Skip to main content

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (ஆ)

 4) வண்டியை ரெட்ரோ பிட் (இரு சக்கரங்களையும் ஷாப் அப்சர்வர்களையும் இணைத்து கியரை வலப்பக்கம் லிவராக மாற்றி வைத்துக்கொடுப்பது) செய்தபிறகுதான் நான் முதன்முதலாக கியர் மாற்றக் கற்றுக்கொண்டேன். அதுவே அந்த பட்டறையின் முகப்பில்தான் வண்டியில் அமர்ந்து முதல் கியருக்கு மாற்றி ஓட்டிப் பார்த்தேன். முதலில் ஸ்டால் ஆனது. ஆனால் தொடர்முயற்சியில் பத்து நிமிடங்களிலே முதல் கியர் வசப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது கியர்களுக்கு மாற்றி ஓட்டுவது சிரமாக இருந்தது. முதலில் ஓட்டும்போது சில அடிப்படைகள் தெரியாததால் (எந்த வேகத்தில் கிளட்சைப் பிடித்து கியரை மாற்ற வேண்டும், ஏற்றத்தில் எந்த கியரில் வண்டியை எடுக்க வேண்டும், திடீரென எதிரில் வண்டி வந்தாலோ போக்குவரத்து நெரிசல் தோன்றினாலோ என்ன செய்வது) குழம்பிப் போனேன். என்னால் நிச்சயமாக வீட்டுக்கு வண்டியை எடுத்து வரமுடியாது எனத் தெரிய (அதாவது என அசட்டுத் தைரியம் வடிந்ததும்) அங்குள்ள ஒரு மெக்கானிக்கிடம் உதவி கேட்டேன். அவர் ஒரு சிறிய கட்டணத்துக்கு வண்டியை எடுத்து வந்துவிட்டார். இரு நாட்களுக்குப் பிறகு என் நண்பர் ஒருவர் வந்து கியர் மாற்றச் சொல்லித் தந்தார். முதல் கியரில் இருந்து இரண்டாவது கியரில் ஓட்டினேன். அவ்வப்போது ஸ்டால் ஆனது என்றாலும் தடுமாறாமல் இரண்டு முறைகள் என் வீட்டைச் சுற்றியுள்ள சில தெருக்களை அடைந்தேன். போகும்போது ஒரு பைக்கை உரசினேன், மற்றபடி யாரையும் இடிக்கவில்லை. ஆனால் மூன்றாவது கியருக்குப் போக முடியவில்லை. அதன்பிறகு நண்பர்களைச் சார்ந்து மட்டும் பைக் கற்றுக்கொள்ள முடியாது, முறையான பயிற்சியாளர் அவசியம் எனத் தோன்றியது. பைக் ஓட்டச் சொல்லித் தரும் பயிற்சியாளர்களை அழைத்தால் அவர்கள் பைக்கை அவர்களுடைய இடத்துக்கு எடுத்து வரச் சொன்னார்கள். நான் எடுத்து வருவேன் சார், ஆனால் வழியில் பல விபத்துகள் நடக்குமே எனச் சொன்னதற்கு அவர்கள்விரைவில் தொடர்பு கொள்கிறோம்என்று சொல்லி மாயமாகிவிட்டார்கள். கடைசியில்ஹீல்ஸ் ஆன் வீல்ஸ்எனும் பயிற்சிப் பள்ளியினர் கேட்டதும் ஒப்புக்கொண்டனர்


5) பவன் என்பவர் என் வீட்டுக்கே வந்தார். தாம் மைதானங்களில் ஓட்டப் பயிற்சி அளிப்பதில்லை, சாலைகளே சரியான பயிற்சிக்களங்கள் என்றார். நான் வண்டியை வெளியே எடுத்து வழக்கம்போல முதல் கியரைப் போட்டு அவரையும் பின்னால் ஏற்றிக்கொண்டேன். இரண்டாவது கியருக்கு வந்தேன். தெருக்களைச் சுற்றினோம். அவர் எதிர்பாராதவிதமாக என்னைப் பிரதான சாலைக்குப் போகச் சொன்னார். நான் உலகின் அத்தனைக் கடவுள்களையும் அழைத்து வாகன ஓட்டிகளைக் காப்பாற்றக் கேட்டுக் கொண்டு பிரதான சாலையில் இறங்கினேன். பைக் ஓட்டுவது ஒருவிதத்தில் சுலபம்தான் எனத் தோன்றியது - பயிற்சியாளர் பின்னிருந்து கியரை மாற்ற அறிவுறுத்திக் கொண்டிருந்தார்: 15 கிலோமீட்டர் தாண்டியதும் கிளட்சைப் பிடித்து இரண்டாவது கியர், 25-30 கிலோமீட்டர் வந்ததும் மூன்றாவது கியர் இப்படி. வாகனங்கள் எனக்கு முன்னால் நின்றதும் வேகத்தைக் குறைத்தால் என் வண்டி ஸ்டால் ஆவது, அதிக கியரில் வேகம் குறைந்தால் வண்டி ஏதோ வயிற்றுப் போக்கு வந்த வயிற்றைப் போல கடமுடாவெனச் சத்தம் போடுவது (knocking), ஏற்றத்தில் வண்டி நின்றால் பின்னுக்கு உருள்வது எனப் புதுப்புதுப் பிரச்சினைகள் தலைகாட்டின. (பதற்றத்தில் என் சட்டை நனைந்துவிட்டதென்றாலும் தைரியமாக இருப்பதாக பாவனை செய்தேன்.) அவர் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு சொன்னார் (ஸ்டால் ஆனால் கவலைப்படாமல் வண்டியைக் கிளட்சைப் பிடித்து ஸ்டார்ட் செய்வது, சிலநேரங்களில் கியரைக் குறைத்து ஸ்டார்ட் செய்வது, ஏற்றத்தில் முதல் கியரை போடுவது, வேகத்தைக் குறைக்கையில் அப்படியே கியர்களையும் குறைப்பது இப்படி). ஆனால் அவரது அறிவுரைகளை நினைவில் வைத்து செயல்படுத்துவது வரவில்லை. அவர் பின்னிருந்து என்னை நிதானப்படுத்தினார். முக்கியமான விசயங்களை மட்டும் அவ்வபோது சொல்லிக் கொடுத்தாலும் நான் தவறுசெய்வதை அவர் பொருட்படுத்தவில்லை. இது என்னை அமைதியாக்கியது. நான்காவது கியர் வரைப் போனேன். புரியாத உச்சரிப்பில் பேசும் ஆங்கிலேயர்களுடன் தலையசைத்தபடி உரையாடுவதைப் போல போக்குவரத்தையும் சாலையையும் சமாளித்து வண்டியை ஓட்டி வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்ததும் அவர் சொன்னார், “உங்களுக்கு இன்னும் ஒரு நாள் பயிற்சி போதும். வெள்ளிக்கிழமை காலையில் வருகிறேன்.” அட, என்னாலே நம்ப முடியவில்லை. “என்னது ஒருநாளா?” “ஆமா. எத்தனையோ பேர்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ள நான் சொல்கிறேன், நம்புங்க, உங்களுக்கு இன்னும் ஒருநாள் போதும்.” “ஒருநாளுக்குப் பின் நான் தினமும் சாலையில் ஓட்டலாமா?” “தாராளமா”. பல்லவிஇவரை நம்பி பின்னால் உட்கார்ந்தால் என் உயிருக்கு உத்தரவாதம் உண்டா?” என்று பலமுறைகள் கேட்டார். அவர் பாகிஸ்தான் யுத்தத்தின்போது நம் ராணுவ தளபதிகளைப் போலஒண்ணுமே இல்ல, தைரியமா ஏறிப் பாருங்கஎன்றார். அவரது நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது - நான் முரட்டுத்தனமான தன்னம்பிக்கை கொண்டவன் என்பதால், அவர் அப்படிச் சொன்னது பிடித்திருந்தது. கொஞ்சம் மனம் வைத்தால் ராக்கெட்டையே ஓட்டலாம் என நம்புகிறவன் நான். ஆனால் பல்லவி சுலபத்தில் நம்பவில்லை. ரெண்டாவது நாள் பயிற்சியும் முடியட்டும் எனக் காத்திருந்தேன். ஆனால் அவர் சொன்ன நாளில் அதன்பிறகு வரவில்லை.  


(தொடரும்)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...