முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சராசரி வேட்கை

 இவ்வருடத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ள அன்னி எர்னௌவின்சராசரி வேட்கைகுறுநாவலில் இருந்து முதல் அத்தியாயம்



சராசரி வேட்கை

- அன்னி எர்னௌ


இந்த கோடையின் போது, முதன்முதலாக, நான் கேனல் பிளஸ்ஸில் ஒரு -படத்தைப் பார்த்தேன். என்னுடைய தொலைக்காட்சியில் டீகோடர் கருவி இல்லை; பிம்பங்கள் கலங்கலாக இருந்தன, சொற்களின் இடத்தில் வினோதமான ஒலிவிளைவுகள், சீறலும் பிதற்றலும், ஒரு வித்தியாசமான மொழி, மென்மையாக  தொடர்ச்சியாக. கார்ஸெட்டும் ஸ்டாக்கிங்கும் அணிந்த ஒரு பெண்ணுருவம் தென்பட்டது, கூடவே ஒரு ஆணும். கதை புரியவில்லை; அவர்களுடைய செயல்களையும் அசைவுகளையும் கணிப்பது அசாத்தியமாக இருந்தது. அந்த ஆண் அப்பெண்ணிடம் நடந்து சென்றான். அப்பெண்ணின் பிறப்புறுப்பின் குளோசப் காட்சி வந்தது, திரையின் மினுமுனுப்பான அசைவுகளின் ஊடாகத் தெளிவாக அது தெரிந்தது, அதன் பிறகு அப்பெண்ணின் உறுப்பினுள் வழுக்கி நுழைகிற ஆணின் குறி, முழுமையாக விரைத்த நிலையில். ரொம்ப நேரமாக இந்த இரு பாலுறுப்புகளின் வருவதும் போவதும் பல்வேறு கோணங்களில் இருந்து காட்டப்பட்டது. அந்த குறி மீளத்தோன்றியது, அந்த ஆணின் கையில்; விந்து அப்பெண்ணின் வயிற்றில் சிந்தியது. இக்காட்சியைப் பார்த்துப் பார்த்து பழகிப் போகும் தான்; முதன்முறையோ அது உருக்குலைப்பதாகும். பல நூற்றாண்டுகள், பல நூறு தலைமுறைகள் கடந்து விட்டன, ஆனால் இப்போது தான் இதைப் பார்க்கக் கிடைக்கிறது - ஒரு ஆணின் குறியும் ஒரு பெண்ணின் யோனியும் ஒன்று சேர்வது, விந்து - மரண பயத்துடன் அல்லாமல் உள்வாங்க முடியாத ஒன்று இன்று கைகுலுக்குவதைப் போல பார்க்க எளிதாகி விட்டது.


எனக்குத் தோன்றுகிறது எழுத்தும் இதையே இலக்காக்க வேண்டும் என்று - பாலுறவின் மனப்பதிவு, பதற்றமான, மயக்கமான உணர்வுகள், ஒழுக்க மதிப்பீட்டின் செயலிழப்பு.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...