சீமானின் பேச்சையும் பபாஸி தலைவரின் ஊடக சந்திப்பு குற்றமன்னிப்புக் கோரலையும் கேட்டேன். சீமானுடைய போதையில் பேசப்பட்ட ஆபாச உளறல. சீமான் பேச்சுக்கெல்லாம் கருத்துரிமை கோருகிறவர்களை கடலில் தான் வீசவேண்டும். கருத்துரிமை சமூகத்திற்குப் பயனுள்ள விசயங்களையும் அறிவையும் பகிரத்தான். பணம் வாங்கிக்கொண்டு பேச்சு ரௌடியிஸம் பண்ண அல்ல.
எனக்கென்னவோ இந்த பபாஸி மூஞ்சிகளைப் பார்த்தால் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. சீமானும், வேடியப்பனும் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் குமுறும் இவர்கள் அரசியல் தலைவர்களையோ அரசியல் பேச்சாளர்களையோ அனுமதித்திருக்கக் கூடாது. தனிப்பட்ட புத்தக மேடையென்றாலும் கூட அனுமதிக்கலாம். புத்தகக் காட்சி விழாவில் கூடாது. ஏனென்றால் அது பொதுமேடை. அடுத்து சீமான் என்ன பேசுவார் என்று இவர்களுக்குத் தெரியாதா? எனக்கென்னவோ இவர்கள் தெரிந்தே பாஜக கிளையின் அழுத்தத்தினாலோ அங்கு இருக்கையில் துண்டுபோட்டு வைக்கவோ தான் அனுமதி கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் இவர்கள் நினைத்தால் அப்பேச்சை ஆரம்பத்திலேயே கண்டித்து நிறுத்தியிருக்கலாம், சரியான தமிழ் தாய் வாழ்த்தை ஒலிக்கும்படி கட்டாயப்படித்தி நிகழ்வை மீண்டும் நடத்தியிருக்கலாம். முக்கியமாக, குடித்துவிட்டு வந்த அவரை மேடையிலே ஏற்றியிருக்கக் கூடாது. அக்காரணத்தைச் சொல்லியே வெளியேற்றியிருக்க வேண்டும். இயல்பிலேயே உளறும் ஒருவர் கடும் போதையில் எப்படிப் பேசுவார்? இவர்களுக்கு இதெல்லாம் தெரிந்தே நிகழ்ந்திருக்கிறது. வேறென்னவோ திரைமறைவில் நடந்திருக்கிறது. பிரச்சினை கைமீறிப் போனதும் ஊடக சந்திப்பில் வந்து ஒப்பாரி வைக்கிறார்கள். இப்படியான பொறுப்பற்றவர்கள், சுரணையற்றவர்கள், மூடர்கள் தலைமைப் பொறுப்பை அலங்கரிபதை வேறெங்கும் பார்க்க முடியாது.
இன்னொரு விசயம்: கூட்டத்திற்காகவும் (அதுவும் மொத்தமாக நூறு பேர்தான்) செல்வாக்குக்காகவும் பட்டிமன்ற பேச்சாளர்களை இலக்கிய விழாக்களுக்கு நாம் அழைத்தபோதே இந்த சீரழிவு ஆரம்பித்துவிட்டது. இனி யிடியூப் பிரபலங்கள், இன்புளுவன்ஸர்கள், முழுமூடர்கள் எல்லாம் மேடையை ஆக்கிரமிப்பார்கள். அதை ஆட்டிடம் பெட்டி வாங்கிக்கொண்டு
அரசியல் தேவைக்காக பயன்படுத்துகிறவர்களும் வருவார்கள். அரசு முதலில் பிரச்சினையின் அடிவேரைக் கண்டு களைய வேண்டும் - இலக்கிய மேடைகளில் கரகாட்ட கோஷ்டிகளை ஏற்றிவிட்டால் தொடர்ந்து அரசியல் பினாமிகள், குடிகாரர்கள், அடியாட்களும் வருவார்கள். முதலில் கொசுவை அனுமதித்தால் அடுத்து கரபான்பூச்சி, அதைத் தொடர்ந்து எலி, அடுத்து பெருச்சாளி, பாம்பெல்லாம் வரும்.
அதனால் முதலில் கொசு மருந்தடிக்க வேண்டும். தேங்கிய நீரை அகற்றி இடத்தை சுத்தமாக வைக்கவேண்டும். இலக்கியவாதிகளும் ஆய்வாளர்களும் தத்தமது உலகத்துள் உரையாடி, சண்டையிட்டு மக்களுக்கு கற்பிப்பார்கள். பணம் வாங்கிக்கொண்டு அவதூறு செய்யமாட்டார்கள்.
Comments