Skip to main content

ஜில் ஜில்



இந்துமதி உதவி கேட்டதோ அவருக்கு துர்கா ஸ்டாலின் உணவுப்பொட்டலம், தண்ணீர் கேன்களை அனுப்பி, பின்னர் அவரை வெள்ளத்தில் இருந்து ஜீப் மூலம் வெளியே கொண்டு வந்து தனியார் விடுதியில் விட்டதோ ஒரு குற்றமா என்றால் இல்லை. தொடர்புகளை மக்கள் இவ்வாறு பயன்படுத்துவது நடைமுறையில் இல்லையா? உண்டு. அதில் எந்த நியாய தர்மமும் வேண்டாமா என்று கேட்டால் வேண்டும், ஆனால் நிஜத்தில் அது இல்லை.

 அவரிடத்தில் நம்மில் யார் இருந்திருந்தாலும் எதாவது ஒரு சந்தர்பத்தில் அழைத்துக் கேட்டிருப்போம். ஏற்றத்தாழ்வே இல்லாத உன்னத சமூகத்தில் நாமோ இவ்வுலகில் எவருமே வாழ்ந்ததோ வாழ்வதோ இல்லை. நம்மை எரிச்சலூட்டியது நமது மத்திய வர்க்க பொறாமை. அதை ஏழைகளின் தலையில் சுமத்தி தப்பிக்கப் பார்க்கிறோம்.

இந்துமதியின் மொழியில் - இரா. முருகவேள் குறிப்பிட்டதைப் போல - ஒரு சாதிய மேட்டிமைத்தனம் உள்ளது. ஜெயலலிதா இதே உதவியை செய்திருந்தால் அவரை ஜில்ஜில் ரமாமணியுடன் ஒப்பிட்டிருப்பாரா? மகாபெரியவரை, அடுத்தடுத்த மடாதிபதிகளை? ம்ஹும். ஏனென்றால் அரசியல் பொருளாதார வலிமையை மீறி நாம் நம்மை ஒருவிதத்தில் நடப்புலகில் படிநிலைப்படி காட்டத்தான் செய்கிறோம், அதன்படி நடத்தப்படுகிறோம், இது நம் உபமனம் சார்ந்து நம்மையே அறியாமல் நடக்கிறது, இது சூழலை, பண்பாட்டைப் பொறுத்து மாறும் என்பதை நான் என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஒரு அவமானம் நமக்கு அழகாகக் கூடத் தெரியும். அதுதான் வாழ்க்கையாக இருக்கிறது. 
 பலரிடமும் இந்த 'மோகனா - ரமாமணி' மனநிலை' உண்டு. இன்றைய தலைமுறையில் நாம் இதை அரசியல் சரிநிலை கொண்டு மறைக்கிறோம், மிக மிக அந்தரங்கமான வெளிகளில் மட்டும் காட்டுகிறோம், இந்துமதியின் தலைமுறையினருக்கு இந்த தந்திரம் தெரியாது, ஒன்று சாஷ்டாங்கமாக விழுவார்கள் அல்லது விழக் கோருவார்கள். அதில் எந்த கள்ளங்கபடமும் இராது. பண விசயத்திலும் இப்படி நேரடியாக மேட்டிமைத்தனம் காட்டிவார்கள், நான் ஒரு சமத்துவ பணக்காரன் என கைகட்டி நிற்க மாட்டார்கள். மனதில் இருப்பதை அப்படியே எழுதிவிடுவார்கள். 

இதையெல்லாம் விவாதித்து சீர்படுத்த முடியாது. காபியில் சர்க்கரை சேர்க்கலாம். அது ஒரு பொருள். மனித நடத்தை, பேச்சு, சிந்தனையில் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலக்க முடியாது. சமூகம் எப்படியோ அதற்குள் அதன்படித்தான் இருக்கிறோம். எதிர்காலம் எப்படி இருந்தாலும் அதில் நாம் இருக்கப் போவதில்லை. இப்போது என்ன உள்ளதோ அதை மாற்ற இயலாது. நம் எதிர்வினைகளும் முழுக்க நம் கட்டுப்பாட்டில் இல்லை. அதனாலே இத்தனை நூற்றாண்டுகளாக சாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து எதிர்த்து அதை விட மோசமான இடத்தில் அதே மறுமலர்ச்சி, புரட்சி கற்பனைகளுடன் வாழ்கிறோம். நினைப்பது ஒன்று, சொல்வது வேறு, செய்வது இன்னொன்று என மூன்றாக உடைந்து கிடக்கிறோம். 

ஜெய்பிரகாஷ் நாராயண் பற்றி நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவரும் முழுமையான புரட்சிக்காக தான் உழைப்பதாக சொல்கிறார். அவருடன் நிற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸும் அதையே சொல்கிறது. தானும் புரட்சிக்காகவே இதைச் செய்வதாக சொல்லி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்கிறார் இந்திரா. தனக்குத் தன் தாயின் சோஷலிஸ சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை, தன் புரட்சி நவீனமானது என்று சொல்லி சஞ்சய் காந்தி பல புரட்சிகளை செய்கிறார். மார்க்ஸிஸ், இந்திய கம்யூனிஸ்டுகளும் இரு முகாம்களிலோ வெளியிலோ நின்று புரட்சி பேசுகிறார்கள். கூடவே எல்லாரும் இன்னொருவரை சர்வாதிகாரி என்கிறார்கள். ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகாரத்தை ஜெ.பி கொண்டு வரக் கூடாது என்றே இந்திரா நெருக்கடியை பிரகடனம் பண்ணுகிறார். ஜெ.பி நாங்க தான் சொன்னொமே அந்தம்மா ஒரு சர்வாதிகாரி என்று என்கிறார் ஜெயிலில் இருந்துகொண்டு. ஒட்டுமொத்தமாக ஒரு அபத்த நாடகம்.

இன்றும் நாம் அதே இடத்தில் தான் நிற்கிறோம். புரட்சி, மாற்றம், சமத்துவம், சர்வாதிகாரம், ஜனநாயகம் எனும் சொற்கள் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. சொல்வதற்கும் செய்வதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

இந்துமதியிடம் ஒரு நல்ல விசயம் அவரிடம் இந்த மும்முகங்கள் இல்லை என்பது. ஒரே முகம் தான். அதைப் பார்க்க நமக்கு கொடூரமாக இருக்கிறது. அது யார் தப்பு? இந்துமதி நமக்கு ஒரு கண்ணாடியைக் காட்டுகிறார். அது குரங்கு பொம்மையல்ல. நாமே தான்.

இப்படியெல்லாம் கொந்தளித்து நம்மையே ஏமாற்றிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருப்பதே ஒரே வழி.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...