முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கைஜோசியக்காரர்


 

மலையாள இயக்குநர், திரைக்கதையாளர், நடிகர் ஶ்ரீனிவாசன் தன் இளமையில் நடந்த ஒரு சம்பவத்தை சில ஆண்டுகளுக்கு முன்பான நேர்முகத்தில் சொல்கிறார் ("நேரே சொவெ"). அவர் அப்போது சினிமாவுக்கு வரவில்லை. அந்த உத்தேசமும் திட்டமும் கூட இல்லை. தனக்குப் பார்ப்பதற்கு சினிமாவுக்கான லட்சணமும் இல்லையென்றே அப்போது நினைக்கிறார். ஒருநாள் அவரது நண்பர் அவரைப் பிடிவாதமாக கைரேகை ஜோசியரிடம் கூட்டிப் போகிறார். இந்த ஜோசியர் துணிகட்டி மறைத்த ஓரிடத்தில் தரையில் அமர்ந்து கை பார்க்கிறவர். அவர் ஶ்ரீனிவாசனின் கையைப் பார்த்துவிட்டு "இந்த ஆள் சினிமாவில் ஏதோ ஒரு துறையில் வேலை பார்த்து பெரும் புகழும் அங்கீகாரமும் பெறுவார்." என்கிறார். ஶ்ரீனிவாசனுக்கு நக்கல் புன்னகை அரும்புகிறது. அவர் தன் நண்பரை சிரிப்புடன் பார்க்க அவரோ அமைதியாக இருக்கிறார். ஜோசியர் தொடர்ந்து "இவர் இந்தியாவின் உச்சப்பொறுப்பில் இருக்கிறவரின் கையில் இருந்து விருதைப் பெறுவார்" என்கிறார். ஶ்ரீனிவாசன் இந்த நபர் பெரிய மோசடிக்காரர், இதெல்லாம் நடக்கிற கதையா என்று நினைக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஶ்ரீனிவாசன் அந்த ஜோசியர் சொன்ன எல்லா சிறப்புகளையும் தகுதிகளையும் பெற்று விடுகிறார். ஆனால் ஜோசியர் சொன்னது என்பது அவர் நினைவிலேயே இல்லை. அவர் பகுத்தறிவாளர் என்பதால் தன் உழைப்பு, முன்னேற்றம் எனும் கணக்கிலேயே நினைக்கிறார். அவரது "சிந்தா விஷ்டயாய ஷ்யாமளா" எனும் திரைப்படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கிறது. அப்போது அவர் ஊரில் மகிழ்ச்சியாக காரில் சென்று கொண்டிருக்கும்போது மேற்சொன்ன துணியால் மறைக்கப்பட்ட ஜோசியக்காரரின் இடத்தைக் கடக்கிறார். அது சூனியமாக இருக்கிறது. அவருக்கு ஒரு கணம் எல்லா நினைவுகளும் மனதில் வந்து போகின்றன.

நேர்முகம் காண்பவர் அவரிடம் "நீங்கள் இதன்பிறகு ஜோசியத்திலும் கடவுளிலும் நம்பிக்கை கொண்டவராகிறீர்களா?" எனக் கேட்கிறார்.
"நான் என்றுமே கோயிலுக்குப் போனதில்லை என்பதால் அப்படி நடக்கவில்லை. நான் எப்போதுமே கடவுளை ஏற்பதில்லை. ஜோசியத்தையும்தான். கைபார்த்து துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் ஆயிரத்தில் ஒருவரே இருப்பார்கள். ஆனால் நம் வாழ்வில் ஒவ்வொன்றையும் இப்படி முன்கூட்டி தீர்மானிக்கிறார் யாரோ எனும் எண்ணம் எழுந்தது." என்கிறார்.
பொதுவாக எதெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததோ அதெல்லாம் வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும் வண்ணமும் சேர்க்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...