முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருண் நாயரின் கதை


கருண் நாயர் நல்ல மனவெளியில் (mental space) இருக்கிறார் என்பதை இன்று நடந்து கொண்டிருக்கும் விஜய் ஹசாரே கோப்பை அரை இறுதியில் அவரது மட்டையாட்டத்தைப் பார்க்கையில் உணர்ந்தேன். அவர் விதர்பா அணிக்கு மாறியபின்னர் பாதுகாப்பாக, நிம்மதியாக உணர்கிறார். அந்த அணியில் வேக வீச்சாளர்களும் துவக்க மட்டையாளர்களும் நன்றாக ஆடி வருவதும், அணி அக நிறைவுடன் இருப்பதும் கூட கருண் நாயருக்கு உதவலாம். இப்போது அவர் தன்னை நிரூபிக்கும் அழுத்தத்தில் இல்லை, தான் யாரெனும் குழப்பங்கள் இல்லை. இந்திய அணியில் அவருக்கு இப்ப்படியான சாதக நிலை அவர் அறிமுகமானபோது இல்லை. அங்குள்ள அரசியலையும் நெருக்கடியையும் அவரால் சமாளிக்க முடியவில்லை. மேலும் அவரது காலாட்டத்திலும் குறைகள் உள்ளன - கொஞ்சம் சீம் அசைவு உள்ள ஆடுதளத்தில் தரமான வேகவீச்சுக்கு எதிராக அவரது காலாட்டம் ஸ்தம்பித்துப் போகும் என்பதை ஆஸ்திரேலியா இந்தியா வந்தபோது கவனித்தேன். அதனால்தான் 62.3 சராசரி இருந்தும் அவர் டெஸ்ட் அணியில் தொடர்ந்து ஆடவில்லை, ஆனால் முப்பது சராசரி உள்ள கே.எல் ராகுல் ஆடுகிறார். கே.எல் ராகுலின் காலாட்டம் வேகவீச்சுக்கு எதிராக மேலானது. (சர்பராஸுக்கு நடப்பதுதான் முன்பு கருணுக்கு நடந்தது. அவர் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.)


இப்போதும் கருண் நாயரை டெஸ்டை விட ஒருநாள் போட்டியிலே எடுக்க வாய்ப்பதிகம். ஆனால் அதற்கு விராத் கோலி ஓய்வுபெற வேண்டும். கருண் அதுவரை இப்படியே ரன்களாக அடித்துக் குவிப்பாரா? தெரியவில்லை. ஆனால் மார்ச்சில் நடக்கப்போகும் ஐ.பி.எல்லில் இந்த ஆட்டநிலையை அவர் தொடர்ந்தால் அல்லது ஆட்டவாய்ப்பு கிடைத்தால் ஒருவேளை அவர் இவ்வாண்டே இந்திய அணிக்குள் வந்துவிடுவார்.


பிரேட் மேனுக்கு கிட்டத்தட்ட நிகராக சராசரியை ஒரு காலத்தில் வைத்திருந்தும் சர்பராஸ் கான் இந்திய அணிக்குள் இடம்பெற முடியாமல் போனது போலத்தான் கருணின் நிலையும். ரன் அடிப்பதை

விட இந்திய அணிக்குத் தேவையான ஒன்றை இவரால் தரமுடியுமா என்பதே கேள்வி - வித்தியாசமான ஸ்டைல், தரமான பந்துவீச்சை சமாளிக்கும் தடுப்பாட்டம் அல்லது அடித்தாடும் திறன், அதீதமான ஸ்டிரைக் ரேட், ஆல்ரவுண்ட் திறன் இப்படி எதாவது ஒன்று இருக்க வேண்டும்.


 கருண் நாயரைப் போலவே இருந்து ஒரே ஒருவர்தான் அதிக வாய்ப்புகளைத் தொடர்ந்து எல்லா வடிவங்களிலும் பெற்றார் - அவர் ஷுப்மன் கில். ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டின் செல்லப்பிள்ளை. எல்லாருக்கும் அந்த கொடுப்பினை இராது. மற்றவர்கள் எல்லாம் கடுமையாகப் போராடித்தான் வந்தார்கள். 


கருண் தன் நம்பிக்கையை கைவிடக் கூடாது. தினேஷ் கார்த்திக் மீள்வருகை நிகழ்த்தி உலக்க்கோப்பை தன் 35வது வயதுக்கு மேல் இந்திய அணியில் இடம்பெறவில்லையா? நடக்கும். ஆனால் இதுவரை வாய்ப்பு மறுக்கப்படுவது சதித்திட்டத்தாலோ பாரபட்சத்தாலோ அல்ல எனும் தெளிவு அவருக்கு இருக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...