என்கவுண்டர்களை நிறுத்தினால் மட்டும் போதாது, போலிசார் துப்பாக்கி பயன்படுத்துவது, காவல் நிலையங்களுக்கு என உள்ளறைகள் சித்ரவதைக்காக இருப்பதும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மக்களின் feedbackஐ வாங்கி அதன் அடிப்படையில் பதவி நீடிப்பு, சம்பளம் வழங்குதல், உயர்த்துதல் முடிவு செய்யப்பட வேண்டும். இப்போது காவல்துறை மட்டற்ற அதிகாரத்துடன் முடிசூடா மன்னர்களாக உள்ளது மாறி ஒரு தனியார் ஊழியர் போல நடத்தப்பட வேண்டும். மக்களின் கோபத்தை சம்பாதித்தால் உடனடியாய் வேலையை இழக்க நேரிடும், மேலதிகாரிகளை, அரசியல்வாரிகளுக்கு பணிந்தால் போதாது எனும் நிலை கொண்டு வரப்பட வேண்டும். அதுவரை காவல்துறை ஒருவித சமூக புற்றுநோயாகவே தொடரும்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்