இப்படி தாயைப் பற்றி எழுத ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். தி.ஜாவாவது அம்மாவை ரொமாண்டிசைஸ் பண்ணுவார். ஆனால் ஆதவனோ தயவு தாட்சண்ணியம் பார்ப்பதில்லை. மேலும் இந்த கணேசன் பாத்திரத்திற்கு வயதுக்கு முதிர்ந்த பெண் ஒருவருடன் (நண்பனின் அம்மா) ஏற்படுகிற வக்கிரமான உறவின் மற்றொரு பக்கத்தை இந்த மனவியல் தந்திரம் காட்டுகிறது.
பிராயிட் இதை நாம் நம்மிடம் காண விரும்பாத அருவருப்பை இன்னொருவரிடத்து மடைமாற்றி விடுவது, பிரதிபலிப்பது என்கிறார் (transference). கணேசன் இங்கே தன் நண்பனின் அம்மாவிடம் தான் கொள்ளும் பிறழ் உறவை காணும் ஒரு வெளியாளின் அருவருப்பு, எரிச்சலை மடைதிருப்பி தன் அம்மா மீது போட்டு, அவளை பிறழ்ந்தவளாக ஒரு கணம் கற்பித்து, தன்னை அந்த வெளியாளாக நினைத்து ஆசுவாசம் கொள்கிறான். எவ்வளவு சிக்கலான உலகம் இல்லையா நம் அகம்!
Comments