முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செக் லிஸ்ட்




இன்று ஏராளமானோர் அரசியல் விவாதங்களை யுடியூப் சேனல்கள் வழியாக பின் தொடர்கிறார்கள் என்று அறிவேன். குறிப்பாக இளைஞர்கள். அவர்கள் செய்தி வாசிப்பதையோ செய்தி சானல்கள் வழி கேட்பதையோ விட ‘செய்தி விவாத சேனல்கள்’ வழி அறிவதையே விரும்புகிறார்கள். இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள நிலைதான் என்பதை ஒரு கல்வியாளனாக நன்கறிவேன். இந்த பின்னணியில் தான் ‘வார் ரூம்’ எனப்படும் போலி செய்தி பரப்பாளர்கள் கட்சிகளால் பணம் கொடுத்து அமர்த்தப்படுகிறார்கள். அவர்களைக் கையாளும் தரகர்களும் உருவாகி உள்ளார்கள். இவர்களுடைய இடுபணி ஒரு கதையாடலை உருவாக்குவது (திமுக ஊழல் கட்சி, பாஜக முன்னேறி வருகிறது, இந்த குற்றவாளி நிஜத்தில் நல்லவர், அவர் மீது பொய்ப் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன, இந்த கொலையே அடிப்படையில் ஒரு நாடகம், அவர் தானாகவே ….) எனக்கு மதன் மீதுள்ள ஆர்வம் அவர் இவர்களில் சிலரையாவது அம்பலப்படுத்தி உள்ளார், அவர் தானும் இத்தகைய வார் ரூம் ஒன்றில் இருந்தவரே என ஒப்புக்கொள்வதாலே (அவர் இப்போதும் யாரோ ஒருவரின் ஊதிய பட்டியலில் இருப்பதாகவே எண்ணுகிறேன்). சவுக்கு, மாதேஷ், பீலிக்ஸ், முக்தார், மணி என ஏராளமானோர் அம்பலப்பட்டு வந்துள்ள நிலையில் நான் இப்போது இந்த சேனல்களில் பேசுகிற யாரையும் நம்புவதில்லை என்பதால் ஒரு செக் லிஸ்டை உருவாக்கி உள்ளேன். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்:
1) ஒரு அரசியல் சேனலில் திரும்பத் திரும்ப ஒருவரே விருந்தாளராக அழைக்கப்பட்டால் அவரும் அந்த சேனல் நிர்வாகிகளும் கூட்டுக்களவாணிகள்.
2) ஒரு அரசியல் விமர்சகர் பயங்கரமாக கண்களை உருட்டி, குரலில் ஏற்றத்தாழ்வுகளுடன் நாடகீயமாக உணர்ச்சிப்பெருக்குடன் பேசினால் அவர் ஒரு போலி. விரலை உயர்த்தி எதையாவது சொன்னாலே ஒரு புன்னகையுடன் நகர்ந்துவிட வேண்டும்.
3) எந்த பின்னணியும் தெரியாத ஒருவர் ‘மூத்த பத்திரிகையாளர்’ எனும் அடையாளத்துடன் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டால் கவனம். ஏனென்றால் அவரது பின்னணியின்மை ஒரு களங்கமின்மையை கட்டுவிக்க உதவுகிறது. அதை வைத்து அவரை நம் மனத்தில் விதைத்து பின்னால் அறுவடை பண்ணப் பார்க்கிறார்கள்.
4) ஒருவர் தொடர்ந்து பல சேனல்களில் தோன்றி நேர்முகம் எனும் பெயரில் ஒரு அரசியல் தலைவரையோ அரசியல்வாதியையோ திரும்பத் திரும்ப விமர்சிக்கிறார் என்றால் அவர் சம்மந்தப்பட்டவரை ‘மிரட்டுகிறார்’ எனப் புரிந்து கொள்ள வேண்டும். மிரட்டப்படும் நபர் இவரைத் தொடர்பு கொண்டு ‘ப்ளீஸ் நிறுத்துங்க’ என கெஞ்சும் வரை மிரட்டுவார்கள். ஒரு தொகையை செட்டில்மெண்டாக வாங்கிய பின்னர் அவரைத் திட்டுவதை நிறுத்தி விட்டு இன்னொருவரை ‘மிரட்ட’ ஆரம்பிப்பார். அல்லது ஏற்கனவே கடுமையாக விமர்சித்த அந்த நபரைப் பற்றி பட்டும்படாமலோ பாராட்டியோ (“அண்ணாமலை செஞ்சது சரிதாங்க, ஆமா நானே தாங்க சொல்றேன், இந்த விசயத்தில சரிதான்!”) அவரது பிம்பத்தை விமர்சித்தபடியே மிகைப்படுத்தியோ (“அண்ணாமலைய குறைச்சு மதிப்பிடாதீங்க”) பேசினால் அவர் அந்த நபரின் ஊதிய பட்டியலுக்கு வந்துவிட்டரெனப் பொருள். நீங்கள் பின் தொடரும் ஒருவருடைய ஒரு வருட காணொளிகளின் பட்டியலை சும்மா பார்த்தாலே இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளலாம்.
5) பேட்டி எடுப்பவரின் பெயரை ஸ்வாதீனமான அழைத்து பேசினாலோ அவர் இவர் பேச எடுத்துக் கொடுப்பதாகத் தோன்றினாலோ இவர்கள் கூட்டுக்களவாணிகள் தாம்.
6] “என்னுடைய சோர்ஸ்படி”, “நான் என்னோட இத்தனை வருச பத்திரிகை அனுபவத்தில சொல்றேன்” என ஆரம்பித்தாலும் இவர்கள் மோசடிப் பேர்வழிகளே.
7) அறச்சீற்றத்தை நம்பாதீர்கள்.
8] ஒரு செய்தி சேனலில் வேலை பார்த்து பெயர் வாங்கிவிட்டு அந்த வேலையில் இருந்து வந்து ஒருவர் யுடியூப் சேனல் ஆரம்பித்து தன் தொடர்புகளை பயன்படுத்தி பேட்டி அது இதுவென பரபரப்பாக இயங்கினால் அவர் ஒரு மோசடிப் பேர்வழியே. ஒரு சேனலை சொந்தமாக நடத்த ஒரு நல்ல முதலீடு வேண்டும். சுலபத்தில் யாராலும் அப்படி பண்ணிட முடியாது.
9) ஒருவர் பகிங்கரமாக ஒரு கட்சியை ஆதரித்தோ (திமுகவோ தமிழ் தேசியவாத கட்சியோ) எதிர்த்தோ (பாஜக) தன் யுடியூப் சேனலில் களமாடினால் அவரும் மோசடிக்காரரே. ஏனென்றால் உங்கள் கட்சி அனுதாபத்தை / வெறுப்பை சுரண்டி ஒரு நடுநிலையாளர் பிம்பத்தை உருவாக்கி உங்கள் மனதுக்குள் நீங்கள் ஆதரிக்கிற கட்சிக்கு எதிரான கதையாடலை விதைப்பதே இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடுபணி. இவர்களும் பாஜகவின் ஊதியப் பட்டியலில் இருப்பவரே. திமுகவுக்கான ஊதியப்பட்டியலில் இருந்தவர்கள் தேர்தலுக்குப் பின்பு நீக்கப்பட்ட நிலையில் இப்போது அண்ணாமலையின் பட்டியலுக்கு போயிருக்கிறார்கள். நாளை இன்னொருவரின் பட்டியலுக்குப் போவார்கள். நம்முடைய மறதியும் அக்கறையின்மையுமே இவர்களுடைய முதலீடு.
10) இவர்களை ஆதரித்து யுடியூபிலும் பேஸ்புக், டிவிட்டரிலும் கள்மாடுபவர்கள் ஒன்று இவர்களால் தாம் ஆதரிக்கும் கட்சிக்கு லாபமிருக்கும் என அப்பாவித்தனமாக நம்பும் ரசிகர்கள். Passive supporters. இவர்களைப் பொருட்படுத்தாதீர்கள்.
எனக்கு எந்த சார்பும் இல்லை, நான் வெறுமனே ஆளுங்கட்சியின் ஆட்கள் பற்றி கசிய விடப்படும் ருசிகரமான தகவல்களுக்காகவே பார்க்கிறேன் என்றால் உங்களையும் அவர்கள் சில மாதங்களுக்குள்ளாகவே மூளைச்சலவை பண்ணிவிடுவார்கள். நீங்கள் மதத்தைப் பற்றி அறியும் அறிவார்ந்த நோக்கத்துக்காக ஒரு கார்ப்பரேட் சாமியார் / காஸ்பல் பேச்சாளரின் கூட்டங்களுக்கு தொடர்ந்து போனால் என்னவாகுமோ அதுவே இங்கும் நடக்கும். உங்கள் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதைத் தெரிந்து கொண்டு முன்னேறுங்கள். அரசியல் பற்றி கட்சிப் பேச்சாளர்கள் சொல்வதை கவனியுங்கள். மரபான செய்தித்தாள்களைப் படியுங்கள். செய்திச் சான்ல்களைப் பாருங்கள் (விவாத நிகழ்ச்சிக்குள் போகாதீர்கள்).
ஒருமுறை அண்ணாமலை தமிழக ஊடகங்களை வழிக்கு கொண்டு வரப்போகிறேன் என்று சொன்னார். அவர் ஊடக கட்டுப்பாடு, தடை எனப் போகப்போகிறார் என நினைத்தால் மாறாக முதலில் ஊடக முதலாளிகளை தில்லிக்கு அழைத்து சென்று ஒரு விருந்து அளித்து நிறைய கையூட்டை உத்தரவாதம் பண்ணினார். அதன் பிறகு ஊடக்காரர்களிடம் உங்கள் விலை என்ன என்று ஒரு சந்திப்பின் போது நேரடியாகக் கேட்டு அது பிரச்சினை ஆனது. ஆனால் அவர் நிஜமாகத் தான் கேட்டிருக்கிறார் போல. அவர் அடுத்து உள்ளூர் யுடியூபர்களை வளைத்துப் போடும் பொறுப்பை சில தரகர்களுக்கு அளித்தார். அவர் மட்டுமல்ல திமுக நிர்வாகமும் தான் இதை கடந்த தேர்தல் காலத்தில் செய்துள்ளது - என்ன கொடுமை என்றால் ஒரே தரகரே இரு கட்சிகளுக்காகவும் வேலை பார்த்திருக்கிறார். இப்போது திமுகவுக்கு இவர்களைத் தேவையில்லை, ஆனால் பாஜகவின் அண்ணாமலைக்கு தேவை உள்ளது. அவர் கட்சியை விட்டுப் போனதும் இவர்கள் மீண்டும் ஒவ்வொருவர் வீட்டுக்கதவாக மீண்டும் தட்டுவார்கள். ஏதாவது ஒரு தலைவரிடம் போய் அண்டிக்கொள்வார்கள், யாரையாவது மிரட்டி செட்டில்மெண்ட் வாங்குவார்கள். இவர்களுக்கு நாம் இரையாகி நம்மை மறைமுகமாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. நாம் பார்ப்பதால் உருவாகும் சில லட்சம் பார்வைகளே இவர்களுடைய பிம்பம்.
சனியன்கள்! மருந்தடித்தாலும் சாகாத கரப்பான்கள். இவர்கள் ஒழிய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...