முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"கால்கள்" நாவல் கிண்டில் பதிப்பு

 


வைத்தியர் ஊரில் வந்த நாளில் இருந்தே சேகரித்த எண்ணற்ற நண்பர்களில் ஒருவனாக ஒருநாள் தேங்காய் நார், வர்ணம் இழந்து அவனது உடல் நிறம் ஒட்டிக் கொண்ட துவர்த்து, தேங்காய் எண்ணெய் வாசனையுடன் குளியல் தயாரிப்புடன் வாசல் படிக்கட்டி அமர்ந்து அவளை நோக்காமல் வைத்தியரிடமும், சில சமயம் அவளிடம் துணுக்குகளாய் பேசிக் கொண்டிருந்தான். வாக்கியங்களை முடிப்பதில் ஒருவித சோம்பல் அவனுக்கு. பாதியில் கைவிட்டு மற்றொன்றுக்கு தாவி அதிலும் சுவாரஸ்யம் இழந்து
அவளுக்கு நடந்து பழக மரக்கட்டைகளால் கைப்பிடி அமைக்க ஒரு புது யோசனையுடன் அன்று வைத்தியர் வந்திருந்தார். முன் தினம் சைக்கிள் ஓட்டும் பயிற்சி அவளது கால்களை வலுப்படுத்தும் என்று ஆற யோசித்து அப்பாவிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அப்பாவுக்கு அது ரொம்ப பிடித்திருப்பதாய் தலையாட்டினார். அவளது உடல்நலம் பற்றிய அலோசனைகளில் அதிகப்படியாய் வினோதமாக கற்பனாதிதமாக உள்ளவை கேட்டால்தான் அப்பா மிகவும் ஆர்வம் கொள்வார். சைக்கிள் ஓட்டுவதென்ன மரம் ஏறுவது இன்னும் அற்புதமான யோசனையாக அவருக்கு தோன்றியிருக்க கூடும். “பண்ணீருவோம் வைத்தியரே” என்று திரும்ப திரும்ப சொன்னார்.
அடுத்த நாளான அன்று வைத்தியர் சைக்கிளை தற்காலிகமாய் மறந்திருந்தார். “முதலில் பிடிச்சு நடந்து ”கொஞ்சம் பெலம் வரட்டும் ... என்ன சொல்றீங்க” கரகர என்ற குரலில் விக்கி விக்கி சிரித்தார். அப்படி சிரித்தால் அமோதிக்க வேண்டும் என்று பொருள். இல்லா விட்டால் விட்டு விட்டு பொறி தெறிக்கும் எந்திர சக்கரம் போல் சிரித்துக் கொண்டே இருப்பார்.
அப்பா “ஆமா ஆமா ... எனக்கு அவ நடந்து பாத்தா போதும்” என்றார். அப்போது தான் கார்த்திக் குறிக்கிட்டு “சைக்கிள வாடகைக்கு ... ம்ம்ம் பரவாயில்ல திரும்ப கொடுத்திரலாம் ... அப்போ செல்லப்ப ஆசாரியை ... ” என்று இழுத்தான்.
அவன் கவனமாய் அவளை பார்ப்பதை தவிர்த்தான். ஆனால் அவள் எழுந்து முட்டி ஊன்றி ஓரடி எடுத்து வைத்ததும் அவனது திரும்பி அமர்ந்த உடலில் ஒரு திடுக்கிடல், நடுக்கம், அக்கறை. “செல்லப்பன் கிறுப்பு பயலப்பா. நமக்க தங்கச்சி பிள்ளைக்கு கட்டிலு செய்ய ரெண்டு நாள் வந்தான். மூணா நாள் ஆளு மாயமாயிட்டான். கட்டிலு இன்னும் வீட்டில அரைகுறையா கிடக்கு, மூணு காலோட. எங்க தேடினாலும் தொட்டி ராஸ்கலு கையில கிடைக்க மாட்டேங்கான். வேலை சுத்தம் இல்லடே அவனுக்கு”.
“ஒரு காலுதானே ... வீட்டுப்பக்கத்துல ஐயப்பன் இருக்கான்லயா .. கின்னரன் கேட்டீங்களா அனுப்பட்டுமா ... மூட்டீருவான் சில்லறை கொடுத்தா போரும் சைக்கிள எடுத்து வைச்சிருக்கேன் ராமப்பன் கடையில இருந்து. திரும்ப விட்டிரலாம் தான். நீங்க சொன்னீங்கன்னு தான் எடுத்து வந்தேன்” கார்த்திக் பதற்றமாயிருக்கையில் ,மட்டுமே இப்படி பேசுவான் என்பதை கவனித்தாள்.
அப்பா குறுக்கிட்டார் “பிள்ளே திரும்பி நேரே இருக்கணும். எந்த பங்கமும் வராது. திரும்புங்க மது ஒரு குழந்தைதானே”. அவன் நெளிவது முதுகுப் பக்கம் தெரிந்தது. அவன் அவ்வாறு மதுவுக்கு முதுகு காட்டி அமர்வது அப்பாவை வெறுப்புற வைத்திருக்க வேண்டும்.
அவளிடம் பழக ஆரம்பித்த பின் கருணையின் அரண் கொண்டு அவன் தன்னை பாதுகாத்து கொண்டான். பின்னர் இப்படியான பதற்றம் அவள் அருகாமையில் அவனுக்கு ஏற்படவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...