என்னுடைய மாணவி தஸ்னீம் எழுதி அனுப்பிய மதிப்புரை. அவருக்கு என் நன்றியும் அன்பும்!
- ஆர். அபிலாஷ்
வணக்கம் சார்! உங்களுடைய, 'கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்'-நாவலைப் படித்தேன். அருமையாக இருந்தது.
'துப்புறியும் பணியை வாசகனிடமே இந்த நாவல் ஒப்படைக்கிறது' என்றது மிகச் சரியாக உள்ளது என்று எண்ணுகையில்,
இந்த கதையைப் புரிந்து கொள்ளவே தனித் திறமை வேண்டும் என்றும், எனக்கு அந்தளவு அறிவு பத்தலயோ? என்றெல்லாம் எண்ணினேன். புத்தகத்தை வாசித்து முடித்த பின்னரும், இன்னும் படித்து முடிக்கவில்லை என்ற உணர்வு இருந்தது.
மீண்டும் புத்தகத்தை வாசிக்க வேண்டுமோ என்ற கேள்வியும்.
ஆனால்,அதுதான் அதன் அழகு என எண்ணுகிறேன்.
பிறகு, தானாகவே சில புள்ளிகளை என் மூளைக் கோர்க்க முயன்றது.
கதையின் நீலத்திற்கு பின் அழைத்து, என் மூளையை பிழிய வைத்தது இந்த நாவல்.
ஒவ்வொரு பாத்திரத்தையும் அழகாகவும் வலுவாகவும் கட்டமைத்துள்ளீர்.
பாத்திரத்தின் வெளிப்படையான விவரங்கள் எல்லாம் கதையில் இருந்தும், ஒவ்வொரு பாத்திரத்தையும் மீண்டும் அலசி ஆராயத் தூண்டியது
கதை முடிவுக்கு எப்போ வரும் என்று தெரியவில்லை.
எனக்கு அப்பப்போ சில விடைகள் கிடைக்கும், சாத்தியங்கள் தோன்றும்.
சிந்திக்க வைக்கும், ஆராயத் தூண்டும் ஒரு நல்ல நாவல்.
புத்தகத்தைப் பற்றி review செய்ய,குறிப்பு சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவமோ, ஆற்றலோ இல்லை.
ஆனால், இந்த புத்தகத்தில் பிடித்தவையை என்னுடைய கண்ணோட்டத்தில் பகிர்ந்துள்ளேன்.
நன்றி!
தஸ்னீம் நஸீர்
Comments