முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"நிழல் பொம்மை" - அதிகார விளையாட்டு

நண்பர் கணேஷ் பேஸ்புக்கில் இந்தப் பகுதியைப் பகிர்ந்திருந்தார்:

'நிழல் பொம்மை' நாவலில் இருந்து 

சிறிது குரூரம் எனக்குள் வந்ததற்குக் காரணம் யார், பொய்களைப் புனைந்து சுயநலத்தைப் பேணலாம், அதுவே சாமர்த்தியம் என என்னை நம்ப வைத்தது யார்?.

அடிமைகளைக் கட்டி வைத்து சாட்டையால் அடித்துக் கட்டுப்படுத்தும்போது பௌதீக விடுதலையே அவர்களுக்குப் போதும். சுதந்திரமாகத் திரியவிட்டு அவர்களுடைய சிந்தனையை, மன அமைப்பை மாற்றித் தமக்கேற்றபடி ஒருவர் ஒழுங்குபடுத்தும்போது மீளவே முடியாத அடிமைப் பள்ளத்தாக்கில் அவர்கள் விழுகிறார்கள்.

பள்ளத்தாக்கில் அலையும் கண்ணற்றவர்கள் ஒற்றைப் பார்வைகொண்ட பெருந்திரளாக மாற்றப்படுவது, அவர்களை யாரோ குன்றின் மேல் ஏறி நின்று கண்காணித்து வழிநடத்தி திருப்தி கொள்வது, அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்து அவர்களின் திசையை மாற்றிவிட்டு அதன் விளைவுகளை ரசிப்பது, அவர்கள் பரஸ்பரம் மோதிக்கொள்ளாமல் ஒழுங்கமைவை உறுதி செய்வது, அவர்கள் தற்செயலாக வழி கண்டுபிடித்துத் தப்பித்துவிடாமல் பார்த்துக்கொள்வது, 

அன்றாடத்தின் அற்பமான மகிழ்ச்சிகளின்
பாற்பட்டு பிரதான இலக்கை அவர்கள் மறந்துவிடச் செய்வது.

நான் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே சச்சிதானந்தர் அதிகாரத்துக்கு வந்தார். விரைவிலேயே சச்சிதானந்தரே லோகோஸ், லோகோஸே சச்சிதானந்தர் எனும் அளவுக்கு அவர் சூழலை மாற்றினார். சொல்லப்போனால் அங்கு வேலை பார்த்தவர்கள், படித்தவர்கள் எல்லாருமே அனேகமாக தம்மையே லோகோஸ் என்றும், சச்சிதானந்தர் என்றும் கருத ஆரம்பித்தார்கள்.

எங்களையே அறியாமல் அவரது அசைவுகளுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் அசைவுகளை உருமாற்றிக்கொண்டோம். நாங்கள் பொம்மலாட்டப் பாவைகள் எனில் அவரே எங்களை அசைக்கும் விரல்கள் அவ்வப்போது நாங்கள் அவரது அசைவுகளை மீறித் தன்னிச்சையாக அசையவும், எங்கள் நிழல்கள் எங்கள் நகர்வுக்கு ஏற்ப அசைவதைக் கண்டுகளிக்கவும் செய்தோம். திரும்ப காற்றில் விரல்களின் அழுத்தங்களை, எழுச்சிகளைக் கண்டு எங்களை மீண்டும் தகவமைத்து ஒழுங்கமைவின் பகுதியாக்கிக்கொண்டோம். இதற்கு நடுவே நாங்கள் எங்களைக் கண்டுகொண்டோம். சில நேரங்களில் கண்டுகொள்ள முடியாமல் மேலும் சீரழிந்து போய் மனம் துவண்டோம்.
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...