முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மன்னிப்புக் கேட்ட சாவர்க்கர் மட்டும் தான் துரோகியா?




சாவர்க்கர் வெள்ளையருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி சிறையில் இருந்து வெளிவந்த பின் இணங்கிப் போனதைப் பற்றி பேசும் நாம் காந்தியும் ஒரு கட்டம் வரை பிரித்தானியருக்கு ஜால்ரா அடித்தவரே என்பதை மறந்து விடுகிறோம். வடக்கே உள்ள அரசியல் வியாபாரிகளும் அனைவரும் அன்று அப்படித்தான் இருந்தார்கள். காங்கிரார் இப்படி என்றால் அவர்களுக்கு எதிராக இருந்த கட்சியினரும் அவ்வாறே பிரித்தானியருடன் நல்லுறவை பேணினர். ஒரு கட்டத்தில், சிறையில் இருந்து மன்னிப்புக் கேட்டு வெளிவந்த சாவர்க்கர் காந்தியின் எதிர்பாரா வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தனது அரசியலை அப்படியே காந்திக்கு நேர் எதிர் பாதையில் வகுத்துக் கொண்டார். பிரித்தானிய எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு பேசாமல் ஓய்வூதியம் வாங்கியபடி இந்துத்துவாவை கனவு காணவும் வளர்த்தெடுக்கவும் தன் கடைசி காலத்தில் முயன்றார் என்பதே வரலாறு. நாம் இப்போது காந்தி ஆங்கிலேயரை எதிர்த்த இந்த இறுதி சில பத்தாண்டுகளையும் அப்போது சாவர்க்கர் எடுத்த எதிர் தேசிய, பிரித்தானிய ஆதரவு நிலைப்பாட்டையும் மட்டும் வைத்து இருவரையும் மதிப்பிடுவது நியாயமல்ல. இரண்டு பேருமே சந்தர்ப்பவாதிகள் என்பதே உண்மை.


இன்னொரு சுவாரஸ்யமான தகவல் சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்து கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிய போது அதற்கு ஆதரவளித்து தன் பத்திரிகையில் எழுதியவர் காந்தி. அது மட்டுமல்ல கடிதத்தை எப்படி எழுதினால் பிரித்தானியர் அருள் பாலிப்பர் என ஒரு வக்கீலாக பரிந்துரைத்தவர். எப்படி இருக்கிறது ஜோடி?


சாவர்க்கர் அன்றிருந்த பல காங்கிரஸ், காங்கிரஸ் அல்லாத தலைவர்களைப் போல அரசியலில் சமயோஜிதத்தை முக்கியமாக கருதினவர். இன்று நாம் ஏதோ மாய லோகத்தில் மிதந்தபடி காங்கிரசார் மட்டும் வெள்ளையரை காலமெல்லாம் எதிர்த்த வீரர்கள் என்றும், சாவர்க்கர் மட்டும் பேடி என்று வசனம் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. சுதந்திரத்துக்கு மூன்று பத்தாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை பார்த்தாலே நமது இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் இங்கிலாந்து ராணியை சேவித்தவர்களே என புரிந்து போகும். அந்த கூட்டத்தில் வெறுப்பரசியலின் தாவூத் இப்ராகிமாக திகழ்ந்தவரே சாவர்க்கர் என்பது தான் வித்தியாசம். ஆரம்பத்தில் இருந்தே அவர் வன்முறையையும் துப்பாக்கியையுமே நம்பினார் என அவரது வரலாறு சொல்லுகிறது. 


அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டதும் அமைதி வழி அரசியலில் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதாலே. சிறை வாசத்துக்குப் பின் ஊர் திரும்பிய அவர் கடைசியில் செய்ததென்ன? காந்தியைக் கொல்வதற்கு என துப்பாக்கியை கோட்சே கையில் ஒப்படைத்தார். இந்த துப்பாக்கி, சதியாலோசனைகள், தீவிரவாதம், பின்னால் அவர் உருவாக்கிய மதவாதம், இந்து தேசியவாதத்தை தவிர்த்தால் அவரும் அந்த கால காங்கிராரைப் போல வெள்ளையருக்கு கால் அமுக்கி விட்ட பரம்பரை தான். இவர்களில் உத்தமர்கள் என நாம் இன்று நம்ப விரும்புகிற பொருளில் யாரும் இல்லை. 


அன்றைய சூழல் அப்படி - வெள்ளையரின் சாம்ராஜ்ஜியம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் நொடிந்திட காந்தியும் அவரது தொண்டர்களும் இது தான் சந்தர்ப்பம் என திரும்ப அடித்தனர். அதுவரை வெள்ளையனுக்கு நீதியுணர்வு உண்டு எனக் கூறி வந்த காந்தி யு டர்ன் எடுத்து 'இனி நாட்டை ஆளும் தகுதி உனக்கு இல்லை' என்றார். ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் எல்லாம் ஒரு உணர்ச்சிகரமான சாக்கு மட்டுமே. ஆங்கிலேயர் என்றுமே கொடூரமாகத் தான் இந்தியர்களை நடத்தி வந்தனர். நிஜத்தில் நாட்டை ஆகும் பொருளாதார ஆற்றலை அன்று வெள்ளை அரசு இழந்து வந்ததையே காந்தி அன்று அப்படி பில்ட் அப் பண்ணி சொன்னார். வரலாறு இப்படிப் போகிறது - நம் வடக்கத்திய தியாகிகள் ஒவ்வொருவரும் ஒரு வியாபாரி. சாவர்க்கர் துப்பாக்கியாலும் பின்னர் மன்னிப்பு கடிதத்தாலும் மதவாதத்தாலும் வியாபாரம் செய்தார். காந்தி அதையே சமரசம், குற்றவுணர்வு, உணர்வு சுரண்டல், சனாதனம், தியாகம் என வேறுவழியில் செய்து நல்ல பெயர் பெற்றார். வரலாறும் சந்தர்பங்களும் காலனியாதிக்கத்தில் இனி லாபமில்லை என முதலீட்டியம் உலகம் முழுக்க உணர்ந்து கொண்டதும் இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தது. ஆனால் அந்த பெருமையை மொத்தமாக காந்தி ஆண்ட் கோ லவுட்டிக் கொண்டனர்.

இப்படி நமது வரலாறு சொல்வது என்னவென்றால் காந்தியோ சாவர்க்கர் 

 யாரும் மெச்சத்தக்கவர்கள் அல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...