முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எவண்டா எனக்கு கஸ்டடி?

நான் பிறந்து நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. நான் என் சிறுவயது முதல் இன்று வரை என் நண்பர்கள் வட்டாரத்தில், உறவுகள் இடையே, வேலையிடங்களில், நான் வசித்த தெருக்களில், குடியிருப்புகளில் பார்க்காமல் தவறிய ஒரு சங்கதி இந்தநீதிஅல்லதுஅறத்தைதான். என் கண்களில் இதுவரை படாத அது தினமும் உங்கள் கண்களில் மட்டும் படுகிறது (என் கண்களையும் சோதித்துப் பார்த்துவிட்டேன்.) ஆனால் அதை இலக்கியம், சினிமா, நண்பர்களுடனான உரையாடல்களில் நான் அதிகமும் அதைப்பார்த்திருக்கிறேன்’. அவர்கள் எப்படி அதைப் பார்த்தார்கள் என்று கேட்டால் சில சம்பவங்களை சொல்வார்கள். ஆனால் அந்த சம்பவங்களில் நீதி / அறம் இருப்பதாக அவர்கள் அர்த்தப்படுத்தி இருக்கிறார்களே ஒழிய எந்த சான்றையும் கண்டதாக சொல்ல முடியாது

முதலில் எதிர்மறை நீதியைப் பார்ப்போம். உங்களை ஒருவர் அநியாயமாகத் திட்டிவிட்டு போகும் போது தடுக்கி விழுந்து அவர் பாட்டுக்கு எழுந்து குண்டியைத் தட்டிவிட்டுப் போகிறார் என்றால்பார்ரா என்னைத் திட்டினேல்லா அதனால் விழுந்து வாரினே…” என்று பொருள்படுத்துவதைப் போலத்தான். அவர் கவனிக்காமல் போனார், விழுந்தார். மிக மோசமாக நம்மிடம் நடந்து கொண்ட குரூரமான ஒருவருக்கு மாரடைப்பு வந்து இறந்து போனால், அல்லது வாழ்வில் பல தோல்விகளைக் கண்டு காணாமல் போனால்கடவுள் இருக்கிறான்யாஎன்றோ, ‘கொஞ்ச நஞ்சமா அநியாயம் செஞ்சான்என்றோ நண்பர்களோ சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். இந்த சம்பவங்களுக்கு என்று சில காரணிகள் (நாகார்ஜுனர் சொல்லும்நிபந்தனைகள்’) இருக்கும் - உடலில் அதுவரை ஏற்பட்டு வந்து மாற்றங்கள், வாழ்க்கைச்சூழலில் நேர்ந்த எதிர்பாரா சிக்கல்கள், அவர் எடுத்த சில தவறான முடிவுகள். இந்த காரணிகளே ஊழின் உருவங்கள் என்றால் இப்படியான பிரச்சினைகளையும், மாற்றங்களையும் சந்திக்கும் நல்லவர்கள் பலரை எப்படிப் புரிந்து கொள்வது? “நான் வாழ்க்கையில யாருக்கும் எந்த துரோகமும் பண்ணலையே, எனக்கு ஏன் இப்படி?” எனப் புலம்பும் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம். இவர்களை ஏன் கொடுங்கூற்று வந்து அள்ளையில் மிதிக்கிறது? இவர்களுக்கும்அறத்துக்கும்எதாவது தனிப்பட்ட பஞ்சாயத்தா


நான் என் மகனைப் பார்த்து ஆறாண்டுகள் ஆகின்றன. நான் அவனைக் கூட இருந்து வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் தொலைவில் இருந்து பார்க்கக் கூட கிடைக்கவில்லை. நான் செய்தபாவம்’, ‘அநியாயம்என்ன? நான் என்ன அடுத்தவர்களின் குழந்தைகளை பறித்துவிட்டேனா? நான் சட்டத்தின் கதவுகளை தொடர்ந்து தட்டிக்கொண்டிருந்தால் ஒருநாள் எனக்கு கதவு திறக்கும். அவனை மாதத்திற்கு சில மணிநேரங்கள் பார்க்க ஏற்பாடு செய்வார்கள் என அறிவேன். ஆனால் அது என் முயற்சி. அதன் பெயர் அறம் அல்ல. அறம் என்றால் வானத்தில் இருந்து குதித்தோ மானுட பிரவாகத்தில் இருந்துஜெய்பீம் சூர்யாவோ’ ‘அயோத்தி சசிகுமாரோவெளிப்பட்டோ என் குழந்தையை என்னிடம் தர வேண்டும்.


என்னுடைய உறவுகளில் அந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடவில்லை. இருபது சொச்சம் குழந்தைகளை வைத்துக் கொள்ளுங்கள். என் ஊரில் அந்த வருடத்தில் மட்டும் அப்படி ஊசி போடப்படாத நூற்றுக்கணக்கான குழந்தைகள் இருப்பார்கள். அவர்களில் யாருக்குமே வராத போலியோ எனக்கு மட்டும் வந்தது. எனக்கும் போலியோ கிருமிக்கும் எதாவது பஞ்சாயத்தா? அல்லது நான் பிறக்கும் முன்னர் நிறைய அநீதிகளை செய்தேனா? பிறக்காத ஒருவன் எப்படி செய்ய முடியும்? அல்லது பிறந்த முதல் ஆறுமாதங்களில் நானாக தவழ்ந்துபோய் பலருக்கும் தீமை செய்துவிட்டேனா?


சரி எனக்கு நடந்தது ஒரு விபத்து என்றால் மற்றவர்களுக்கு (அநீதியாளர்களுக்கு) நடக்கும் தீமைகள் மட்டும் ஏன் விபத்தல்லாமல் நீதிதேவனின் தண்டனையாக இருக்கின்றன? இல்ல, எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்குங்கள்


அடுத்து, நேர்மறையானஅறத்துக்குவருவோம். நான்  பிறந்து இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் ஒன்று என் பெற்றோரோ அல்லது நானாகவே தான் செய்துகொண்டிருக்கிறேன். சரி நான் தான் சனியன் பிடித்தவன், என் பக்கமேஅறம்வரவில்லை என்றால் என்னைப் போன்ற வேறு மாற்றுத்திறனாளிகள் பக்கமாவது அது அடியெடுத்து வைத்திருக்க வேண்டுமே. ம்ஹும். யார் பக்கமும் போனதாகத் தெரியவில்லை. ஆனாலும் நான் சிறுவயது முதலே மனிதர்கள் பரஸ்பரம் விழுந்துவிழுந்து உதவுவதாக, தியாகங்கள் செய்வதாக, கருணை ரோட்டில் நதியாக பெருகி ஓடுவதாக எழுதப்படும் கதைகளை, கவிதைகளை, சினிமாக்களை பார்க்கிறேன், மக்கள் அப்படி என்னைச் சுற்றி பேசுவதைக் கேட்கிறேன், உடனே நானும்எங்கே எங்கே?” எனத் தேடுகிறேன். காணவில்லை


சரி உதவுகிறவர்களே இல்லையா? இருக்கிறார்கள். ஆனால் உதவி என்பது நம்மூரில் ஒரு கொடுக்கல் வாங்கலாகவோ அல்லது நிபந்தனைக்குட்பட்ட செயலாகவோ இருக்கிறது. சிலர் நம்மிடம் பணம் வாங்கி ஒரு வேலையை செய்து தந்துவிட்டு தான் ஒரு சேவையை செய்ததாகப் பெருமைப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அல்லது நீங்கள் ரோட்டில் தவறி விழுந்தால் யாரோ தூக்கி விடுவார்கள். இதன் பெயர் தான் நீதியா? இதன் பெயர் உதவி. நீங்கள் மிருகங்களையும் பறவைகளையும் கவனித்தால் அவை பரஸ்பரம் உதவுவதைப் பார்க்கலாம். அது சமூகமாக்கலின், சமூக ஒத்திசைவின் பகுதி. அது ஒரு உளவியல். இந்த ஊரில் பசித்தவர்களுக்கு சோறிடுவோருக்குப் பின்னாலும் இப்படியான் ஒரு உளவியல் தேவை இருக்கிறது, பணம், சமூக நிலை போன்ற சங்கதிகள் இருக்கின்றன. ஆனால் அதை மறைத்துவிட்டு தம்மை சேவை செய்வோராக காட்டிக்கொள்ளவே பிரியப்படுகிறோம்


ஊரில் சிலருக்கு நேரமும் அடிப்படை வசதிகளும் இருக்கும் போது தேவைப்படுவோருக்கு உதவுவார்கள். அதை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களுடைய வாழ்க்கைச்சூழலில் சின்னஞ்சிறு மாற்றங்கள் வந்தால் தம் வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். சென்னை வெள்ளத்தின் போது சில நூறு பேர்கள் வீடுவீடாகப் போய் உதவியதையும் இப்படியே பார்க்கிறேன். நூறு நூறு நிபந்தனைகளுடன் தான் இங்கே சின்னச்சின்ன பூக்கள் பூக்கின்றன. நாம் அந்த பூக்களையே பார்த்துக்கொண்டு நின்று விடுகிறோம்.


அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஒருவர் பத்தாண்டுகளாக தினமும் இரவில் பிட்ஸா ஆர்டர் பண்ணி வாங்கி சாப்பிடுகிறார். ஒருநாள் திடீரென அவர் ஆர்டர் பண்ணவில்லை. அடுத்தடுத்த நாட்களும் அவரிடம் இருந்து சலனம் இல்லை. என்னடா நம்ம ரெகுலர் கஸ்டமர் ஆச்சே என பிட்ஸா கம்பெனிக்காரர்கள் அவரை அழைத்துப் பார்த்தால் அவர் வீட்டுக்குள்ளே செத்துக் கிடக்கிறார். இதை அக்கம்பெனியின் நீதியுணர்வு என்று சொன்னால் அவன் முட்டாள்.


அமெரிக்காவில் வீடற்றவர்கள் பற்றி ஒரு ஆவணப்படம். வீடற்ற ஒரு முதியவர் தினமும் மாலை ஒரு பீட்சா கடைக்கு சென்று அங்கு மீந்து போகும் பீட்ஸாவை அவர்கள் பேக் பண்ணித் தர வாங்கிக்கொண்டு வந்து தன்னைப் போன்ற வீடற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். உங்களுக்கு இது மனிதநேயமாகத் தெரிந்தால் நீங்கள் ஒரு வளர்ந்த குழந்தை. கம்பெனிக்கு இது விளம்பரம், இலவச சமூகசேவை, குப்பையை கிளியர் பண்ணுதல். அவருக்கு அது இலவச உணவு மற்றும் சமூகமாக்கல் (அதை அவர் தினமும் சற்று அவமானத்துடன் போய் நின்று வாங்க வேண்டும். அவருடன் அதைப் பகிர்ந்து கொள்வோர் ஏதோ ஒரு கூச்சத்துடன் சிரித்துக்கொண்டு உண்ண வேண்டும்.) 


நிபந்தனைக்கு உட்பட்ட நீதி என்றால் ஒரு வரைமுறை அமைத்துக்கொண்டு அறத்துடன் நடந்துகொள்வது - உதாரணத்துக்கு, ஒருவருக்கு குழந்தை இருக்காது, உறவுக்குள் ஒரு குழந்தை அனாதையாகி விடும், இவர் அக்குழந்தையை எடுத்து வளர்ப்பார். (கொடுக்கல் வாங்கல்) அவர் அதை ஒரு தியாகம் என்றும் கோரிக்கொள்வார். அல்லது நிறைய பணம் இருந்தால் தன்னுடைய பிற குழந்தைகளுடன் இக்குழந்தையையும் வளர்ப்பார். பணம் இல்லாவிட்டால் செய்ய மாட்டார். (நிபந்தனை) நீங்கள் எல்லாரும் அவ்வளவு பெரிய அறவாழிகள், நீதியாளர்கள் என்றால் ஏன் இத்தனை அனாதை இல்லங்கள் இருக்கின்றன? ஏன் இத்தனை பேர் பிச்சைக்காரர்களாக, கையேந்துவோராக இருக்கிறார்கள்? ஏன் நம் பொருளாதார அமைப்பே அசமத்துவத்தை ஏற்படுத்துவதாக இருந்தும் நாம் அதை ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம்? ஏனென்றால் நமக்கு நீதி / அறம் குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லை. ஆனால் நமக்கு அந்த முகமூடி தேவைப்படுகிறது


சரி வலதுகை கொடுத்ததை இடது கைக்குத் தெரியாமல் கொடுத்தவர்களும் உண்டே? ஆம் நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களும் சில நிபந்தனைகள் வைத்திருப்பார்கள். உதவி பெறுவதன் அவமான உணர்வை அதை அனுபவிப்பர்களே அறிவர். மேலும் கொடையாளர்களுக்கு அப்போது ஓரளவுக்கு பணவரவு இருக்கும், அல்லது தம் நண்பர்களிடம் கேட்டு வாங்கிகொடுப்பார்கள், அவர்களுக்கு அது ஒரு ஜிவ்வென்ற உணர்வைக் கொடுக்கும். தொடர்ச்சியாக கொடையளிப்பதன் பின் ஒரு தீவிரமான அகந்தையும் கழிவிரக்கமும் இருக்கிறது. சிலரிடம் பணமிருந்தாலும் கொடையளிக்காதது அவர்கள் ஒன்று சமூகமாக்கலில் விருப்பமில்லாத மூடுண்டவர்களாகவோ அதற்கான உளவியல் தேவை இல்லாதவர்கள் என்பதே.



என் நண்பர் ஒரு கதை சொன்னார். தமிழில் ரொம்பத் தீவிரமாக அறம், அறம், கருணை, அழகு, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என தழுதழுக்க எழுதும் ஒரு முக்கிய எழுத்தாளர். நண்பர் இன்னொரு நண்பரையும் அழைத்துக்கொண்டு இந்தஅன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழைஒருநாள் காலையில் அவரது வீட்டுக்குப் போய் பார்த்திருக்கிறார். அவரோஎப்படி என் அப்பாயின்மெண்ட் இல்லாம என்னைப் பார்க்க வரலாம்?” என்று கோபமாகக் கேட்டு வாசலோடே அனுப்பிவிட்டார். நண்பர் தான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே பல நாட்கள் ஆயின என்றார். ஆனால் அந்தஅன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்செய்ததும் சரிதானே? அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்க வேண்டா? அன்புக்கும் இல்லையோ அப்பாயின்மெண்ட்? அறத்துக்கும் இல்லையோ டைம் மேனேஜ்மெண்ட்? அவர் மனிதநேயமும் அழகும் பேரன்பும் ஒரு நீர்க்குமிழியில் பிரதிபலிக்கிற கதையையோ கவிதையையோ எழுதும் நேரத்தில் போய் வாசல் மணியை அடித்துநான் தான் மாது வந்திருக்கேன்என்றால் கடுப்பாக மாட்டாரா? அகத்தூண்டுதல் என்னவாவது? மனநிம்மதி என்னாவது? ஆனால் நீங்கள் என்னை அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் பார்க்க வந்தால் நான் உங்களை வாசலோடு திட்டி அனுப்ப மாட்டேன். என்னதான் பிஸியாக இருந்தாலும் உட்கார வைத்து அரைமணிநேரமாவது பேசி - வீட்டில் அப்போது அதற்கான வசதி இருந்தால் - தேநீர் அளித்து விட்டே அனுப்புவேன். ஏனென்றால் நான் மனிதநேயன் அல்ல. ஏனென்றால் நான் காருண்யத்தின் சமுத்திரம் அல்ல. ஏனென்றால் நான் அன்பின் பேராழி அல்ல. ஏனென்றால் நான் மனித சமூகத்தில் வாழும் ஒரு மிருகம். மிருகங்கள் பண்பானவை.ஒரு நாய் என் வீட்டுக்கு வந்தால் என்னுடைய நாய் அதை கண்ட இடத்தில் எல்லாம் முகர்ந்து பார்த்து சில குரைகள் குரைத்து, சில நேரங்கள் தன் பொம்மையை வைத்துக் கூட விளையாட அனுமதித்து வரவேற்றுஇந்த எல்லையைத் தாண்டி நீயும் வரக் கூடாதுஎன நிபந்தனைகள் போட்டு வரவேற்பதை பார்த்திருக்கிறேன். என்னுடைய நாய் அதுவே நீதி, மானுட அறம், அன்பின், அன்பின் பேரன்பு என்றெல்லாம் உரையாற்றி நான் பார்த்ததில்லை. அடிப்படையான சமூகமாக்கல் நெறி எனும் அளவிலே நாங்கள் இதை செய்கிறோம்.  


நீங்கள் மட்டுமே ஒரு குருவியைக் காப்பாற்றினாலோ அழும் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கித் தந்தாலோ அதை அறம் என்று சொல்கிறீர்கள். நானும் பிற விலங்குகளும் அதை எளிய சமூகமாக்கலாக, ஒத்திசைவாகவே பார்க்கிறோம்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...