முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரண வீடுகள் - ஒரு முன்னேற்றம்

பாலு மகேந்திராவின் “கதை நேரம்” தொடரில் ஒரு குறும்படம்: நகரத்தில் ஒரு குடியிருப்பில் ஒரு சாவு விழுந்து விடும். மாடி வீட்டில் இருக்கும் குடும்பத்தில் மனைவி அன்று முழுக்க சமைக்க முடியாது என்று சொல்லுவாள். ஆனால் வெளியே போய் சாப்பாடு வாங்குவதென்றால் சிக்கல் சாவு வீட்டைக் கடந்து வருவது. அதனால் மொட்டை மாடியைத் தாண்டி பக்கத்து மாடியில் குதித்து என்னவெல்லாமோ பாடுபட்டு போலீசிடம் சிக்கி சாப்பாடு வாங்கப் போவான் கணவன். நான் ஊரில் இருக்கும் போது இந்தளவுக்கு கடுமையான தீட்டு பின்பற்றப்பட்டதில்லை. இருந்தாலும் துக்க வீட்டுக்குப் போனால் குளித்து விட்டு வருகிற நடைமுறை இருந்தது. நான் மட்டும் சின்ன வயதில் இருந்தே இதையெல்லாம் பின்பற்றியதில்லை. இதை மட்டுமல்ல எந்த சடங்கையும் நான் பின்பற்றிய நினைவில்லை. இப்போது எங்கள் வீட்டுக்கு மேலே உள்ள குடும்பத்தில் ஒருவர் மாரடைப்பில் இறந்து விட்டார்.

உள்ளூர்க்காரர். அதனாலே பெரிய கூட்டமே திரண்டு வந்திருக்கிறது. பெங்களூரில் முதன்முதலாக சத்தமாக ஒப்பாரிச் சத்தத்தைக் கேட்கிறேன். மரணத்தை நெருங்கும் ஒரு விலங்கு இடுவதைப் போன்ற ஓலம் அது. பாவமாக இருக்கிறது. பிணத்தை வைத்திருக்கும் ஐஸ் பெட்டி எங்கள் வீட்டு வாசலிலேயே இருக்கிறது. இந்த வீட்டுத்தொகுப்பில் உள்ளவர்கள் யாரும் சாப்பிட, புழங்க தயங்கவில்லை. இயல்பாக வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய குடும்பத்து முதிய பெண்மணி ஒருவர் கழிப்பறையை பயன்படுத்த எங்கள் வீட்டுக்குத் தான் வந்தார். எந்த சிக்கலும் இல்லை. இது ஒரு நல்ல முன்னேற்றம் தான் எனத் தோன்றுகிறது.
உடம்பில் உயிர் இருந்தாலும் இல்லையென்றால் அதில் என்ன தீட்டு வந்து விடப் போகிறது? மரணம் என்பது வாழ்தலின் ஒரு பகுதி அல்லவா? இந்த விசயத்தில் வந்துள்ள இயல்புத்தன்மை, நெகிழ்வு பாராட்டத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...