முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் கோயில்களில் செருப்புக்கு அனுமதி இல்லை?

 இந்து மதக் கோயில்களுக்குள் நீங்கள் ஒரு மாற்றுத்திறனாளியாகவோ வேறு கால் பிரச்சினைகள் உள்ள முதியவராகவோ இருந்து நடப்பதற்கோ நகரவோ செருப்பு உள்ளிட்ட உபகரணங்கள் தேவைப்பட்டால் அனுமதிக்க மாட்டார்கள். சரி செருப்பு  பயன்பாடு பற்றி இந்து மத புராணங்களிலோ வேதங்களிலோ எதையாவது சொல்லியிருக்கிறார்களா என்றால் இல்லை. பசுவதை ஒழிப்பு பற்றி சொல்லியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மாறாக மாடுகளை யாகத்தின் பெயரில் கொன்று தின்பதைப் பற்றி நிறைய இருக்கிறது. இப்படியான பூர்வ வைதீக இந்துக்கள் ஒரு கட்டத்தில் அகிம்சையை வலியுறுத்திய பௌத்தத்தின் புகழைக் கண்டு அந்தப் பழக்கத்தை வரித்துக்கொண்டனர். பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலால் உண்ணாமையை ஒரு முக்கிய கொள்கையாகவும், சாதிய ரீதியாக படிநிலையை உருவாக்கவும் பயன்படுத்தினார்கள். இதன் நீட்சியாகவே மாட்டின் தோல் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக செருப்புகளை இந்துகோயில்களில் தடை செய்கிறார்கள். கூடுதலாக புத்தர் தன் மரணத்திற்கு பின்பும் தம்முடன் இருக்கிறார் எனும் நம்பிக்கையின் படி அவரது பாதங்களை சிலையாக்கி வழிபடும் மரபை பூர்வ பௌத்தர்கள் உருவாக்கினார்கள். அந்த பாதங்களையும் பௌத்த வீழ்ச்சிக்குப் பின்னர் இந்துமதம் எடுத்துக்கொண்டது. காலைத் தொட்டு வணங்கும் வழக்கம் இந்துக்கள் இடையே உருவானது. பிக்பாஸில் பாருங்கள், தவறாமல் கமலின் காலில் விழுந்தே உள்ளே வருகிறார்கள், வெளியே போகிறார்கள். இந்த வைதீகப் பண்பாட்டுக்கு வெளியே உள்ளோர் மட்டுமே பரஸ்பரம் வணங்கி மரியாதையை வெளிப்படுத்துகிறார்கள். இப்படித் தன்னிச்சையாக உருவான வரலாற்றின் விளைவாகவே கால்கள் புனிதமாகி சுத்தமான கால் படைத்தவர்கள், அசுத்த கால் படைத்தவர்கள் எனும் எதிர்வு உருவானது. கால்களைப் பயன்படுத்த முடியாதவர்களை கோயிலுக்கு வெளியே நிற்க / உட்கார வைக்கும் ஒரு கொடிய வழக்கமும் ஏற்பட்டது. இன்று நீங்கள் போலி தோல் (faux leather) செருப்புகளையே அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அது ஒரு குறியீடு. இந்துக்களுக்கு அந்த பூர்வ பௌத்த குறியீட்டைப் புரிந்துகொள்ளத் தெரியாது என்பதாலே அவர்கள் அதை விளக்கவோ மறுக்கவோ தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள், திகைக்கும் போது பயத்தில் நாம் இன்னும் இறுக்கமாக ஒரு குறியீட்டைப் பற்றிக் கொள்வோம்.

இதனாலே, இந்து மத சீர்திருத்தவாதிகள் கூட இப்பிழையைத் திருத்தி ஜனநாயகத் தன்மை கொண்டதாக கோயிலை ஆக்க முயலவில்லை. ஏனென்றால் இது திருப்பதி பிரகாரத்தினுள் வீற்றிருக்கும் தெய்வத்தின் அலங்காரங்களை அகற்றிக் காட்டுவதற்கு சமமாக ஆபத்தானது. எவ்வளவு விதிமுறை மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் கணிசமானோர் மாற்றுத்திறனாளிகளை கோயிலுக்குள் சுலபமாக அனுமதிக்க மாட்டார்கள். இதற்கு ஒரு தீர்வு பௌத்தர்களின் குறியீடே அது எனப் புரிந்துகொண்டு, எந்த புனிதமும் இல்லை என்பதே புத்தரின் கால்களின் சிறப்பு என்றும், பூமியில் இந்த மண்ணில் கால் பதித்து வாழ்வதே மானுட இருப்பு என்றும், சொர்க்கமோ நரகமோ இல்லையெனவும் அவர் சொல்லியிருக்கிறார் என்றும், அந்நோக்கிலே புத்தரின் கால் வழிபடப்படுகிறது, அவரே தேவைப்படும் போது புலாலும் உண்ணலாம் என அனுமதித்தவர் எனவும் ஏற்றுக் கொள்வதே. இந்த கால்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறினால் கணிசமான மாற்றுத்திறனாளிகள் நிம்மதியடைவர். ஏனென்றால் அவர்கள் மத்தியிலும் பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தெய்வ தரிசனம் செய்ய ஆசையாக இருக்கும் இல்லையா? ஒரு பழைய பௌத்த நம்பிக்கையை, தொன்மத்தைக் காட்டி அவர்களை வெளியேற்றுவது என்ன ஒரு அபத்தம்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...