நீங்கள் ஒரு கவிஞராகவோ சிறுகதையாளராகவோ சமூகவலைதளப் பதிவராகவோ இருக்கலாம். மனத்தில் வரும் எண்ணங்களை, உணர்வுகளை, பிம்பங்களை உங்களால் சொற்களில் வடிக்க முடியுமெனில் உங்களால் நாவல் எழுதவும் முடியும். எல்லார் இதயத்துள்ளும் ஒரு நாவல் உண்டு, ஆனால் அது அங்கே இருப்பதுதான் நல்லது என கிறிஸ்டபர் ஹிட்சன்ஸ் சொன்னார். ஆனால் ஒரு படைப்பாளிக்குள் புதைந்திருக்கும் படைப்பை அடையாளம் கண்டு, அதை நெறிப்படுத்த வகுப்புகளும், தகுதியான ஆசிரியரும் உதவ முடியும். என்னுடைய நாவல் வகுப்பில் சேர்ந்து மூவர் தம் நாவல்களை முழுமையாக முடித்திருக்கிறார்கள். இரண்டு நாவல்கள் பிரசுரமாகி உள்ளன. மேலும் பலர் 50% மேல் எழுதியிருக்கிறார்கள். இரு மாத காலத்திற்கு இது கவனிக்கத்தக்க சாதனை.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments