முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திடீர் (ஆண்) பெண்ணிய இலக்கியவாதிகளின் பதற்றம்


ஒரு கற்பனை செய்து பாருங்கள்பூங்கொடி டீச்சருக்குப் பதிலாக பொன்னுசாமி என்று ஒரு வாத்தியார்சிவனைந்தன் என்ற பையனுக்குப் பதிலாக சிவரஞ்சனி என்ற பதின்மூன்று வயதுப் பெண்பூங்கொடி டீச்சர் சிவனைந்தனின் தலைமுடியைத் தொட்டு seduce பண்ணுவதைப் போலவே பொன்னுசாமி வாத்தியார் சிவரஞ்சனியின் தலைமுடியைத் தொட்டும் தடவியும் seduce செய்கிறார்இந்நேரம் இயக்குனர் மாரி செல்வராஜை paedaphile கேஸில் உள்ளே தள்ளியிருப்பார்கள்தானேஅப்படியிருக்க, ஆண்பிள்ளை என்றால் மட்டும் என்னாங்கடா மன்னிப்புஆண்பிள்ளையை மட்டும் ஒரு டீச்சர் seduce பண்ணலாமாஅப்படிச் செய்தால் அதை வெற்றிப் படம் ஆக்குவீர்களாஎன்ன அயோக்கியத்தனம் இதுஇதையெல்லாம் கேள்வி கேட்பார் இல்லையா?” - சாரு நிவேதிதா

சாருவின் இக்கேள்வி மிக முக்கியமானது. துரதிஷ்டவசமாக பாலியல் அத்துமீறல் குறித்த நமது புரிதல் உடல்சார்ந்ததாகவே உள்ளது. குறிப்பாக கருப்பை. ஏன் 10-12 வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் சுரண்டல் நடக்கும்போது மொத்த நாடுமே கொந்தளித்து எழுகிறது, அதே வயதுப் பையனுக்கு என்றால்ஜாலியா இருந்திருக்கான் போலஎன சிரித்துவிட்டுக் கடக்கிறார்கள் என்றால் அக்குழந்தைக்கு கருப்பை இருக்கிறது, அவள் கர்ப்பமாகக்கூடும், அவளதுகற்புபாழாகும் என நம் சமூகம் கவலைப்படுவதாலே. உளவியல் பாதிப்பு, உடல் பாதிப்பு பற்றியெல்லாம் உண்மையில் யாருக்கும் கவலையில்லை. பெண்ணுடல் நிலவுடைமையின் குறியீடு என்பதால் மட்டுமே இப்பிரச்சினை வருகிறது. நமது அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் கூட உள்ளுக்குள் இதே நிலவுடைமை மதிப்பீடுகளைக்கொண்டிருப்பதாலே அவர்களும் உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என கம்புசுற்றுகிறார்கள். அதுவும் பெரும்பாலும் ஆண்களே இவ்வாறு ஆணாதிக்கம், ஆணாதிக்கம் எனக் கதறுகிறார்கள். சாரு ஒரு பெண்ணாக இருந்திருந்தால் என out of contextஇல் கழன்றுகொள்கிறார்கள். நாம் இதை எந்தச் சூழலும் பொருத்தமுடியும். விராத் கோலி ஐம்பது டெஸ்ட் சதங்களை நாளை அடித்தால்அவர் மட்டும் பெண்ணாய்ப் பிறந்திருந்தால் இவ்வளவு ஆட்டங்களை ஆடியிருக்கவோ சாதிக்கவோ முடிந்திருக்குமா?” எனக் கேட்கலாம். ஹீரோ ஒரு காட்சியில் சட்டையைக் கழற்றினால்இதுவே ஒரு நடிகை என்றால் ஆபாசம் என்று கூவியிருக்க மாட்டோமா? இதன் பெயர் தான் ஆணாதிக்கம்என்று கூறலாம். அப்படியே யுடர்ன் எடுத்து, சில்க் ஸ்மிதாவை, நயன்தாராவை பேரழகியாக்கினதே ஆணாதிக்க மனப்பான்மைதான் என்று கூறலாம். இதன் பெயர் தான் போலி அறிவுஜீவித்தனம். சாருபாலியல் கதைகளை கிளுகிளுப்பாகஎழுகிறவர் என்றோ, அதற்கான சலுகை ஒரு ஆணாக அவருக்கு உள்ளதாகவோ நான் கருதவில்லை. அவருடைய எழுத்தில் உடல்சார்ந்த நியதிகள் மீறப்படுவது எழுத்தினுள் இருக்கும் பகுத்தறிவுசார்ந்த, ஒழுக்கம்சார்ந்த, காலவெளி ஒழுங்குவரிசையை மீறும் நோக்கத்தில்தான். அது கிளர்ச்சியூட்டும் எழுத்தல்ல. நாம் பத்தாயிடம் காணும் கவித்துவமான கிளர்ச்சியைக் கூட சாருவிடம் அரிதாகவே பார்க்க முடியும். பெரும்பாலும் அவர் பாலியல் பரவசத்தின் இடத்தில் கொண்டாட்டத்தைக் கொண்டுவருகிறார். ஏனென்றால் இங்கு பாலியல் பரவசம் பக்தி மரபின் பகுதியாக உள்ளது. ஆகையாலே அவர் பாலியலை கொண்டாட்டமாக்கி நமது இறுக்கத்தை, பதற்றத்தைக் களைய முயல்கிறார். கதையமைப்பில், மொழியமைப்பில், வாக்கிய அமைப்பில், கருத்தமைவில் தளர்வைக்கொண்டு வர அவர் இந்த பாலியல் கொண்டாட்டத்தை பயன்படுத்துகிறார். துரதிஷ்டவசமாக இந்த நுட்பமான வேறுபாட்டை நாம் கவனிப்பதில்லை. அடுத்து பாலியலை எழுதுவதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பாகுபாட்டைப் பேசுவோம். அப்படி ஒன்று உள்ளதா

 The Story of the Eye நாவலை பதாய் எழுதினால்  ஆன் டெஸ்கிளோ The Story of O எழுதினார். இரண்டு படைப்புகளுமே பிரான்ஸில் கொண்டாடப்பட்டன. தமிழில் பாலியல் சிலாக்கியமான விவரணைகளைக் கொண்டு பல அற்புதமான பெண்ணியக் கவிதைகள் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் எழுதப்பட்டன. அதற்காகவே அக்கவிகள் கடுமையாக எதிர்க்கப்பட்டார்கள். சாருவைப் பற்றி இன்று சொல்லப்படும் இதே கேலியைத் தான் அன்று அவர்களைக் குறித்தும் சொன்னார்கள். பிரச்சினை ஆண்-பெண் எனும் பேதம் அல்ல. பாலியல் ஒழுக்கத்தைப் பேணுவது நவீன சமூகத்தில் அரசதிகாரத்தை முன்னெடுக்க அவசியம். அதை ஒவ்வொரு பிரஜையும் தம்மையறியாமல் செய்கிறார்கள். பெண்ணுடல் எழுத்திலோ நேரிலோ மீறப்படக் கூடாது என்பதே இவர்களுடைய நிபந்தனை. அதை யாரும் கவனிக்காதிருக்கும் பொருட்டு பெண்ணியத்தை துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள். தமிழில் அரசதிகார முகவர்களாக இருப்பது ஆண் பெண்ணியவாதிகள் என்பதே சுவாரஸ்யமானது. அவர்கள் இரண்டு பாலினங்களின் பாலியல் எழுத்தாலும் சமமாகவே பதற்றமாகிறார்கள். அதனால் தான் சாரு குறிப்பிடும் பாலியல் சமிக்ஞைகளை நாம் வாசிக்கத் தவறுகிறோம். அதைக் குறிப்பிட்டதற்கே நாம் பதறுகிறோம். இத்தனைக்கும் சாரு அம்மாதிரி பாலியல் சித்தரிப்பு சினிமாவில் தப்பல்ல, அது பாசாங்காக மறைமுகமாக இருக்கவேண்டியதில்லை என்று பாசாங்கையே சாடுகிறார். ஒஷிமாவை உதாரணம் காட்டுகிறார். ஒஷிமாவின் The The Pleasures of the Flesh படத்தில் பாலுறவின் வன்முறையும், அதன் பின்னுள்ள சிதைவுமே பிரதானம். ஆனால் பாலுறவுக் கிளர்ச்சியான காட்சிகள் சுத்தமாக இல்லை. ஏனென்றால் அங்கு எல்லாமே அப்பட்டமாக உள்ளது. ஓருவர் பசியுடன் தன்னை மறந்து உண்பதைப் போன்றே பாலுறவுக் காட்சி இயல்பாக வருகிறது. ஆனால் அதையே மறைத்து அழகாக காட்ட நினைக்கும்போது அங்கு கிளர்ச்சியூட்டும் சித்தரிப்பு தோன்றுகிறது. இதைத்தான் சாரு சுட்டிக்காட்டுகிறார்.

 நிஜத்தில் நாம் செய்தித்தாள்களில் இப்படியான ஆசிரியை-மாணவர் பாலியல் சுரண்டல் செய்திகளைத் தொடர்ந்து கவனிக்கிறோம். ஆனால் அதை யாரும் எங்குமே பொருட்படுத்திப் பேசுவதில்லை. அதாவது எல்லா ஆசிரிய உறவுகளும் பாலியல்சார்ந்தவை என்றோ அவற்றைத் தடை செய்யும்படிபடியோ நான் கேட்கவில்லை. குற்றங்களை மட்டும் சமமாக பாவிக்கும்படிக் கேட்கிறேன். “அப்படியே ஒரு ஆண் குழந்தை பாதிக்கப்பட்டாலும், அவனது ஆணாதிக்கமே கூடுதல் ஆபத்தானது, ஆகையால் நாம் குற்றவாளியின் பக்கமே நிற்கவேண்டும்எனப்பேசுவார்கள் போல. பொதுவாக ஆண்கள் ஒரு உறவில் உடலைப் பிரதானப்படுத்துவார்கள், அவர்கள் சுலபத்தில் வன்முறையின்பால் ஈர்க்கவும் படுவார்கள். ஆகையால் அவர்களுடைய குற்றங்கள் அதிக ஆபத்தானவை என்பதை ஏற்கிறேன். ஆனால் பெண்கள் நிகழ்த்தும் மனதளவிலான பாலியல் சுரண்டலும் ஆபத்தானதே. மென்-பாலியல் அத்துமீறல்களிலே இத்தகைய ஆசிரியைகள் ஈடுபடுவார்கள். மெல்ல மெல்ல குழந்தைகளை தமது தேவைக்கு ஏற்ப பழக்குவார்கள். ஏனோ ஆண்களால் இக்குற்றத்தை எதிர்கொள்ளவே முடிவதில்லை. ஒரு ஆணை அவன் விருப்பமின்றி தொட்டாலோ என்ன செய்தாலோ அதனால் அவனுக்கு இன்பமே என நம்புகிறார்கள். அல்லது அப்படி நினைக்கும்படி ஒரு வறட்சியான நிலைமை இங்குள்ளது என நினைக்கிறேன்.

 ஆனால் பெண்கள் இவ்விசயத்தில் பெரும்பாலும் நேர்மையாகவே பேசுகிறார்கள். அவர்களிடம் இந்த கள்ளத்தனத்தை நான் பொதுவாகப் பார்ப்பதில்லை. நிபுணமதி ஒரு நல்ல உதாரணம். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வேட்டை எனும் பெயரில் இப்பிரச்சினைகளை ஒரு தொடராகவே சில பதிவுகளை எழுதினார். கீழ்வரும் பதிவைப் பாருங்கள் (இதையும் நம் ஆட்கள் படித்துவிட்டு ஒரு ஆணாதிக்க சமூகத்தில் இப்படித்தானே இருக்கமுடியும் என உருகுவார்கள் பாருங்களேன்):

- ஆர். அபிலாஷ்

432.  வேட்டை


சுறுசுறுப்பான கல்லூரி மாணவன் ஒருவன் சங்கீதம் கற்றுக் கொள்ளப் போனான். போன இடத்தில் ஒரு சிறுமி நட்பானாள். அடுத்து வந்த நாட்களில் சிறுமியின் அம்மா இந்தப் பையனிடம் சகஜமாய்ப் பேசத் தொடங்கினார். சில நேரம் தன்னுடைய வண்டி சரியில்லை என்று சொல்லிப் பையனின் இருசக்கர வாகனத்தில் பயணம் போனார்.


பையன் தன் தாயிடம் இவை அனைத்தையும் பகிர்ந்து கொண்டான். தாயும் அந்தச் சிறுமியையும் அவள் தாயையும் வீட்டுக்கு அழைத்து வரச் சொன்னார். எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். அடிக்கடி பையனின் வீட்டுக்கு வரத் தொடங்கினார்கள். சிறுமியின் அப்பா மும்பையில் இருப்பதாய் அந்தப் பெண் (சிறுமியின் தாய்சொன்னார்


ஒருநாள் மருத்துவமனைக்குப் போகத் துணைக்குப் பையனை அழைத்துப் போனார் அந்தப் பெண். பையன் வந்து தாயிடம் சொன்னான் "பாவம்மா அந்த ஆன்டி! பயந்து போய் என் தோள்ள சாஞ்சிக் கிட்டே இருந்தாங்க. இத்தனை வயசுக்கு என்னம்மா இப்பிடிப் பயப்படறாங்க?" பையனின் அம்மாவுக்கு சுரீரென்று ஏதோ உறைத்தது. சுதாரித்துக் கொண்டவர், அந்தப் பெண் அழைத்தால் எங்கும் போக வேண்டாம் என்று பையனை எச்சரித்தார். தன் விசாரணையைத் தொடங்கினார்


அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. அந்தப் பெண் விவாகரத்து ஆனவர். கல்லூரி செல்லும் பையன்களை மிகப் பிடிக்கும். தனியாய் அழைத்துச் சென்று  பயன்படுத்திக் கொள்வது வாடிக்கை. தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, முதலில் அவன் வீட்டுக்கும் போய் நட்பு பாராட்டுவது உண்டு. விஷயம் தெரிந்த பிறகு அந்தப் பெண் அழைத்தால் பையன் வீட்டில் யாரும் பதில் சொல்லவில்லை. சங்கீத வகுப்பின் நேரத்தை மாற்றிக் கொண்டார்கள்.


ஒருநாள் அந்தப் பெண் பழங்கள் வாங்கிக் கொண்டு பையனின் வீட்டுக்கு வந்தார். பையனின் அம்மா எதிர்கொண்டு வரவேற்றார். "பையன் வெளிய போயிருக்கான் மா! ஆனாலும் உனக்கு அவன் மேல ரொம்பப் பாசம்அந்தக் காலம் மாதிரி சீக்கிரம் கல்யாணம் ஆகியிருந்தா உனக்கும் இப்படி ஒரு புள்ள இருந்திருப்பான்! பரவாயில்ல விடு... எம்பையன் உனக்கும் புள்ள மாதிரித்தான்!"


அந்தப் பெண் "புள்ளையா? அய்யோ!" என்றார்! முகத்தில் ஈயாடவில்லை! சட்டென்று கிளம்பிப் போனவர்தான். அதன் பிறகு வரவேயில்லை!


இதைப் படிப்பவர்கள் "எல்லாம் இந்த Facebook , twitter பண்ற வேலை..." என்று திட்டத் தொடங்கி விடாதீர்கள்! இது நடந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு!  


அந்தப் பையனைத்தான் நான் முதலில் பாராட்டுவேன்! எல்லாவற்றையும் தன் தாயிடம் அவன் சொல்லவேதான் அந்தப் பெண்ணின் வலையில் விழாமல் தப்ப முடிந்தது.


இந்நிகழ்வைக் கேள்விப் பட்டபோது முதலில் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பெண்... அதிலும் ஒரு தாய் இப்படிச் செய்வாளா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது அவ்வளவாய் எனக்கு உலக அனுபவம் கிடையாது. ( இப்போது மட்டும் என்னவாம்?) இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைத்துத் தூக்கமே வரவில்லை.


பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் மட்டும்தான் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்... அவர்களைக் கவர்ந்து செல்ல ஆண்கள் காத்திருக்கிறார்கள் என்று அதுவரை மனதில் இருந்த எண்ணம் பொடிப் பொடியாக உதிர்ந்து போனது. ஆண் என்ன? பெண் என்ன? எப்போதும் கவனமுடன் பாதுகாக்க வேண்டியது பெற்றோர் கடமை என்றாகி விட்டது. நல்ல சமத்துவம்!


- நிபுணமதி


பின்குறிப்பு: நான் பொதுவாக இரண்டு மூன்று தரப்புகளுக்கு இடையிலான மோதலில் தலையிடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். ஆனால் இது ஒரு பொதுப்பிரச்சினை என்பதாலே எழுதுகிறேன். - ஆர். அபிலாஷ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...