Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

புனைவில் உரையாடல் எழுதுவது எப்படி?

இன்றைய நாவல் வகுப்பிற்கான  குறிப்பு






சிறந்த உரையாடலுக்கான உதாரணங்கள்


மோகமுள்


தி.ஜா - மோகமுள் - பக்கங்கள் 40-42; 56; - கதாபாத்திரத்தின் பல்வேறு மனநிலைகள், மறைத்து வைத்த உணர்வுகள் வெளிப்படும் பாங்கு கவனிக்கத்தக்கது. பொதுவாக தி.ஜா ஒரு உரையடலுக்குள் பல பகுதிகளைக் கொண்டு வருவார். ஒன்று முடிந்து இன்னொன்று வரும்ராஜம் பாபுவின் இசை குறித்த கற்பனாவாத நிலைப்பாட்டை மறுக்கும் இடத்தில் ஒரு உரையாடல் பகுதி முடிகிறது:

பாடாமலே இருக்கலாம், மனசுக்குள்ளேயே ராகத்தின் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். வடிவத்தை வளர வளர பார்த்துக்கொண்டே இருக்கலாம்.” என்றான் பாபு. (…)

ராகத்துக்கு வடிவம் அழகெல்லாம் இருக்கு. பாடினால்தான் அது வெளிப்படும். நீ சொல்கிற தியானம் எல்லாம் எல்லாருக்கும் பிரயோஜனப்படாது. நீ வேணும்னா பண்ணிண்டிரு.”

எனக்கு ஒண்ணும் வரப்போறதில்லே. தியானம் தான் மிச்சப்படும் போலிருக்கு.”


 அந்த இடம் பின்னாளில் அவன் யமுனாவை வறிந்து நொடிந்த வயதான நிலையில் பார்க்கையில் அர்த்தம் பெறுகிறது.


அதே போல ராஜத்தின் வாக்கியங்களின் தாளக்கட்டும் பாபுவின் தாளக்கட்டும் வேறுவேறானது. நாவல் முழுக்க இப்படித்தான் தி.ஜா அமைத்திருக்கிறார். இது அப்பாத்திரங்களுக்கு ஒரு தனித்துவத்தை, ஆளுமையை அளிக்கிறது.


60- ஆம் பக்கத்தில் ஒரு யமுனா பேசும் பாணி அவள் பின்னர் நகரத்திற்கு வரும் வரையில் அவளிடம் வெளிப்படும் நக்கலும், தன்மறுப்பும், பாபுவிடம் காட்டும் விளையாட்டுத்தனமான காமமும், தூண்டிவிடும் போக்கும்:


ஊருக்குப் போறியா?”

ஆமாம் ராத்திரி தான்.”

ராத்திரி தானே?”

யமுனா கல்யாணத்தை நிச்சயம் பண்ணிவிட்டுத் தான்.”

ஏன் தாரை வார்த்துக்கொடுத்திட்டுப் போயேன்.” என்று சிரித்தாள் யமுனா.


(…)


நீ தான் இன்னிக்கு ஜாஸ்தி பேசவே இல்லை.”

கல்யாணப் பெண்ணில்லையா? சும்மா பேசிக்கிடேயிருந்தா?” என்றாள் யமுனா.

கல்யாணம் ஆனதுக்கப்புறம் இதுகூட பேசமாட்டே.”

மாப்பிள்ளை சிணுங்காம இருந்தா, பேசறதுக்கு என்ன?” என்று சிரித்தாள் யமுனா.


(இந்த இடத்தில்மாப்பிள்ளைஎன்பது பாபுவையும் தான். அதில் ஒரு சீண்டல், இரட்டை அர்த்தம் உளது.)


ஆதவன் - காகித மலர்கள் - - பக். 109.


நாவலில் இந்த குறிப்பிட்ட உரையாடலில் விஸ்வம் மற்றும் அவன் அப்பாவின் கதாபாத்திர இயல்பு பற்றி நாம் எதிர்பாராத தகவல் நுட்பமாக வெளிப்படுவது கவனிக்கத்தக்கது. விஸ்வம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு விடுப்புக்கு வந்துள்ளவன். அவன் ஆய்வாளன். அவனுக்கு அந்த நகரமய வாழ்க்கை சூழல் குறித்து ஒரு அலுப்பு, அவநம்பிக்கை உள்ளது. போலித்தனங்களை வெறுக்கிறான். அவன் அப்பா ஒரு அரசு அதிகாரி. தன் அம்மாவை அவன் ஒரு  ‘பார்ட்டிக்குஅழைத்து செல்ல முடியுமா எனக் கேட்பதற்காக அவர் அவனுக்கு போன் செய்து பேசுகிறார். அவர் ஆணையிடுவதில்லை. அவர் தயக்கமாக பேசுவதைக் கண்டுஎங்காவது போக வேண்டியிருக்கா?” என்று விசு கேட்கிறான். அவர் சொல்கிறார். அவன் அலுப்புடன் ஒத்துக்கொள்ள அவர் அவன் மனைவி பத்மினியையும் அவன் கூட அழைத்துப் போகலாம் என்கிறார். அவன் ஒத்துக்கொள்ள அவர் ஆம் சாரிஉன்னை சிரமப்படுத்த வேண்டியிருக்கு.” என்கிறார் மன்னிப்பு கோருவதைப் போல. ஏன் இவ்வளவு தொழில்ரீதியாக பேசுகிறீர்கள் என்று விஸ்வம் கேட்க அப்பா சிரித்துக்கொண்டு மழுப்புகிறார். அடுத்து விஸ்வம்இன்றைய சாயங்காலப் பொழுதை உனக்காக தியாகம் பண்ணப் போறேன், அப்பாஎன்கிறான். இந்த இடம் முக்கியமானது. விஸ்வம் அலுப்பாக எரிச்சலாக இருக்கிறான், ஆனால் அவன் அதைக் காட்டிக் கொள்வதில்லை. உரையாடலின் துவக்கத்தில் இருந்த வெளிப்படைத்தன்மை இப்போது அவனிடம் போய்விடுகிறது. அவனும் தொழில்ரீதியாக பேச ஆரம்பித்துவிட்டான். இதை அவன் அப்பாவின் அடுத்த வசனம் மூலம் ஆதவன் நமக்கு சுட்டிக்காட்டி கிண்டலடிக்கிறார்: “ஓக்கே நான் உன்னை தேங்க் பண்ணப் போறதில்லே, அப்புறம் பார்லமலாப் பேசுறேன்னு சொல்லுவே.” மெல்ல மெல்ல நகரமயமான செயற்கையான சூழல் அதை எதிர்க்கிற விஸ்வத்தையே விழுங்கி உருமாற்றுகிறது என்பதை ஒரு உரையாடலில் வரும் வசனங்களின் மாற்றங்களின் ஊடே ஆதவன் உணர்த்திவிடுவது அற்புதமானது.


அடுத்து இரு ஆங்கில புனைவுகளில் இருந்து உதாரணங்கள்:


F. Scott Fitzgerald’s The Great Gatsby. - கேட்ஸ்பியின் தத்தளிப்பு முடிவுறாத சொற்றொடர்களில் வெளிப்படுவது, நிக் மெல்ல அவரை ஆறுதல்படுத்திய பின்னர் அவர் சொல்லத் தலைப்படுவது - குறிப்பிட்ட சந்தர்பத்தில் பாத்திரங்களின் மனவுணர்வு, மன அமைவு வெளிப்படும் பாங்கு 


Gatsby tries to invite the naive Nick into a less-than-savory business.

“There’s another little thing,” he said uncertainly, and hesitated.

“Would you rather put it off for a few days?” I asked.

“Oh, it isn’t about that. At least—” He fumbled with a series of beginnings. “Why, I thought why, look here, old sport, you don’t make much money, do you?”

“Not very much.”

This seemed to reassure him and he continued more confidently.

“I thought you didn’t, if you’ll pardon my—you see, I carry on a little business on the side, a little side line, if you understand. And I thought that if you don’t make very much—You’re selling bonds, aren’t you, old sport?”

“Trying to.”


ஹெமிங்வேயின் Hills Like White Elephants


A man and a woman discuss whether the woman should abort their baby - ஆண் பாத்திரம் அவளை கருக்கலைப்பு செய்ய மறைமுகமாக வலியுறுத்துவது (“உன்னால் முடியாவிட்டால் செய்ய வேண்டாம், ஆனால் அதை செய்வது சுலபம். அதுதான் சிறந்த விசயம், அது நடக்காவிட்டால் நான் வருத்தப்படுவேன், நான் வருத்தப்பட்டால் எந்த எல்லைக்குப் போவேன் என உனக்குத் தெரியுமே. லவ் யூ லவ் யூ”), அன்பிற்காக, உறவின் நிலைப்புக்காக அவள் அதை ஏற்பது (உனக்கு நிஜமாகவே இது நடக்க வேண்டுமா? இது நடந்தால் நீ திரும்பவும் என்னை நேசிப்பாயா? நீ இனிமேல் கவலையே பட மாட்டாயா?); அடுத்து இந்த உரையாடலின் வழி ஒரு காட்சி அரங்கேறுகிறது; ஒரு விசயம் நடக்குமா இல்லையா எனும் கேள்வியில் இருந்து ஒரு முடிவை எட்டுகிறோம். நிறைவு கிடைக்கிறது.


“Well,” the man said, “if you don’t want to you don’t have to. I wouldn’t have you do it if you didn’t want to. But I know it’s perfectly simple.”

“And you really want to?”

“I think it’s the best thing to do. But I don’t want you to do it if you really don’t want to.”

“And if I do it you’ll be happy and things will be like they were and you’ll love me?”

“I love you now. You know I love you.”

“I know. But if I do it, then it will be nice again if I say things are like white elephants, and you’ll like it?”

“I’ll love it. I love it now but I just can’t think about it. You know how I get when I worry.”

“If I do it you won’t ever worry?”

“I won’t worry about that because it’s perfectly simple.”


Tagging - அடையிடுதல் 


என்றாள், என்றான், மீரா சொன்னாள், குமார் சொன்னான்


உதாரணம், “இருவர்” - அசோகமித்திரன்

இறந்து போன அப்பாவின் கற்பனைக்கும் மனவளர்ச்சியில்லாத மகனுக்குமான உரையாடல் - வெங்கடாசலம் இந்த உரையாடல் முழுக்க ஆற்றாமையுடன் கையறு நிலையில் இருக்கிறான். அவன் தன் குழந்தை விசு கேட்கும் கேள்விகளுக்கு நேரடியான பதிலை அளிப்பதே இல்லை. ஆனால் விசுவின் மனநிலை சந்தேகம், குறுகுறுப்பு, வேண்டுகோள், சமாதானம், பெரிய மனுசத்தனம் என மாறிக்கொண்டு வருகிறது. இதுவே இந்த உரையாடலுக்கு ஒரு கதையாடல் தன்மையை கொடுக்கிறது. இதில் கேட்டான், சிரித்தான், என்றான், சொன்னான் ஆகிய சொற்கள் பாத்திரங்களின் அடையாளத்தை அடையிடுகின்றன.


திடீரென விசு கேட்டான்: “ஏம்பா நீ செத்துப் போயிடலே?”

வெங்கடாசலம் சிரித்தான். “செத்துப் போறது பத்தி உனக்கு எப்படிடா தெரியும்?”

உன்னைத்தான் நெருப்பு வைச்சுக் கொளுத்தியாச்சே?”

கொளுத்திட்டா ஆயிடுத்தா?”  

வீட்டுக்கு மறுபடியும் வரவேல்லியே?”

வெங்கடாசலம் உடனே பதில் சொல்லவில்லை. பிறகுஅது சரிதான்,” என்றான்.

விசு சொன்னான். “நீ வீட்டுக்கு வாப்பா, அம்மா கூட என்னை அடிக்கிறா.”

வெங்கடாசலத்தை அண்ணாந்து பார்த்த விசு உடனே சொன்னான், “அழாதே அப்பா, உனக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம்.”

வெங்கடாசலம் சொன்னான்: “ஆமாம்டா என் கண்ணு. நான் இனிமே யார் வீட்டுக்கும் வரமுடியாது.”


குறிப்பு: இந்த உரையாடலில் அடைகளை எடுத்துவிட்டால் எப்படி இருக்கும்?


ஏம்பா நீ செத்துப் போயிடலே?”

செத்துப் போறது பத்தி உனக்கு எப்படிடா தெரியும்?”

உன்னைத்தான் நெருப்பு வைச்சுக் கொளுத்தியாச்சே?”

கொளுத்திட்டா ஆயிடுத்தா?”  

வீட்டுக்கு மறுபடியும் வரவேல்லியே?”

அது சரிதான்

நீ வீட்டுக்கு வாப்பா, அம்மா கூட என்னை அடிக்கிறா.”

அழாதே அப்பா, உனக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம்.”

ஆமாம்டா என் கண்ணு. நான் இனிமே யார் வீட்டுக்கும் வரமுடியாது.”


இப்போது உரையாடலுக்கு என்ன வித்தியாசம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறீர்கள்?

ஒரு குறிப்பான மாறுபாடு வாசகராகிய நாம் உரையாடலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக, குறுக்கே எழுத்தாளர் இல்லாததான ஒரு உணர்வு வருகிறது.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...