முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்மூர் ஹக்கீமிக்கள்




மொரோக்காவில் ஒரு சட்டம் இருக்கிறது போலும் - விவாகரத்தின் போது கணவனின் சொத்தின் பாதி மனைவிக்கு போய் விடும். அதில் இருந்து தப்பிக்கும் நோக்கிலோ என்னவோ அந்நாட்டு கால்பந்தாட்ட வீரர் அச்ரப் ஹக்கீமி தன் சொத்துக்களை தம் அம்மா பெயரில் எழுதி வைத்துவிட்டார். அவரது மனைவி விவாகரத்து கோரிப் போனால் இந்த செய்தி தெரிய வர அதிர்ச்சியாகி விட்டார். இதைப் பல நண்பர்களும் என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நான் சொல்லிக்கொள்வது இந்தியாவில் இந்த சட்டத்தை கொண்டு வர காங்கிரஸ் அரசு 2010-11ஆம் கட்டத்தில் முயன்றது, ஆனால் பா.சிதம்பரம் உள்ளிட்டோர் முயன்றதால் கைவிட்டது என்பதே. 2015இல் மீண்டும் பெண்ணிய குழுவினர் மோடியை சந்தித்து இச்சட்டத்தின் 'பல பயன்களை' விளக்கி இதை கொண்டு வர தூண்டினர். ஆனால் அவர்களை அடித்து பத்தி விட்டார். மோடி செய்ததில் எனக்குப் பிடித்த ஒரே காரியம் இது தான். ஆனால் இந்த சட்டம் வராமல் போனது பெண்களை விட வக்கீல்களுக்கே பெருத்த நட்டம் - செட்டில்மெண்டிலே 10% வாங்குபவர்கள் சொத்தில் வாங்காமலா இருப்பார்கள்? 10 கோடி வரக்கூடிய சொத்தில் 10% எவ்வளவு வரும்? சரி அவ்வளவு தர மாட்டேன் என்றால் கூட 3-5% வாங்காமல் டீலிங்கை முடிப்பார்களா? ம்ஹும்! ஆனால் என்ன பிரச்சினை என்றால் இவர்களுடைய மகன்களும் பாதிக்கப்படும் போது இவர்களுக்கு டவுசர் கழன்று போகும். அப்போதுதான் வலி புரியும்.


ஆனால் இச்சட்டத்தை இப்போதுள்ள ஜீவனாம்ச சட்டத்தின் ஒரு கொடூரமான வடிவம் என்றே கருத வேண்டும் - ஜீவனாம்சம் என்பது படிப்பறிவில்லாத, வேலைக்கு போய் சம்பாதிக்க வழியில்லாத பெண்களுக்கு நியாயமாக தேவைப்படுவது. ஆனால் அதை அதிகமாக பெறுவது ஆண்களுக்கு சமமாக படித்து வேலைக்கும் செல்லும் பெண்களே என்பது எதார்த்தம். அதற்கு சட்டம் கூறும் நியாயம் விவாகரத்தின் பின்பும் அப்பெண்ணின் வாழ்க்கைத் தரம் குறைந்து விடக் கூடாது என்பது. ஏன் அதில் சட்டத்துக்கு அவ்வளவு அக்கறை? ஏன் ஆணின் வாழ்க்கைத் தரம் பற்றி அக்கவலை இல்லை? வேலை போனால் நம் வாழ்க்கைத்தரம் தவிடுபொடியாகிறதே? நிறைய பேர் தற்கொலை பண்ணுகிறார்களே. ஏன் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் இவர்களுக்கு அரசோ தொழில்நிறுவனமோ சம்பள இழப்பீட்டை மாதாமாதம் அளித்து வாழ்க்கைத்தரம் மாறாமல் பார்க்க வேண்டும் எனக் கோருவதில்லை? ஏன் மனைவியைப் பற்றி மட்டும் ஒரு குடும்ப நலச் சட்டம் கவலைப்படுகிறது? ஏனென்றால் எக்காரணம் கொண்டு அம்மனைவி குடும்ப உறவுக்குள் நீடிக்கும்நிலைவரக் கூடாதாம்இன்னும் நேரடியாக சொல்வதென்றால் மனைவிக்கு சிறு மனக்கசப்பு ஏற்பட்டாலும் அவர் குடும்பத்தை உடைத்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டுமாம். ‘வெளியே வந்து நாம் வேலை பார்த்து கஷ்டப்படணுமே, இப்போ கணவன் சம்பளத்தில் வசதியாக வாழ்கிறோமேஎனும் எண்ணத்தில் அவர்கள் மணவாழ்க்கைக்குள் நீடிக்கலாகாதாம்! ஏன் நீடித்தால் என்னவாம்? குறைந்த நஷ்டத்தை விடுத்து அதிக லாபத்தை நாடுவதும், சகிப்பதும் தானே மனித வாழ்க்கை? வேறொன்றுமில்லை, இப்பெண்கள் வெளியே வந்தாலே அதிகமாக துய்ப்பில், பண்ட நுகர்வில் ஈடுபடுவார்கள், தாராளவாத சந்தை வளரும். ஆக, இது முழுக்க முழுக்க ஒரு பொருளாதார சதித்திட்டம் மட்டுமே. பெண்ணுக்கு கணவனின் சொத்தில் பாதியைக் கொடுத்தாலும் அவள் அதை வைத்து கூடுதலாக செலவு பண்ணுவாள், எதாவது ஒரு வியாபாரத்தை கூட ஆரம்பிக்கலாம், இதுவும் சந்தைக்கு நல்லதே. ஆனால் சட்டம் இந்த சந்தைப் பொருளாதார வளர்ச்சி நோக்கத்தை ஒரு சமத்துவ, தர்மம், நியாயம் சார்ந்த ஒரு உயர்நோக்கமாக சித்தரித்து நாடகம் போடுகிறது. சில வக்கீல்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் இதில் பொருளாதார லாபம் உள்ளதால் அவர்கள் இச்சட்டத்தை ஆதரித்து ஜால்ரா அடிக்கிறார்கள். சோழியன் குடுமி சும்மாவா ஆடும் என்பது வேறு யாரையும் விட இவர்களுக்கே அதிகம் பொருத்ந்தும்.


 உலகம் முழுக்க இதுவே நடக்கிறது. நல்லவேளை இந்தியாவில் இச்சட்டம் இன்னும் வரவில்லை


முற்போக்கு எனும் பெயரில் இயற்றப்படும் இம்மாதிரி போலி 'சமத்துவ' அசமத்துவ சட்டங்கள் மக்களை பல அபத்தங்களை செய்ய வைக்கிறது: நியாயமாக சம்பாதிப்பதைக் கூட சொந்த பெயரில் வைத்துக்கொள்ள விடாமல் செய்கிறது. கறுப்பு பணப்பரிமாற்ற வளர்ச்சிக்கு காரணமாகிறது. எப்போதும் சொந்த மனைவியை சந்தேகிக்க செய்கிறது


கடந்த ஆண்டு வட இந்தியாவை, பெங்களூரில் வாழ்ந்துவந்த என் தோழி ஒருவர் வணிகரான தன் கணவரை விவாகரத்து பண்ணப் போவதாக சொன்னார். அதற்காக ஆவேசமாக மும்பைக்கு போனார். போனவர் அதன் பிறகு சட்டென முடிவை மாற்றிக்கொண்டார். என்ன காரணம்? கணவரின் சொத்துக்கள் வரி ஏய்ப்புக்காக உறவினர்கள் பெயரில் பதிவாகி உள்ளதாம். அவருடைய பணமும் வங்கிக்கணக்கில் இல்லை. அதனால் அவரிடம் இருந்து இப்போது விவாகரத்து வாங்கினால் அஞ்சு காசு பேறாது என்று அவர் தெளிவாகப் பேசினார். கணவனிடம் சமாதானமாக போய் விட்டார். மொரோக்கா கால்பந்தாட்ட வீரர்களை விட பெரிய கால்பந்தாட்டக்காரர்கள், பந்தை எதிரணி பக்கம் திரும்பி விடாமல் வளைத்து வளைத்து கொண்டு போகும் திறமைசாலி ஆண்கள் நம் ஊரில் நிறையவே இருக்கிறார்கள். என்ன அவர்கள் வணிகர்கள், மாத சம்பளக்காரர்கள் அல்ல!


ஓம் வேலூர் இப்ராஹிமாய நமஹ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...