொண்டார்கள் - எந்த பந்துக்கு, எந்த சூழலுக்கு எப்படி ஆட வேண்டும் என தெளிவான திட்டத்துடன், முன் தயாரிப்புடன் ஆடினார்கள். அதனாலே யாரும் எதிர்பாராத போது நைசாக அங்கிங்கு தட்டி விட்டு ஓடி சரியான நேரத்தில் தாம் அடிக்க வேண்டிய பந்துகளை கணித்து விளாசி வெற்றியின் பக்கத்தில் அணியை கொண்டு சென்று விடுவார்கள். கே.எஸ் பரத் இன்று இறுதிப் பந்தில் நேராக ஒரு சிக்ஸர் விளாசி ஆட்டத்தை வென்றும் கொடுத்தார். 


போட்டிக்குப் பின் அவர் அளித்த பேட்டியில் "எதுவும் சுலபத்தில் கிடைக்காது, எதை அடையவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நம்புகிறேன்" என்று கூறினார். இந்த ஐ.பி.எல்லுக்கு என்றே அவர் தனியாக பயிற்சி எடுத்திருக்கிறார், யாரை எப்படி கையாள்வது என ஒரு மனக்கணக்கை போட்டு வைத்து வந்திருக்கிறார் எனத் தெரிகிறது. பரத்தால் இஷான் கிஷன் இன்று அடித்ததைப் போல ஆட முடியாது. ஆனால் இஷான் கிஷனால் பரத்தைப் போன்று இப்படியான சிக்கலான ஒரு சந்தர்பத்தில் இறுதி வரை நின்று நிதானம் இழக்காமல் ஆட்டத்தை ஏதோ கோழியை ஈரத்துணி போட்டி அமுக்கிப் பிடிப்பது போல கூலாக சத்தமில்லாமல் ஜெயித்து தரவும் முடியாது!


இந்த இடத்தில், பரத்தை நம்பி களமிறக்கி தொடர்ந்து ஆதரித்த கோலியையும் நாம் நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...