முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சடங்குகள் மீதான நீயா நானா விமர்சனம்

சடங்குகளுக்கும் அர்த்தங்கள் உண்டு.
அவை மானுடவியல் நோக்கில் உளவியல் நோக்கில் அணுக வேண்டியவை.
கொஞ்சம் தொ.ப. வை வாசியுங்கள்.
பகதவத்சல பாரதியை வாசியுங்கள்..

தொல் பழங்குடி சமூகத்தின் எச்சங்கள் தான் நம் சில சடங்குகளில் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன.
இவை மானிடவியல் நோக்கில் அணுக வேண்டியவை.
இச்சடங்குகளை தலைமுறையாக கடத்தி வந்ததில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது.
ஏன் இதைச் செய்கிறோம் என்று பெண்கள் தெரிந்து செய்யவில்லை என்பதால் அதைச் " சடங்கு" என்றழைக்கிறோம்.

பண்பாட்டு ஆய்வாளர்கள் இதை " தொல்படிமவியல்" என்பார்கள். இது உளவியலோடு தொடர்புடையது.
தொல்படிமம் என்பது வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு மனித குலத்தின் மூளையில் பதிந்த பண்பாட்டுத் தடயங்களின் சாரமாகவும், மரபு வழியாக வரும் கூட்டு நனவிலி (Collective unconsciousness) மனத்தின் வடிவமாகவும், மனித குலம் அதன் வெவ்வேறு காலகட்டங்களைச் சந்தித்த வகை மாதிரியான எண்ணற்ற அனுபவங்களின் உளவியல் நிலையிலான எச்சமாகவும் கொள்ளப்படுகிறது.

இதைப் பற்றிய எந்த ஒரு புரிதலும் இல்லாமல் ரொம்பவும் மேம்போக்காக பேசுவதைக் காணும்போது
நம் புரிதல் என்னவாக இருக்கிறது! என்பதைத்தான் இவை வெளிப்படுத்துகின்றன.

- புதிய மாதவி

######

கடந்த வார நீயா நானாவைப் பார்த்தபோது நானும் இதையே உணர்ந்தேன். சடங்குகள் மூடத்தனமானவை, மக்களை அவை அடிமையாக்குகின்றன என்பதே ரொம்ப பழைய மேம்போக்கான கருத்துதான். சடங்குகள் அடிப்படையில் மனிதர்களை இணைக்கின்றன, சேர்ந்து செயல்படும் நம்பிக்கையை, உற்சாகத்தை அளிக்கின்றன. அந்த பிணைப்பு உடையும்போது மனிதர்கள் சிதறி மைக்ரோ குடும்பங்கள் பிறக்கின்றன. அதனாலே அடுத்தவர்களின் அழுத்தத்தினால் சடங்குகளில் ஈடுபடுவதாக நாம் உணர்கிறோம். ஆனால் இன்னொருவருக்காக நாம் ஏன் ஒன்றைச் செய்யக் கூடாது? 

சரி அப்படியே செய்ய வேண்டாம் என்றால் விலகி தனியாக இருக்கலாம். தவறில்லை. ஆனால் பின்பற்றுகிறவர்களை மூடநம்பிக்கையாளர்கள், பெண்களை அடிமைப்படுத்துபவர்கள் என்றெல்லாம் பொருள்படப் பேசுவது வன்முறை. அது தனிமனிதர்களை அல்ல, சமுக அமைப்பையே கேலி செய்து தகர்க்கும்படி கோருகிறது. நாம் அந்த இடத்தில் இலக்கியம், அரசியல் சமூக இயக்கங்களை உருவாக்கி ஒன்றாகச் செயல்பட்டால் சரி. ஆனால் அங்கு நாம் வெறுமனே 9-9 உழைக்கிற தனியர்களையும், மன அழுத்ததையும், சுரண்டலையும், காங்கிரீட் சிறைகளையுமே உருவாக்கியிருக்கிறோம். நல்ல காற்று, உணவு, போதுமான இடவசதி, பேசப் பழக  களங்கள் இல்லாத நமது நகரங்கள் மனித மனத்தை சிதைக்கின்றன. இத்தகைய சமூகங்களிலே சர்வாதிகாரமும் வெறுப்பரசியலும் தோன்றும் என இரண்டாம் உலகப்போர் கால ஜெர்மனியை வைத்து ஹேனா அரெண்ட் கூறுகிறார். சமூகரீதியான மதத்தின் வீழ்ச்சியிலும் நவீன சமூகத்தின், பெரும் அரச மதத்தின் எழுச்சியிலுமே தான் பாஸிசம் உருவெடுக்கிறது. இந்து மதத்தை வீழ்த்தியே இந்துத்துவா தோன்றுகிறது. கும்பமேளாவில் நம் பிரதமர் கடவுளை அல்ல, தன்னைத் தான் முன்வைக்கிறார். அதுதான் நவீன சமூகம். அங்கு தனிப்பட்ட அந்தரங்க மதம், சடங்குகளுக்கு இடமிருக்காது. அதனிடத்தில் மதம் அரசியல்பட்டதாக, கொள்கை வயப்பட்டதாக இருக்கும். உண்மையானப் பகுத்தறிவு இந்த நுட்பமான வித்தியாசத்தைப் புரிவதே. 

மேலும் எல்லா பெண்களும் ஆண்களுக்காக சடங்குகளைச் செய்வதாகச் சொல்ல முடியாது. சிறுதெய்வ வழிபாட்டில் மிகத்தீவிரமாக இருக்கும் பல பெண்கள் குடும்பப் பொறுப்புகளையே கூட சிலநேரம் உதறிவிடுவார்கள். இந்த ஆத்ம பந்தமே அவர்களை விடுவிக்கிறது. 

நான் நீயா நானா நிகழ்ச்சி வறட்டுப் பகுத்தறிவுவாதம் பேசுவதாகச் சொல்லவில்லை. அடுத்து உடனே பக்தர்களை அழைத்து ஆடிப்பாடி ரகளையாக ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் கோபிநாத்துக்கும் சாமி வருவதாகக் காட்டிவிடுவார்கள். எல்லா பக்கமும் நிற்பார்கள். டாக்டர் ஷாலினி கடைசியில் வராதவரை எல்லாமே சரியாகத்தான் போகும்.

- ஆர். அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...