Skip to main content

எழுத்து நம் வாழ்க்கையை விட மேலானது

 கடுமையான மன அழுத்தத்தில், வேலைப் பளுவின் இடையில் கூட நான் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறேன். எப்போதாவது அமையும் ஓய்வு நாட்களில் தான் என்னால் எழுத முடியாமல், கொம்புகளுடன் ஒரு சோம்பல் வந்து தோளில் அமர்ந்துதூங்கு, வெட்டியாய் இரு, ஒன்றும் செய்யாதேஎன நடத்துகிறது. நீதிமன்றம், வக்கீல் அலுவலகம், பணத்துக்கான தேடல், கடுமையான உடல் வலியைத் தரும் பேருந்து பயணம், புதுப்புது நண்பர்களின் வீடுகளில் சில மணிநேரத் தங்கல் என இருந்த மணமுறிவு கொடுமை நாட்களில் கூட நான் தினமும் எழுதியிருக்கிறேன். இதற்கான காரணத்தைப் பற்றி ஏற்கனவேஎழுதியிருக்கிறேன்’ - எழுத்தில் ஒரு பிரத்யேக இன்பம் உண்டு. எழுத்தின் வழி சிந்திக்கும், அறிவைப் பரவலாக்கும் மகிழ்ச்சி. புனைவின் வழி மற்றொருவராக மாறி இன்னொரு அகமொழியில் செயல்படும் சாத்தியம் தரும் திளைப்பு, இதற்கும் போதை மருந்து பயன்பாட்டில் கிடைக்கும் டிரிப்பாகும் அனுபவத்துக்கும் சில தொடர்புகள் உள்ளதாகத் தோன்றுகிறது. நம்முடைய அனுபவ, உணர்வு, சிந்தனை சார்ந்த உள் உலகம முழுக்க மாற்றியமைக்கப்படும் போது நாம் பருவுலகில் ஒரு பக்கமும், அதற்கு சம்மந்தமில்லாத இன்னொரு உலகில் மற்றொரு பக்கமும் வாழ்ந்துகொண்டிருப்போம். அங்கு நடப்பதை எதுவும் இங்கு இருக்கும் உங்களை அசைக்காது. இதற்காகவே நான் தினமும் என் நாவலைத் திறந்து அதனுள் புகுந்து கொள்வேன்


எனக்கு வேலை, குடும்ப உறவுகள், நட்புறவுகள், சடங்குகள், சமூக அரசியல் செயல்பாடுகள், பயணம், உணவு, கேளிக்கை சார்ந்து பெரிய மகிழ்ச்சி எதையும் இந்த வாழ்க்கை அளிப்பதில்லை. என்ன இன்பம் கிடைத்தாலும் அது மிக மிக சொற்பமே. மேலும் இந்த வாழ்க்கை மீதான ஒரு ஆழமான கசப்பு சிறுவயது முதலே எனக்குள் உள்ளது - சும்மா இருப்பது சுகமே என்பதைக் கடந்து நான் கண்ட வரையில் எல்லாருடைய உலகமும் கடும் வெறுமையிலே உழல்கிறது. அதிருப்தி மட்டுமே மக்களுக்கு எஞ்சுகிறது. இந்த வாழ்வில் தேடும் ஒவ்வொன்றும் நம்மை ஏமாற்றுகிறது. வரலாற்றை வாசிக்கும் போதும் எல்லா காலத்திலும் மக்கள் இதே போல அல்லது இதை விட கொடுமையான நிலையில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். மானுடவாதிகளும் கற்பனாவாதிகளும் ஒரு கிளுகிளுப்புக்காக மானுட சகோதர திரளல், பேரன்பு, பெருங்கருணை, இயற்கையுடன் ஒன்றுதல் என போலியாக டிரிப் ஆகிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் சொல்லும் எதுவும் இயல்பாக இங்கு இல்லை. மானுட மேன்மையை உருவாக்கும் முயற்சிகள் கடும் துன்பத்தையே அளித்து வந்துள்ளது என்பதே வரலாறு. இயற்கை என நான் காண்பது எங்கும் உடைபடும் மலைகளும், அழியும் வனங்களுமே தான். ஒருவர் கண்ணீர் விட்டு அழுதால் கூட இன்று அத்துளிகள் மண்ணில் விழாது, காங்கிரீட்டில் தான் விழும். தரையில் கூட அரை அங்குலம் மண்ணைக் காணோம். கடைசியாக அறம். அதுவும் ஒரு பித்தலாட்டமே என என் அனுபவங்கள் கற்றுக் கொடுத்தன. நீங்கள் காதலியுடன் இருக்கையில் அவளை மறக்கவும், நண்பர்களுடன் பேசும் போது அவர்களுடைய சொற்களை, எண்ணங்களைக் கடந்து வேறெங்கோ செல்லவே விரும்புகிறீர்கள். வேலை செய்யும் போது, உணவருந்தும் கூட அப்படித்தான். நீங்கள் சட்டம் கற்றவர்களைப் பாருங்கள் அவர்களுக்கு நீதியிலும் சட்டத்தின் மேன்மையிலும் உள்ள நம்பிக்கை முதலில் போய்விடும், அதன் பிறகே அவர்களால் தொழில் செய்ய முடியும். மருத்துவர்களும் கல்வியாளர்களும் கூட அப்படித்தான். மக்களுக்காக செயல்படும் அதிகாரிகள் மக்களிடம் இருந்துவிலகினால்மட்டுமே அதிகாரம் செலுத்த முடியும். எல்லாமே தான் நம்பும் ஒன்றை பரிகசிக்கும் முயற்சியாக முடிகிறது. வெற்றுச் சடங்காகிறது. ஆனால் எழுத்தில் மட்டுமே முழுமையான மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கிறது. எழுத்தில் மட்டுமே எழுதும் விசயங்களை மறக்கும் தேவை எழுவதில்லை.

 எழுத ஒன்றுமே இல்லை எனும் நிலையும் வந்ததில்லை - எனக்கு இந்த வாழ்க்கை மீது அவ்வளவு கோபமும் கேள்விகளும் உண்டு. வாழ்க்கையுடன் மோதவும், அதிருப்தி கொண்டு அதை மாற்றவும் முயலும் வரை எழுத ஏராளமான விசயங்கள் எனக்கு இருக்கும் என நினைக்கிறேன்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...