முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழின் சாகசப் படங்களின் பிரச்சினை

அண்மையில் "சிவாஜியைப்" பார்த்தபோது படத்தில் கதையே இல்லையென்று தோன்றியது. ஆனால் சிவாஜி கேரக்டர் கிராபை நன்றாகப் பண்ணியிருந்தார்கள். கறுப்புப் பணத்தை அவர் வெளிநாட்டுக்கு அனுப்பி திரும்ப வாங்கி நலத்திட்டமாக முதலீடு பண்ணியதும் படம் முடிந்துவிடுகிறது. உபரியாக வரும் ஆக்‌ஷனெல்லாம் சும்மா என்று நினைத்தேன். ஜெண்டில்மேனில் இதே பிரச்சினை - ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் ஹீரோவின் want தீர்ந்துபோகிறது. ஷங்கர் படங்களின் பெரிய குறை இது - அதாவது KGFஇன் கிளைமேக்ஸ் ஷங்கர் படங்களில் இடைவேளையின் போது வந்துவிடும் அதன் பிறகு இருப்பதைக் காப்பாற்ற ஹீரோ எதிர்கொள்ளும் சவால்கள் அலுப்பூட்டும். ஏனென்றால் அவை கதையின் பகுதியல்ல. ஷங்கர் காவிய நாயகனாக ஹீரோவைக் காட்ட வாழ்வின் பல கட்டங்களாக கதையை அமைக்கிறார். இது அவரது பலவீனம். 

 நீங்கள் பழைய எம்.ஜி ஆர் படங்களைப் பார்த்தால் இச்சிக்கல் கதையில் இருக்காது. "ஆயிரத்தில் ஒருவன்" சிறந்த உதாரணம். ஹீரோவின் want மக்களை கொடுங்கோன்மையில் இருந்து காப்பாற்றி தன்னை தலைவனாக அறிய படத்தின் கடைசி கட்டம் வரைத் தேவைப்படும். Rambo, Enter the Dragon மாதிரி ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களுக்கும் இதைச் சொல்லலாம். தமிழில் "சத்திரியனை" எடுத்துக்கொண்டால் வில்லனை நாயகன் கைது பண்ணியதும் வில்லன் திரும்ப அடிக்கிறார், நாயகன் வீழ்கிறான், கிளைமேக்ஸில் அவன் தனது தனிப்பட்ட எல்லாவற்றையும் விட்டாலே சரியாக வெல்ல முடியும் எனப் புரிந்துகொண்டு வில்லனைக் கொல்லும்போது கிளைமேக்ஸ் வருகிறது. ரஞ்சித்தின் "சார்ப்பட்ட பரம்பரையையிலும்"  இவ்விசயத்தில் (want) சரியாக அமைத்திருப்பார்கள். ஆனால் நாயகனின் உள்ளார்ந்த "அச்சத்தை" (need) - அப்பாவின்றி வளரும் இளைஞனின் பதற்றம், போதாமை - எப்படி அவன் எதிர்கொள்கிறான் என்பதை இயக்குநர் சரியாக எழுதவில்லை. 

ரெண்டாயிரத்துக்குப் பிறகு எழுதப்பட்ட பல சாகசப் படங்களில் இப்பிரச்சினை இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...