ஒரு மட்டையாளர் சிறந்த ஆட்டநிலையில் இருக்கும் போது அவர் எட்ஜ் வாங்கினால் அது பவுண்டரி போகும், அரைகுறையாக அடிந்த பந்து சிக்ஸர் போகும். ஆனால் மிக முக்கியமாக எவ்வளவு தவறுகள் பண்ணினாலும் அவுட் ஆக மாட்டார்கள். தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லருக்கு நடப்பதைப் போல. எத்தனை பந்துகள் கீப்பருக்கு எட்ஜ் கொடுக்காமல் தப்பித்தார். எத்தனை கேட்சுகள் களத்தடுப்பாளர்களுக்கு நடுவே போய் விழுந்தன. எத்தனை மூன்று கேட்சுகள் மேல் விட்டார்கள். அவராகவே மட்டையால் தன் குச்சிகளை போய் உடைத்தால் உண்டு. அவுட் ஆக வேறு வழியே இல்லை.
இப்போது அவர் ரயிலில் தலைவைத்தால் ரயில் பக்கத்தில் வந்து இறங்கி பக்கத்து தண்டவாளத்தில் செல்லும். லாரி முன்னால் பாய்ந்தால் லாரி பல்டி அடித்து அவரது தலைக்கு மேல் துள்ளி ஓடும். பத்தாவது மாடியில் இருந்து குதித்தால் ஒன்பதாவது மாடி ஜன்னல் வழியாகத் தவறி அங்கு பஞ்சு மெத்தையில் கிடக்கும் அழகியிந் மடியில் போய் விழுவார்.
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இருக்கலாம், ஆனால் டேவிட் மில்லருக்கு அதிர்ஷ்டமே வாழ்க்கை!
Comments