முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலில் காட்சியைக் கட்டமைக்கும் திறன்: ஷோபாசக்தியின் “சலாம் அலைக்கில்” இருந்து ஒரு உதாரணம்




ஷோபாசக்தியின்சலாம் அலைக்என்னை மிகவும் பாதித்த இடம் இது. ஜெபானந்தன் ஈழப் போரின் போது அங்கிருந்து தப்பித்து நிறைய போராட்டங்களுக்குப் பிறகு பிரான்ஸுக்கு வருகிறான். அங்கு அவன் மற்ற அகதிகளைப் போன்று குடியுரிமைக்காக விண்ணப்பித்து தனக்கெதிராக தொடர்ந்து மூடப்படும் கதவுகளைக் கண்டு மனம் தளராது, அல்லது அதற்கான வாய்ப்பில்லாமல் தன்னை தக்க வைப்பதற்காக ஓடிக் கொண்டே இருக்கிற ஒருவன். அவன் தன்னை விட வயதில் மூத்தவளான உமையாளைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். அவர்கள் ஒரு கட்டத்தில் பிரிகிறார்கள். விவாகரத்து பெறுகிறார்கள். அவர்களுடைய மகனை உமையாள் தனியாக வளர்க்கிறார். அம்மகன் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து மாலியில் நடக்கும் போரில் கண்ணி வெடியில் சிக்கி இறந்து போகிறான். ஜெபான்ந்தன் ஒரு போரினால் சிதைந்து போகும் குடும்பத்தில் இருந்து தப்பி வந்து பிரான்ஸில் தன் மகன் மீண்டும் ஒரு மகனையும் பலி கொடுக்கிற துயரத்துடன், கையாலாகாத பரிதவிப்புடன் நாவல் முடிகிறது.

இறுதியில் வருகிற காட்சி ஒன்று முக்கியமானது. ஒரு சிறந்த காட்சி உருவாக அதன் முடிவில் வரும் சிறிய திருப்பம், அதிர்ச்சியுடன் அதன் பின்புலம், பின்னணியில் வரும் பொருட்கள், உயிர்கள் சரியாக திட்டமிடப்படுவதும் அவசியம் (staging). ஒரு இடம், அங்குள்ள விசயங்கள், அங்கு வரும் மனிதர்கள் எங்கிருக்கிறார்கள், எங்கிருந்து எங்கு போகிறார்கள், ஒரு வசனத்தைப் பேசும் போது எந்த இடத்தில் நிற்கிறார்கள் என்பதைப் பற்றின தெளிவு இருந்தால் தான் குறைவான சொற்களில் நம்மால் நெஞ்சைத் தைக்கிற ஒரு காட்சியை உருவாக்க முடியும். இதற்கு கீழ் வரும் காட்சி ஒரு சிறந்த உதாரணம்.

 ஜெபானந்தன் ஒரு தேவாலயத்தில் வேலை பார்க்கும் தன் முன்னாள் மனைவியைத் தேடிப் போகிறான். அவனுக்கு ஒரு நிச்சயமான நோக்கம் இருக்கிறது. அது பின்னால் வருகிறது:


"மகன்ர டொக்குமெண்ட்ஸ் வேணும்."

"என்ன டொக்குமெண்ட்?"

"பிறப்பு சேர்ட்டிபிகெட், பிறப்பு சேர்ட்டிபிகெட்"

"என்னத்துக்கு?" என்று கேட்ட உமையாளின் கண்கள் இப்போது சுருங்கிப் போயின. நான் ஆலயத்தின் கூரையைப் பார்த்தவாறே சொன்னேன்:


"மகன் பிரான்ஸுக்காக செத்திருக்கிறான். இதைச் சொல்லிக் கேட்டால் எனக்கு பிரஞ்சு நஷனாலிட்டி கிடைக்கும்."

(...)

உமையாள் தனது கையிலிருந்த இரண்டு தாள்களையும் என் முன்னே மேசையில் வைத்தாள். அவை மகன் மக்ஸென்னினது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்.


நான் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு நாற்காலியிலிருந்து எழுந்தேன். உமையாள் அப்போது ஒரு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தவாறே ஒளிப்பிராணியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்தாள்.


"வாறன்" என்றேன்.


என்னை நிமிர்ந்து பார்த்த உமையாள் "சமைக்கப் போறன் ... சாப்பிடிட்டுப் போறீரோ?" என்று கேட்டாள்.


"பிள்ளைக் கறி" என்றேன்.


"சந்நிதியானே" என்ற முணுமுணுப்பு என் காதில் ஒலித்தது."


(“ஸலாம் அலைக்", பக் 139-140, ஷோபாசக்தி)


இருவரும் தனியாக சந்தித்திருந்தால் இக்காட்சி இவ்வளவு உணர்வுபூர்வமாக அமைந்திருக்காது. அந்த செல்லப்பிராணியும் அதை உமையாள் நடத்தும் விதமும் அச்சூழலை கூர்மையாக்குகிறது. அவர்களுடைய இறந்து போன மகனின் வெற்றிடம் ஒளிமிக்கதாகத் தோன்றுகிறது. இருவர் பேசுகையில் பின்னணியில் வரும் உயிர்கள், பொருள்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதென்பது திரைப்படக்கலையின் முக்கியமான உத்தி. ஷோபாசக்தி இந்நாவல் முழுக்க இப்படியான திரை உத்திகளை நிறைய பயன்படுத்துகிறார்

இன்னொரு விசயம் அந்த ஒளிப்பிராணி அவர்களுடைய மகனின் ஆன்மாவாகவும் இருக்கலாம்.

ஒரு காட்சியில் வெளியை, சூழலை, பொருட்களை எப்படி சரியாக பயன்படுத்துவது, பாத்திரங்களை எங்கே நிற்க வைப்பது எனில் பிளாக்கிங்கிற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கிறது.


கடைசியாக வரும் "பிள்ளைக்கறி" எனும் வசனம் நம்மை உலுக்கிப் போடுகிறது. ஆனால் அத்துடன் காட்சியைத் தறித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உமையாள் மனமுடைந்து "சந்நிதியானே" எனக் கேவுவதாக காட்சி முடிவது தேவையற்றது எனத் தோன்றுகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...