முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புரவி இலக்கியக் கூடுகை 3


 

புரவியில் நான் கலந்து கொண்ட இரண்டாவது கூடுகை. கடந்த சனியும் ஞாயிறும் ஒசூரில் உள்ள தேன்கனிக்கோட்டையில் ஒரு குன்றின் மீது அமைக்கப்பட்ட ஆசிரமத்தில் நடந்தது. கோடையின் வறட்சி என்னுடைய ஆற்றலையும் உலர வைத்தாலும் மிகுந்த உற்சாகமான இரு நாட்களாக அது அமைந்தது. நான் முதல் நாள் தாமதமாகப் போனதாலும், இரண்டாவது நாள் தாமதமாக எழுந்ததாலும் இரண்டு அமர்வுகளைத் தவற விட்டேன். நான் கலந்து கொண்ட அமர்வுகளில், குறிப்பாக சூழலியல், சிறார் இலக்கியம் ஆகியவற்றில், பலவற்றைக் கற்றுக் கொண்டேன். இம்மாதிரிச் சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் சூழலில் இருந்து நிறைய உத்வேகத்தை உறிஞ்சிக் கொள்ள, என் அகத்தின் மின்கலத்தை மின்னேற்ற உதவும். அதனால்தான் சிரமம் பார்க்காமல் போவது அவசியம் என நினைத்தேன். அவ்வாறே நடந்தது.

இன்னொரு விசயம் நான் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் என் நாவலில் நாயகனின் மனைவியின் பாத்திரம் வருகிறது. அவளது பின்னணியை, பாத்திர வார்ப்பை மாற்ற முடிவெடுத்தேன். அவ்வாறே கதையிலும் சில மாற்றங்கள் செய்தேன். இது கதைக்கு புதிய ஒரு பரிமாணத்தை அளித்தது. ஆனாலும் அதன்பிறகு அவளது பெயர் அவளது காலகட்டத்துக்குப் பொருத்தமாக இல்லையே என்று தோன்றியது. கூடுகையின் முதலாவது நாள் அரவிந்தன், பா.வெங்கடேசனுடன் அரட்டையடிக்கையில் இதைக் குறிப்பிட்டேன். எனக்கு எழுபதுகளின் பெயர் ஒன்று வேண்டும். பா.வெ ஒரு பெயரைப் பரிந்துரைத்தார். அது இனிமையாக இருந்தது. பொருந்துமா எனத் தெரியவில்லை என யோசித்துக் கொண்டு இரவு நேரப் பாட்டுக் கச்சேரிக்குப் போனேன். அங்கு வைக்கப்பட்டிருந்த படங்களைக் கண்டதும் ஒரு பெயர் மனத்தில் எழுந்து வந்தது. அன்றிரவே தூங்கச் செல்லும் முன் நாவலில் அவளது பெயரை எல்லா இடங்களிலும் மாற்றினேன்.
இப்படி ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒன்றை, மறக்க முடியாத ஒன்றைத் தருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.