முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றுத்திறனாளியியலில் ஏற்பட்டு வரும் உற்சாகம்


 


நேற்றைய இணையவழி கருத்தரங்கில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறி பேசி உண்மையில் தாவு தீர்ந்து போனது - கலவையான பார்வையாளர்கள் என்பதால் இரண்டிலும் பேசுங்கள் என ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டிருந்ததால் அப்படி ஆகிற்று. முதலில் நான் ஆங்கிலத்திலே பேசியாக வேண்டும் என நினைத்திருந்ததால் குறிப்புகளையும் அம்மொழியிலே எடுத்திருந்தேன். அதை இங்கு விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். 


பங்கேற்றிருந்த மாற்றுத்திறனாளிகளின் ஆர்வம், கேள்விகள், கருத்துகள் எனக்கு மகிழ்ச்சியளித்தன. அண்மையில்“தமிழா தமிழா” நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து விவாதம் நடந்த போதும் இதை கவனித்தேன். மாற்றுத்திறனாளிகள் அரசியலாக்கம் பெறுகிறார்கள், தமது உரிமைகளுக்காக போராட வேண்டும், பேச வேண்டும் எனும் தன்னுணர்வு அவர்களிடையே அதிகமாகி உள்ளது. பழைய தயக்கம் இப்போது இல்லை. மற்ற மாநிலத்தவர்களிடத்து பேசுகையில் தமிழ்நாட்டு மாற்றுத்திறனாளிகளிடம் இந்த அரசியலுணர்வு, ஒற்றுமை அதிகம் என்றார்கள். ஒருமித்த உணர்வு கொண்டோருடன் இருந்து உரையாடுகையில் ஒரு நம்பிக்கையும் உத்வேகமும் சூழலில் உருக்கொண்டு நம் நரம்புகளிலும் படரும் அல்லவா அதை நேற்று உணர்ந்தேன். போகிற போக்கைப் பார்த்தால் மாற்றுத்திறனாளியியல் ஒரு ஆய்வுத்துறையாக அடுத்த பத்தாண்டுகளில் தீவிரம் பெறும் என நினைக்கிறேன். இது ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கும்.


மாற்றுத்திறனாளியியல் சார்ந்த படைப்புகள் சினிமா, இலக்கியம் உள்ளிட்ட கலைத்துறையிலும் அதிகம் வர வேண்டும், அது களப்போராளிகளுக்கு ஆதரவளிப்பதாக இருக்கும் என்று கூறினேன். முந்தின தினம் தலித்தியம் பற்றி பேசிய கவிஞர் சுகிர்தராணி இதேவிதமான கருத்தை தெரிவித்தார் என்று கூறினர்.


“கால்கள்” நாவலின் புரூபை என்னிடம் கொடுத்துவிட்டு “இதன் தலைப்பை மறுபரிசீலனை பண்ணுங்க, இந்த தலைப்பினால் இதை ஊனம் பற்றின நாவலாக மட்டும் நம் சூழலில் பார்த்து விடுவார்கள்” என்று மனுஷ் கவலை தெரிவித்தது ஞாபகம் வருகிறது. அங்கிருந்து நீண்ட தூரத்திற்கு இருவருமே இப்போது வந்து விட்டோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.