முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூளையில் அதக்கிய கூழாங்கல்



"கூழாங்கல்" படத்தின் டிரைலர் பார்த்த போது ஏற்பட்ட எதிர்பார்ப்பு முழுப்படத்தில் நிறைவேறவில்லை. டிரைலரை நன்றாக தொகுத்திருந்தார்கள், ஆனால் படத்தில் சொதப்பி விட்டார்கள். கதையோட்டத்தில் ஒரு சலிப்பு வருகிறது - அது திரைக்கதையில் உள்ள பிரச்சினையால் தான். அந்த தகப்பன் பாத்திரம் கடைசி வரையில் மாறுவதில்லை. அதனாலே அவரும் சரி அவரது மகனின் பாத்திரமும் சரி ஒருவித கெட்டி அட்டையால் செய்யப்பட்ட மனிதர்களாக இருக்கிறார்கள். அது அப்படம் முழுக்க எல்லா பாத்திரங்களுக்கும் இருக்கிற பிரச்சினை.


இப்பிரச்சினை ஒரு அரசியலும் தான். ஆண்கள் அடிப்படையில் கொடியவர்கள் என்று சொல்வதில் ஒரு முற்போக்கு சிலிர்ப்பு உள்ளது. அது தன்னைக் குறித்து நவீன மனத்திற்கு உள்ள குற்றவுணர்வில் இருந்து வரும் சிலிர்ப்பு. அது ஒரு பாசாங்கு நாடகம். தானாகவே இருந்துகொண்டே தன்னை மறுத்து நவீன ஆண் ஆடும் போலி நாடகம். நீங்கள் இந்த நாடகத்தை 70, 80களில் எழுத ஆரம்பித்த முற்போக்கு படைப்பாளிகளிடமும் அவர்களின் வழித்தோன்றலாக தம்மைக் கருதும் இன்றைய ஆண் படைப்பாளிகளிடமும் பார்க்கலாம். அவர்களை வாசித்து ஏற்பட்ட செயற்கையான அரசியல் இந்த இயக்குநரிடமும் தெரிகிறது. ஏனென்றால் ஆண் பாத்திர அமைப்பில் ஒரு உள்முரண, மாற்றம் இல்லாமல் இறுகிப் போய் இருக்கிறது. பெண்கள் நிரந்தர இரைகளாக காட்டப்படுகிறார்கள். அந்த சூழலில் அப்படித்தான் இருக்க முடியும் எனக் கூற முடியாது. ஏனென்றால் எந்த சூழலிலும் மனிதர்கள் வேட்டையாளர்கள், வேட்டை இரைகள் என கராறான டப்பாக்களுக்குள் இருக்க மாட்டார்கள். மாறிக்கொண்டே, முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்போதே அது உண்மைக்கு பக்கத்தில் வரும். தமிழ் முற்போக்கு சிறுகதைகளில் உள்ள பாத்திர வார்ப்பில் உள்ள அதே பிரச்சினை இப்படத்திலும் உள்ளது. இதிலும் இருந்து கிடைக்கும் பாடம் இளம் இயக்குநர்கள் உத்தம முற்போக்கு தமிழ் படைப்பாளிகளைப் படிக்காமல் நடைமுறையில் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என கவனிக்க வேண்டும் என்பது.

அந்த குழந்தையின் பாத்திரம் இன்னும் கொடுமை - ரொம்ப நல்லத்தனமாக இருக்கிறது. குழந்தைகளிடமே நாம் உச்சபட்சமான தீமையின் வெளிப்பாட்டைக் காண்போம். அதுவே உளவியல் சொல்வது. அழிவு விழைவு குழந்தைகளின் அடிப்படை உந்துதல். ஆனால் இந்த குழந்தை ஷெல்லி, வெர்ட்ஸ்வொர்த்தின் பழைய கற்பனாவாத காலத்து குழந்தை உருவகம் போல இருக்கிறது. குழந்தை ஏசுவைப் போல இருக்கிறது. சற்று பயமாக கூட இருக்கிறது. இந்த முற்போக்காளர்கள் ஒரு புதிய உலகைப் படைத்தால் அது ரொம்ப பயங்கரமாக இருக்கும் போல.

சவால், அதை எதிர்கொள்ளும் முயற்சி, அதனால் கிடைக்கும் படிப்பினை, அதனால் வரும் மாற்றம் என பாத்திர அமைப்பில் சில சிறிய மாற்றங்களைப் பண்ணியிருந்தால் இப்படம் ஒரு கிளாஸிக் ஆகியிருக்கும். ஆனால் அவசர கதியில் கதையை எழுதி படமாக்கியதைப் போலிருக்கிறது. கதை மொழியில் வேலை செய்திருக்கிறார்கள், நிறைய உருவகங்களை இறைத்திருக்கிறார்கள், ஆனால் கதையுடன் பொருந்தி வர முடியாததால், கதையே முழுமையற்றது என்பதால், கதையே தட்டையாக உள்ளதால் இந்த உருவகங்கள் உயிரிழந்து விடுகின்றன.

ஏமாற்றம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.