என்னுடைய சிறந்த கட்டுரைகளில் ஒன்று இது - சினிமா ஏன் நம்மை சிந்திக்க அனுமதிப்பதில்லை, நம் இருத்தலை உணரவிடுவதில்லை, ஆனால் மாறாக இலக்கியம் எப்படி நம்மை சிந்திக்கவும் சுதந்திரமாக இருத்தலை உணரவும் அனுமதிக்கிறது என்று ஹைடெக்கரின் தத்துவத்தின் அடிப்படையில் பேசியிருக்கிறேன். செப்டம்பர் மாத உயிர்மையில் இக்கட்டுரையை படித்துப் பாருங்கள்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments