முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னது உனக்கு நான் இப்போ சாகணுமா?

War of the Roses படத்தில் வரும் ஒரு சிறப்பான காட்சி இது: நாயகனுக்கு உடல் நலமில்லாமல் போகிறது. சாகும் நிலை. ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போகிறார்கள். அவன் திரும்பத் திரும்ப என் மனைவிக்கு தெரிவித்து விட்டீர்களா எனக் கேட்கிறான். ஆஸ்பத்திரியில் நாங்கள் பலமுறை போன் செய்துவிட்டோம் என்கிறார்கள். சாகும் தறுவாயில் இருப்பதாக எண்ணும் அவன் அவளிடம் தன் காதலை, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக ஒரு குறிப்பை கடும் வலியின் இடையே எழுதுகிறான். ஆனால் அவள் வரவில்லை. அவன் தப்பித்து விடுகிறான். அவளோ கடைசி வரை அவனைப் பார்க்க வரவில்லை. வீட்டுக்குத் திரும்பிய பின்னர் நீ ஏன் வரவில்லை எனக் கேட்கிறான். அவள் காரணம் சொல்லவில்லை. பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின்னர் நள்ளிரவில் அவனை எழுப்பி காரணத்தை சொல்கிறாள்: "நீ செத்து விடுவாயோ என எண்ணிய போது சட்டென ஒரு பயம் ஏற்பட்டது. அப்படியே நின்றுவிட்டேன். மிக சுதந்திரமாக நான் இருக்கப் போவதான எண்ணத்தில் உறைந்து போய் விட்டேன். தாள முடியாத சந்தோஷம். அதனாலே வர முடியவில்லை." அவன் அதிர்ச்சியில் குழம்பிப் போகிறான்.

இது ஒரு கூர்மையான அவதானிப்பு. பெண்கள் நெடுங்காலம் ஒரு ஆணுடன் வாழும்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. ஒரு சில பத்தாண்டுகளிலோ சில ஆண்டுகளிலோ அவர்களுக்கு மூச்சுத்திணற ஆரம்பிக்கிறது. அவர்கள் விடுதலைக்காக தவிக்கிறார்கள். பிரச்சினை பல சமயங்களில் குடும்பத்தில் மட்டும் இருக்காது. அது இயற்கையின் விழைவு. நமது மரபான குடும்ப அமைப்பு அண்மைக்காலம் வரை அவர்கள் மீது கடும் சமூகப்பொருளாதார,பண்பாட்டு அழுத்தங்களை சுமத்தியதால் மட்டும் ஒரு ஆணுடன் தம் வாழ்வை வாழ்ந்தார்கள். ஆனால் இயற்கை பெண்ணுடலை அப்படி அமைக்கவில்லை. ஆண்களுக்கு உள்ளதைப் போல நீடித்த இளமையும் குழந்தை பெறும் வளமையும் பெண்களுக்கு இல்லை. நவீன சமூகத்தில் முப்பது வயதிற்கு மேல் midlife crisis இப்படியே தோன்றுகிறது. கூடுதலாக வேறு இணைகளை அடைந்து பிள்ளை பெற வேண்டும் என வனத்தில் வாழ்கையில் ஒரு ஆதிப்பெண்ணுக்குத் தோன்றியிருக்குமெனில் நவீன பெண்ணுக்கு தன் அடையாளத்தைக் கண்டடைய வேண்டும், அதன் வழி காலத்தில் அனந்தரமாக வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது. அதனாலே கணவனின் இருப்பு - குழந்தைகள் அல்ல - அவளுக்கு பெரும் மன உளைச்சலைத் தருகிறது. ஒரு பெரும் பாரம் தம்மை அழுத்துவதாகத் தோன்றுகிறது. அவன் செத்து ஒழிய மாட்டானா என அவள் ஆழ்மனம் ஏங்குகிறது.
இந்த படக்காட்சியில் அதுதான் வருகிறது.
நேற்று ஒரு யுடியூப் காணொளியைப் பார்த்தேன். கவிஞரும் மருத்துவருமான பிரபு திலக்கை அவரது மனைவி பொதுவெளியில் தாக்கியது, அவருக்கு. விஷம் கொடுக்க திட்டமிட்டது (ஆர்ஸெனிக் கலந்த ஒரு மருந்து), மாமியாரும் எழுத்தாளருமான திலகவதிக்கு எதிராக ஐ.பி.ஸி 498A வில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்தது போன்ற கொடுமைகளைப் பற்றி பேசியிருந்தார்கள். அந்த பெண்ணின் பிரச்சினையும் இதில் வரும் பார்பராவின் பிரச்சினையும் ஒன்றும். எத்தனையோ மணமான பெண்களின் பிரச்சினையும் ஒன்று தான். அவர்கள் அடக்கிக் கொண்டு எப்படியோ வாழ்கிறார்கள். 

அதனாலே இந்த திருமண அமைப்பு செயற்கையானது, ஆபத்தானது என்கிறேன். பெண்கள் கூட நினைத்தால் தப்பித்து விடுவார்கள். அவர்கள் தமது சமிக்ஞைகளை நுட்பமாக வெளிப்படுத்துவார்கள். அது ஆணுக்கு சுலபத்தில் புரியாது. அப்போதே அவனை ஒன்று கொல்ல வேண்டுமென்றோ வேறுவழிகளில் அவனை வதைத்து நடுத்தெருவில் நிறுத்த வேண்டுமென்றோ நினைப்பார்கள்!புரிந்த ஆண்கள் ஆண்கள் தப்பிப்பார்கள்!  அதிர்ஷடசாலி ஆண்களும் தப்பிப்பார்கள்.
மற்றவர்களின் கதி?

யுடியூப் லிங்க்: https://youtu.be/yNg2IJYt0mY

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...