முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தன்னைப் பிறர் மறுக்கும் சுதந்திரம்

 “நான் கூச்சத்துடன்தான் ஆரம்பித்தேன் என்றாலும், இளமையின் துடிப்பு என்னை ஏதேதோ பேசவைத்தது. நான் பேசியதன் சாரம் இதுதான்: ‘சுந்தர ராமசாமியின் கவிதைகள் என் மனதுக்கு நெருக்கமானவையாக இல்லை. கலாப்ரியாவின் கவிதைகளில் இருக்கும், என்னை ஈர்க்கும் உணர்வுபூர்வமான ஒரு அம்சம் சு.ரா. கவிதைகளில் இல்லை. புத்தி தூக்கலாக அமைந்திருப்பது, ஒருவிதத் தடையாக இருக்கிறது.’ பொதுவாக, அவருடைய கவிதைகள் குறித்து எதிர்மறையான கருத்துகளே அன்று அங்கு முன்வைக்கப்பட்டன. இறுதியில் சு.ரா. பேசினார். பேச்சின் துவக்கத்தில் இறுகியிருந்த அவருடைய முகம், பேச்சில் சுருதி ஏற ஏற பிரகாசம் பெற்றது.” - சுந்தர ராமசாமி: சில நினைவுகள்” நூலில் சி. மோகன்

இன்று நீங்கள் ஒரு எழுத்தாளரின் கூட்டத்தில் அவரை நிராகரித்து இன்னொருவரைப் பாராட்டினால் அவர் உங்களை ஜென்மவிரோதியாக பாவித்து வாழ்வெல்லாம் வெறுப்பார். பெரிய அடிதடி கூட ஆகலாம். பல மாதங்கள் உங்களைப் பற்றி பிறரிடம் புகார் சொல்வார். தம் படைப்பை பற்றிய மிகச்சிறிய எதிர்மறை கருத்தைக் கூட ஏற்க முடியாத தொட்டாச்சிணுங்கிகளாக படைப்பாளிகள் இன்று மாறிவிட்டார்கள்.
ஆனால் சு.ரா எப்படியான கனவானாக இருந்திருக்கிறார், தான் நடத்தும் கூட்டத்தில் தன்னை நிராகரிக்கும் சுதந்திரத்தை ஒரு இளம் படைப்பாளிக்கு அளிக்கிறார். மகத்தான மனிதர்.
பி.கு: இன்னொரு பிரச்சினை பெண்கள் பேசினால் ஊன்றி கவனித்து ரசிக்கும் ஆண் படைப்பாளிகள் தம்மை சந்திக்க வரும் சகபாலினத்தவர்களை விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்கொள்வதைப் போன்றே பார்க்கிறார்கள். இப்படியான சிக்கல்கள் முன்பு இலக்கிய சந்திப்புகளில், கூட்டங்களில் இல்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...