முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போலிகளால் ஆனது உலகம்

 மதன் - வெண்பா ஸ்டிங்கில் அம்பலமானவர்களைப் பார்க்கையில் அவர்களே நம் காலத்து நாயகர்கள் என்று தோன்றுகிறது.

 உள்ளீடில்லாதவர்களின் காலம் இது. இன்றைய யுகத்தில் இவர்களே வெற்றியாளர்கள், எழுதவும் சிந்திக்கவும் தெளிவாகப் பேசவும் தெரிந்தவர்கள் முட்டாள்கள். இதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஒரு டீக்கடைப் போய்இந்தாப்பா நூறு கிராம் நேர்மை, ஐம்பது கிராம் அறிவு, வடைக்கு காசா? இந்தா நூறு கிராம் சித்தாந்தம்என்று சொன்னால் செருப்பால் அடிப்பார்கள். மேலும் மக்கள் இந்த நேர்மை, கீர்மை, அறம், முறத்தில் எல்லாம் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.


நான் பதினாறு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். நாற்பதுக்கு மேல் புத்தகங்கள் போட்டிருக்கிறேன். இருபதாண்டுகளுக்கு மேலாக பல இடங்களிலாக வேலை செய்து வருகிறேன். எனக்கு இந்த சமூகம் கொடுத்ததென்ன? அண்மையில் நடந்த சட்ட சோதனைகளில் நான் என் அம்மா எனக்குப் போட்ட நகைகளை மொத்தமாக  இழந்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளாக உழைத்தும் என்னால் சொந்தமாக ஒரு பைக் வாங்கக் கூட முடியவில்லை (அதுவும் வங்கிக்கடன் தான்). மாதாமாதம் வாங்க வேண்டிய இன்சுலினை வாங்கப் போனால் மொத்தமாக 4000 போய் விடுமே என எண்ணி மருந்தகம் போவதையே தவிர்க்கிறேன். சம்பளம் வந்ததும் பாதி (வழக்கை சமரசம் பண்ணி முடிக்க எடுத்த வங்கிக்கடனின்) .எம்.ஐயிலும் மீதியில் ஒரு பாதி வாடகையிலும் போய் விடுகிறது. ஏனென்றால் நான் இத்தனைக் காலமாக தவறாக வாழ்ந்திருக்கிறேன். திடீரென நோய்வாய்ப்பட்டாலும் நான் மருத்துவமனை செலவுக்கு கடன் தான் வாங்க வேண்டும். இது என் நிலைமை தான் என்றில்லை, என்னைப் போல பலரை இன்று எனக்குத் தெரியும்.


முன்பு மனிதர்கள் ஒரு முகதாட்சியத்துக்காக அன்பு காட்டினார்கள், நம்மைப் பாதுகாத்தார்கள், இன்று பணமில்லையென்றால் அவர்கள் நம்மைவிட்டு விலகி விடுவார்கள். அது மட்டுமல்ல ஒரு சட்டபிரச்சினை என்று வந்துவிட்டால் ஒட்டுமொத்த கூட்டமும் நம்மை விட்டு ஓடிவிடுவார்கள் என்பதையும் என் அனுபவத்தில் கண்டேன். ஆனால் பணம் இருந்தால் ஜெயிலுக்குப் போவது கூட ஒரு பிரச்சினை அல்ல, அலுங்காமல் குலுங்காமல் அதை சமாளிக்கலாம் என இந்த 2க் கிட்ஸ் யுடியூபர்கள் நமக்கு காட்டித் தந்தார்கள். இவ்வளவு வசதியாக இல்லாவிடில் இந்நேரம் இந்த கும்பல் ரோட்டில் நின்றுகொண்டிருக்கும், குழந்தை குட்டி எல்லாரும் பத்திவிடுவார்கள்.

 ரவீந்திரன் துரைசாமியைப் போல் இருந்தாலே குடும்பம், சுற்றம், நண்பர்கள் எல்லாரும் நம்மை மதிப்பார்கள். நாம் இத்தகையோரைக் பார்த்து கற்றுக்கொண்டு வளர வேண்டும்


ரவீந்திரன் துரைசாமி அந்த சின்ன நகை டப்பாவை ஒரு குழந்தையை ஏந்துவதைப் போல எடுத்து திறந்து பார்க்கையில் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டதே அதை மறக்க மாட்டேன். எனக்கு சற்று மகிழ்ச்சியும் தோன்றியது. மனிதர் நன்றாக வாழட்டும் என வாழ்த்தினேன்.


 ஐயப்பன் ராமசாமி, மாதேஷ், சவுக்கு போன்றோர் ஊரை ஏமாற்றினார்கள் தாம், ஆனால் யார் உங்களை ஏமாற சொன்னது? சும்மாவா சொன்னார்கள் இந்த உலகில் ஏமாற்றுகிறவன், ஏமாறுகிறவன் என ரெண்டே தரப்பு தான் என. இந்த யுகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும். ரவீந்திரன் துரைசாமி சொல்வதெல்லாம் அபத்தம் என்றாலும் அறிவு, சித்தாந்த உணர்வு எல்லாம் முக்கியம் அல்ல என்று அவர் நம்புவது சரி என்று இப்போது தோன்றுகிறது. ஐயப்பன் ராமசாமியைப் போன்றோர் பத்தாம் வகுப்பைத் தாண்டி படிக்காதவர்கள், நாலு வார்த்தை ஒழுங்காக பேசவோ எழுதவோ தெரியாதவர்கள். கிஷோர் கெ ஸ்வாமியை நான் ஒரு காலத்தில்என் வீட்டில் வந்து செல்ல நாயாக இருந்துக்கட்டும் அவர், அவரை சிறைக்கெல்லாம் அனுப்பாதீங்கஎன்று கலாய்த்திருக்கிறேன். அவரே இத்தனை ஊடகவியாளர்களை ஒருங்கிணைக்கும் டான் எனப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. யோவ், என்னை மன்னிச்சிக்கய்யா. என் வீட்டுக்கு வந்து என் குருநாதராக இருந்துக்கோ.



வேலூர் இப்ராஹிம் நாமம் வாழ்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...