முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

கடந்த ஓராண்டு காலம் இந்திய கிரிக்கெட்டில் நடப்பன சில விசயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறது:

1) கடந்த 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளின் போது நாம் அணித்தேர்வு, திட்டமிடல், வீரர்களின் மேலாண்மை ஆகியவற்றில் பார்த்த குளறுபடிகளுக்கு ரவி சாஸ்திரியின் தலையாட்டி பொம்மை அணுகுமுறை, கோலியின் பொறுமையின்மை மட்டும் காரணமல்ல. அவர்களையும் தாண்டி இந்த இந்திய அணியின் மூத்த வீரர்கள், தேர்வுக்குழு அல்லது வேறெங்கோ ஒரு பிரச்சினை உள்ளது. அணித்தலைவரும், பயிற்சியாளரும் மாறினாலும் அடிப்படையான தவறுகள் மாறவில்லை.

2) இப்போதைக்கு உலகில் இந்தளவுக்கு நிலையற்ற குழப்பமான அணி வேறில்லை. உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு பண்ணின பிறகும் யார் முதற் போட்டியில் பந்து வீசப் போகிறார்கள், யார் உடற்தகுதியுடன் இருப்பார்கள் என்பதில் தெளிவில்லை. இதற்கு துரதிஷ்டம் மட்டும் காரணமில்லை - நிலையற்ற முடிவுகள், குழப்பமான சிந்தனை, பதற்றமான அணுகுமுறை ஆகியவனவே காரணம். அவ்விதத்தில் ரவி சாஸ்திரியை விட மோசமான பயிற்சியாளர் ராகுல் திராவிட் தான் என நினைக்கிறேன். சாஸ்திரி குடிகாரராக இருக்கலாம், ஆனால் திராவிட் குடிக்காமலே பயங்கர போதையில் தடுமாறுகிறவரைப் போன்று தான் அணியை நிர்வகிக்கிறார்.

3) கோலி அளவுக்கு இல்லையென்றாலும் நெருக்கடியை சமாளிக்கும் நிதானம், மனவலிமை ரோஹித்திடமும் இல்லை. கள அமைப்பில் அவர் ஒரு நல்ல தலைவர் தான். அதாவது எல்லாமே கச்சிதமாக இருக்கையில். ஆனால் அணியில் சிக்கல்கள் வந்தால், யாராவது காயம்பட்டால், வீரர்கள் தொடர்ந்து தவறுகளை இழைத்தால் ரோஹித் பத்தாவது மாடியின் படிக்கட்டில் தவறி உருண்டு போகும் மூதாட்டியைப் போல ஆகி விடுகிறார். இதை மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் வழிநடத்துகையில் கண்டோம். இப்போது இந்திய அணியிலும் காண்கிறோம்.

சுருக்கமாக இந்த அணியின் பிரச்சினையின் வேர் என்னவென எனக்குத் தெரியவில்லை. யார் வந்தாலும் போனாலும் ஒரே தவறுகளை மீள மீள நிகழ்கின்றன. ஒருவேளை 2011க்குப் பின்னர் வந்தவர்கள் அனைவரும் போய் ஒரு புத்தம் புதிய அணி வந்தால், இந்திய அணி தன் திறமையை முழுமையாக பயன்படுத்தி உலகக்கோப்பை ஒன்றை மீண்டும் வெல்லலாம். ஆனால் இந்த அணி தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடும் இயல்பு கொண்டது. இந்த டி20 உலகக்கோப்பை மட்டுமல்ல அடுத்தாண்டு இந்தியாவில் நடக்கிற 50 ஓவர் உலகக்கோப்பையிலும் இந்த அணி ஆட்டத்தின் கடைசி நாள் வரை பல குழப்படிகளை செய்து chokeஆகி தோல்வியை தேடித் தழுவப் போகிறது.

 நான் இன்றைய போட்டியை வைத்து சொல்லவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நடப்பவற்றை கவனித்தே சொல்கிறேன். ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் பிம்பத்தை நம்பாதீர்கள். நடக்கப் போகும் உலகக் கோப்பையில் முக்கியமான போட்டிகளில் சொதப்பப் போகிறார்கள். அடுத்தாண்டு உலகக்கோப்பையிலும் அதுவே நடக்கும். அதன் பிறகு புதிய அணித்தலைவர் வருவார், ஆனால் இந்த கோளாறுகளின் போக்கு மட்டும் தொடரும். ஆனால் நமது ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் வருமானத்திற்காக பில்ட் அப் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நம்பாதீர்கள்! ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளில் ஒன்றே அடுத்தடுத்த உலகக்கோப்பைகளை அடிக்கப் போகிறார்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...