Skip to main content

ஆங்கில மருத்துவர்களிடம் ஒரு கேள்வி


நான் இதை ஆங்கில மருத்துவர்களை விமர்சிப்பதற்காக கேட்கவில்லை. இது ஒரு எளிய சந்தேகம் மட்டுமே. சில உடற்பிரச்சினைகளுக்கு எளிய வீட்டுத்தீர்வுகள் இருக்கையில் ஏன் ஆங்கில மருத்துவர்கள் விலைமதிப்பான களிம்பு, மாத்திரைகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தக் கோருகிறார்கள்?
தோலில் வரும் பூஞ்சான் தொற்றை எடுத்துக் கொண்டோம் என்றால் அதற்கு வேப்பெண்ணெய் மிகச்சிறந்த உடனடி தீர்வு. ஆனால் எந்த ஆங்கில மருத்துவரும் அதைப் பரிந்துரைத்து நான் கண்டதில்லை. உடனடியாக சில மாத்திரைகள், களிம்புகள் என ஆயிரம் ரூபாயாவது நம்மை செலவு பண்ண வைத்துவிடுவார்கள். இதே போலத்தான் உணவு ஒவ்வாமையால் வரும் நுரையீரல் பிரச்சினைகள்.
என்னுடைய மாணவர் ஒருவருக்கு அவர் உண்ட ஓட்டல் உணவினால் மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. மருத்துவர் நிறைய ஸ்டிராய்ட்ஸ் மற்றும் மாரில் ஊசிகளையே பரிந்துரைத்தார். அவருக்கு இன்னும் பிரச்சினை முழுக்க சரியாகவில்லை, ஏனென்றால் அவரது உணவு மற்றும் வாழ்வு முறைகளை மாற்றுமாறு மருத்துவர் வலியுறுத்தவில்லை. என்னுடைய தோழி ஒருவருக்கு தொண்டையிலும் நுரையீரலிலும் பிரச்சினை ஏற்பட்டு தொடர் இருமல் வந்துகொண்டே இருந்தது. சிறப்பு மருத்துவரிடம் போனால் மருந்து, மாத்திரை, கட்டணம் என மூவாயிரத்துக்கு மேல் செலவானது. ஆனால் குணமாகவில்லை. சில வாரங்கள் ஏகப்பட்ட மாத்திரைகளை முழுங்கி விட்டு இருமி இருமி தொண்டை வலி ஏற்பட்டதுதான் மிச்சம். நான் இது ஒவ்வாமையால் ஏற்படுகிறது எனக் கருதி என்னென்ன உணவு ஒவ்வாமைகள் இருக்கக் கூடும் என ஒரு பட்டியலிட்டு அவர் அதிகமாக எடுத்துக் கொண்டு பால் மற்றும் பால் உணவுகளை தவிர்க்க சொன்னேன். பாலை நிறுத்தியதும் மூன்றே நாட்களில் இருமல் குறைந்து ஒரு வாரத்தில் முழுக்க குணமாகிவிட்டார். இப்போதும் அவர் பால் உட்கொள்ளும் போது இப்பிரச்சினை வரும், நிறுத்தினால் போய்விடும். என்னுடைய ஐயம் இந்த மிக மிக எளிய தீர்வை ஏன் ஒரு மருத்துவர் பரிந்துரைப்பதில்லை?
அடுத்தது ஒரு மிகப்பெரிய பிரச்சினை - உணவு மற்றும் வாழ்வு முறைகளால் ஏற்படும் நீரிழிவு, ரத்தக்கொழுப்பு உள்ளிட்ட கோளாறுகள். இதைப் பற்றி சற்று விரிவாகவே சொல்கிறேன். வாழ்வுமுறை கோளாறுகளுக்கு சிறந்த தீர்வு நோய்க்காரணத்தை மாற்றுவதுதானே, ஆனால் ஏன் ஆங்கில மருத்துவர்கள் அதைப் பரிந்துரைப்பதில்லை? அவர்கள் ஏன் மாவுச்சத்தை 90% குறைத்து, அதிகமாக காய்கறியும், நொதிக்க வைத்த உணவுகளும் சாப்பிட்டு, விரதம் இருக்கும்படி கேட்பதில்லை? எனக்கு இளமையிலேயே நீரிழிவு வந்துவிட்டது. அப்போது மருத்துவர் எனக்குக் கொடுத்த உணவுத்திட்டம் இன்னும் நினைவிருக்கிறது. காலையில் இட்லி - சட்னி/ சப்பாத்தி-பருப்பு, 11 மணிக்கு மேரி பிஸ்கட், மதியம் சோறு / சப்பாத்தி + சிறிது காய்கறி, மாலையில் மீண்டும் மேரி பிஸ்கட், இரவில் சப்பாத்தியும் பருப்பும். அது போதாதென்று உறங்கும் முன்பு பாலும் கூட இருக்கிறது. இது மிக மோசமான உணவுத்திட்டம் என்பது இன்று நிரூபணமாகி இருக்கிறது. ஏனென்றால் இது முழுக்க மாவுச்சத்தால் ஆனது. இது தொடர்ச்சியாக நம் உடலில் இன்சுலின் தேவையை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. கொழுப்பு எரியவோ செல்கள் தம்மை சரி பண்ணிக்கொள்ளவோ விடாமல் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுக்கிறோம். இந்த உணவுமுறையில் நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்தோ நொதிக்க வைக்கப்பட்ட உணவோ இல்லை. நமது வாழ்வுமுறை கோளாறுகள் நமது குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்கள் சாவதால் ஏற்படுகின்றன. இந்த உணவுத்திட்டம் அக்கிருமிகளை மேலும் கொன்றுவிடும். அப்போது நமது நோய்கள் இன்னும் பலமடங்கு பெருகும். மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்குப் போய் காவலிருக்கத் தேவைப்படும். என்ன கொடுமை என்றால் கடந்த இரு பத்தாண்டுகளாக இன்றும் பல நோயாளிகளுக்கு இதே உணவுமுறையைத் தான் பரிந்துரைக்கிறார்கள். அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
என்ன பிரச்சினை என்றால் இந்த உணவுமுறையைப் பின்பற்றினால் நோயின் தாக்கம் குறையாது, மெல்ல மெல்ல கூடிக்கொண்டே போகும். முதலில் 30 யூனிட் இன்சுலின் எடுக்கிறவர் பத்தே ஆண்டுகளில் 200 யூனிட்டுகள் எடுக்கத் தேவை வரும். அதோடு வேறு பல நோய்களும் வந்து அவர் தளர்ந்து போய்விடுவார்.
நான் கடந்த 8 ஆண்டுகளில் இதையுணர்ந்து கொண்டேன் - உடலும், அதில் உள்ள குடல் நுண்ணுயிர்களுமே சிறந்த மருத்துவர்கள். அடிக்கடி சாப்பிட்டு உடலுக்கு நாம் தொந்தரவு கொடுக்காமல் விட்டால், குடல் நுண்ணுயிர்களுக்குத் தேவையான உணவுகளைக் கொடுத்தால் உடல் தன்னைத்தானே சரிசெய்து கொண்டு விடும். இதை உணர்ந்து கொண்ட நான் என் உணவுத்திட்டத்தை முழுக்க மாற்றினேன். ஒரு பெரிய கிண்ணத்தில் காய்கறிகள் உண்டேன். நொதிக்க வைக்கப்பட்ட உணவை தவறாமல் எடுத்துக் கொண்டேன். முக்கியமாக 18 மணிநேர விரதம் இருக்கப் பழகினேன். இப்போது நீரிழிவை மிக மிக சுலபமாக என்னால் கையாள முடிகிறது. நான் முன்பு நாள் ஒன்றுக்கு 160 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொண்டேன் என்றால் இப்போது 20 யூனிட்டுகள் தான். 1921இல் இன்சுலினை கண்டுபிடிக்கும் முன்பு மருத்துவர்கள் இதே உணவுமுறையைக் கொண்டுதான் நோயாளிகளை சுலபத்தில் சமாளித்து உயிருடன் வைத்திருந்தார்கள். ஆனால் இன்சுலின் வந்த பிறகு மருத்துவர்கள் இந்த இரண்டு முறைகளையும் கலந்து ஆரோக்கியமான முறையை உருவாக்காமல் அதிக இன்சுலின் / மாத்திரை பயன்பாட்டைக் கோருகிற மோசமான வாழ்வு-உணவு முறையை பரிந்துரைக்கிறார்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி சிறுவயதில் இருந்தே வலிப்பு வந்து துயரப்படும் தன் மகளுக்கு விரதமும், காய்கறிகளையும் கொண்ட அப்பிரச்சினையை வெகுவாக குறைத்துவிட்டதாக சொன்னார். இத்தனைக்கும் அவர் ஒரு ஆய்வாளர். அமெரிக்காவிலும் இம்முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. ஆனால் ஆங்கில மருத்துவர்களோ பொதுவாக இம்முறையை பரிந்துரைக்காமல் நேரெதிராகவே செய்யச்சொல்லி நோயை இன்னும் மோசமாக்குவார்கள்.
நமது ஊரில் பெருகி வரும் மனநோய்களுக்கும் இந்த மாவுச்சத்து குறைவான, நார்ச்சத்து அதிகமான, நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளும், விரதமுமும் உள்ளடக்கிய வாழ்க்கைமுறையும் உதவும் என பல ஆய்வுகள் சொல்லுகின்றன. Nature இதழில் வந்த இவ்வாய்வுக் கட்டுரையைப் பாருங்கள் (Impact of fasting on stress systems and depressive symptoms in patients with major depressive disorder: a cross-sectional study.) ஏன் மனநல மருத்துவர்கள் மாத்திரைகளுடன் இதையும் பரிந்துரைப்பதில்லை?
இன்று நமது நவீன உணவுமுறை பற்றி எவ்வளவோ ஆய்வுகள் வந்துவிட்டன. நவீன உணவுமுறை மிகவும் தவறானது, ஒருவர் 6 வேளைகள் உண்ணவேண்டிய தேவையில்லை, ஒன்றிரண்டு வேளைகளே போதும், நமது உடலின் அமைப்பு அதற்கு ஏற்பவே இயற்கையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என நிரூபித்து வருகிறார்கள். ஆனால் நம் கல்வியமைப்போ மருத்துவமோ இதை ஏன் மக்களுக்கு எடுத்து சொல்வதில்லை? ஏன் ஒரு எளிய தீர்வு நம் கைவசம் இருக்கையில் அதைவிட்டு விட்டு சிக்கலான மருந்துகள், மருந்துகளுக்கு மேல் மருந்துகள், நோயின் அடிப்படை காரணங்களை மேலும் வலுப்படுத்தி, நோயாளிகளை மருத்துவமனைக்கும், மருந்து நிறுவனங்களுக்கும் நிரந்தர அடிமையாக்குகிறார்கள்?
“இந்த காலை உணவையும் நொறுக்குத்தீனியையும் நிறுத்திவிட்டு மதிய உணவுடன் ஆரம்பியுங்கள்” என்று நீங்கள் சொன்னாலே பல வாழ்வுமுறை நோய்கள் குறையுமே! நாற்பதுகளில் இத்தனை பேர் மாரடைப்பு வந்து சாவது குறையுமே! மன அழுத்தம் ஏற்படும் அளவு குறைந்து மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்களே! நீங்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? யார் உங்கள் கையையும் வாயையும் கட்டி வைத்திருக்கிறார்கள்?
ஏன் மூலிகை மருந்துகளையும் உங்கள் மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்த நீங்கள் கேட்பதில்லை?
கர்நாடகாவில் ஒரு வர்ம வைத்தியர் இருக்கிறார். கடும் உடல்வலியுடன் போகிறவர்கள் ஒரு சின்ன அழுத்து அழுத்தி ஒரு நிமிடத்தில் சரி பன்ணிவிடுவார். ஆனால் எந்த எலும்பு மருத்துவரும் தன் நோயாளிகளை இவரிடம் அனுப்ப மாட்டார்கள். நிறைய வலிநிவாரணிகளும், ஓய்வும் அல்லாவிடில் அறுவை சிகிச்சையுமே பரிந்துரைப்பார்கள். ஒரு எளிய சிக்கனமான தீர்வு அருகில் இருக்கையில் அதையும் பயன்படுத்தி உங்கள் நோயாளிகளின் துயரத்தை பாதி குறைக்கலாமே. ஏன் மரபும் நவீனமும் கலந்த ஒரு புதிய மருத்துவமுறை தோன்றவில்லை? நோயாளிகளை ஏன் இங்கும் அங்குமாக அல்லாட வைக்கிறீர்கள்? என்ன தயக்கம்?
பிரச்சினை உங்கள் படிப்பிலா அல்லது மருத்துவமனை, மருந்து உற்பத்தியாளர்களின் அழுத்தங்களிலா? பொருளாதார நிர்பந்தங்களிலா?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...