"கால்களின் கேள்விகள்" நூலின் முதற்பதிப்பு தீர்ந்து விட்டதென அறிந்து மகிழ்கிறேன்!
நான் இவ்வருடத்திற்கான நூல்களை தயார் பண்ணும் போது உயிர்மையில் வெளிவரப் போகும் நூல்களில் மோடி குறித்த நூலே கவனம் பெறுமென நினைத்தேன். மாற்றுத்திறனாளிகள் குறித்த விவாதங்களில் அக்கறை செலுத்துவோர் மிகவும் குறைவு என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நிகழ்ந்துவிட்டது. இந்த புத்தகத்தில் உள்ள உணர்வெழுச்சியான, அந்தரங்கமான பகுதிகள், இதன் கோபம், இதிலுள்ள தனித்துவமான பார்வை வாசகர்களை கவர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். மேலும் தமிழ் பிரபா கொடுத்த அற்புதமான அறிமுகம், வாசகர்களின் பரஸ்பரம் வாய்வழி பரிந்துரை இந்நூலை பரவலாக கொண்டு போயிருக்கிறது. இத்தனைக்கும் நான் போதுமான அளவுக்கு புரொமோட் பண்ணவில்லை (என்னுடைய நாவலை முடிப்பதில் ஆழ்ந்து விட்டேன்), எந்த இதழிலும் இதற்கு விமர்சனமோ அறிமுகமோ வரவில்லை. (என் நாற்பத்து சொச்ச நூல்களில் ஒன்றை கூட் நமது பத்திரிகைகள் கவனப்படுத்தியதில்லை.) அனைவருக்கும் நன்றி!
Comments