இதனால்தான் சசி தரூரை ஒரு மோசமான அரசியல்வாதி எனக் கருதுகிறேன். ஏன் இத்தனை லட்சம் பேர்கள் புலம்பெயர்கிறார்கள், ஏன் இங்கிலாந்து கடும் பொருளாதார சரிவைச் சந்தித்தாலும் வெள்ளையர்கள் வேலை தேடி இந்தியாவுக்குப் படையெடுப்பதில்லை, நம் நிலைமை அவ்வளவு கேவலமாக இருக்கிறதா எனும் கேள்வியை அவர் எழுப்ப வேண்டும். இதில் சட்டத்தின் நியாயங்களை ஒரு வக்கீலைப் போலப் பேசிக்கொண்டிருக்கிறார் அவர். குமாஸ்தா மனநிலையை அவர் என்றாவது கைவிட வேண்டும். துன்பப்படும் மக்களின் மனநிலையில் இருந்து பிரச்சினையைப் பார்க்க வேண்டும்.
குடிபெயர்வு என்பது சட்டரீதியாகவோ சட்டத்தை மீறியோ ஒரு தேசத்தின் செவுளில் அடிக்கிற செயலாகும். மக்கள் அந்தளவுக்கு நொந்து போனாலே சொந்த மண்ணை விட்டு வெளியேறுவார்கள். (மென்பொருள் பொறியாளர்கள் மட்டுமே விதிவிலக்கு.)
சன் நியூஸில் சுமந்த் சி ராமன் இந்த மக்களை அமெரிக்கா கைவிலங்கிட்டு அனுப்பியது தவறில்லை, அது அமெரிக்காவின் விருப்பம், அம்மக்கள் குற்றவாளிகள் தாமே என்பதாகப் பேசுவதைக் கேட்டேன். நெறியாளர் குணசேகரனின் இடத்தில் நான் இருந்திருந்தால் அந்த கணமே செருப்பைக் கழற்றி அவரை அடித்திருப்பேன். இவர்களிடம் எல்லாம் நியாய தர்மத்தோடு நிதானமாக உரையாடக் கூடாது!

Comments