முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்

 


நான் இந்த அரையாண்டில் கற்பிக்கும் வகுப்புகளில் ஒன்று முனைவர் பட்டப் படிப்பு முதலாண்டு மாணவர்களுக்கான இலக்கிய கோட்பாடுகள். அதன் முதல் பாடமே சாக்ரடீஸின் "ரிபப்ளிக்". இந்த நூலை நான் ஒரு கல்லூரி மாணவனாக முதலாண்டு படிக்கையில் வாசித்து சாக்ரடீஸின் தர்க்கவியல், கருத்துமுதல்வாதம் மீது பித்துகொண்டேன். இதையெல்லாம் ஏன் யாரும் படித்து விவாதிப்பதில்லை என்று வியந்தேன். ஏனென்றால் அவர் கூறும் பல கருத்துக்கள் என் சமகாலத்தில் செல்லுபடியாகக் கூடியவை என அப்போது எண்ணினேன். 26 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நான் அதே நூலின் பகுதிகளை மாணவர்களுக்கு கற்பிக்கிறேன் என்பதால் இந்த அரையாண்டு மிகவும் உற்சாகமாக ஆரம்பித்தது. கேள்விகளாக தொடர்ந்து எழுப்பி மாணவர்களை சிந்திக்க வைப்பதே என் பாணியாக இருந்தது. சற்றே நாகார்ஜுனரின் தர்க்கத்தை பயன்படுத்தி சாக்ரடீஸின் கருத்துக்களை சொல்லித் தந்தேன். எல்லாவற்றையும் கேள்வி கேட்க, ஒவ்வொரு கருத்தின் பின்னுள்ள அபத்தத்தத்தையும் வெளிப்படுத்த அவர்களைத் தூண்டுவேன். ஒரு சில வகுப்புகளில் மாணவர்கள் இந்த வகை விவாதத்துக்குப் பழகிப் போனார்கள். இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஒருநாள் மாணவர்களில் சிலர் என்னிடம் வந்து கேட்டார்கள், "சார், சாக்ரடீஸைப் பொறுத்தமட்டில் வாழ்க்கையின் இலக்கு மகிழ்ச்சி. ஆனால் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒவ்வொன்றையாக அவர் முரணானது, போலியானது என அம்பலப்படுத்தினால் பிறகு என்னதான் எஞ்சும்? இலக்கியமும் கலைகளுமே நம்மைத் தேவையற்ற குழப்பங்களுக்கும் துன்பத்துக்கும் ஆளாக்குகிறது என்றும் கூட சொல்லலாம். அப்போது நாங்கள் எதைத்தான் பற்றிக் கொள்வது? ஒன்றுமே இல்லாத போது பதற்றமாகவும் பயமாகவும் இருக்காதா? அது மகிழ்ச்சியை எப்படித் தரும்?" 
எனக்கு அந்த கேள்விகள் மிகவும் பிடித்திருந்தன. ஏனென்றால் ஒரு பாடத்தை வெறும் உலர்வான தகவலாக மட்டுமே கொள்ளாமல் வாழ்க்கையின் அஸ்திவாரத்தைப் பற்றி பரிசீலிக்கவும் உதவ வேண்டும். ஒரு பாடம் நம்மைக் குழம்பவும் கோபப்படவும் வைக்க வேண்டும். நான் மாணவர்களிடம் அவர்களின் கேள்விகளை சாக்ரடீஸ் எப்படி எதிர்கொள்வார் என விளக்கினேன். சாக்ரடீஸின் தத்துவத்தின் பலவீனத்தையும் குறிப்பிட்டேன்.
இந்த வகுப்பில் ஒரு மாணவி மகிழ்ச்சியும் ஆர்வமும் பொங்க கவனித்துக் கொண்டிருப்பார். அவர் தன் அப்பாவிடம் சென்று என் வகுப்பில் பேசப்படுவபற்றை சொல்வாராம். கடந்த வாரம் அம்மாணவி என்னிடம் வந்து சொன்னார், "சார் என் அப்பாவுக்கு உங்களைத் தெரியும்ணு சொன்னார்." "என்னையா?" "ஆமாம், உங்க கட்டுரைகளைப் படித்திருக்கிறாராம். ஆனால் ஒரு பிரச்சினை." "என்ன?" "அவர் உங்க பெயர் ஆர். அபிலாஷ் என்றார். நான் சொன்னேன் உங்க பேரு ஆர். அபிலாஷ் இல்லை, அபிலாஷ் சந்திரன் என்று." தன் போனில் ஒரு கட்டுரையின் படத்தைக் காட்டினார். அது நான் அண்மையில் 'உயிரெழுத்தில்' எழுதியது. நான் அவரிடம் இருவரும் ஒரே ஆள் தான் என்றேன். 
என்னுடைய அனுபவத்தில் முதன்முறையாக ஒரு மாணவர் என்னை எழுத்தாளராக அறிகிறார், என்ன தன் அப்பாவின் வழியாக. ஒருநாள் ஒரு மாணவர் என்னை நேரடியாகவே அறிந்து "நீங்க தானா அது சார்?" எனக் கேட்க வேண்டும் என்பதே என் ஆசை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...