Skip to main content

Posts

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஒரு கவிதை வாசிப்புப் பயிலரங்கு

ஒரு தோழி நவீன கவிதை வாசிக்க நான் கூட இருந்தேன். அவர் படிக்கப் படிக்க தன் அபிப்ராயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் "உங்களுக்கு இன்னும் சரியாகப் படிக்கத் தெரியவில்லை. ஒரு கவிதையில் உடனடியாகத் திறந்து கொள்ளாத பல தளங்கள் இருக்கும். கற்பனையால் விரிக்க வேண்டிய இடங்கள் இருக்கும். கற்பனையில் கண்டதைத் தெளிவாகச் சொல்லவும் ஒரு மொழி இருக்கிறது. இதை முறையாகக் கற்றுக் கொள்ளலாம்." என்று சொன்னேன். அவர் எப்படி என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. ஏன் இதை ஒரு இணையப் பயிலரங்காக நடத்தக் கூடாது? அதில் அவரைக் கலந்துகொள்ளச் சொல்லிவிட்டேன். என்னுடைய திட்டம் ஐந்து பகுதிகளாக தலா 45 நிமிடப் பயிலரங்குகள். 45 நிமிடம் முடிந்ததும் 15 நிமிடங்கள் கேள்வி-பதில். கவிதைக்கு பெரிய சந்தை மதிப்பில்லை என்பதால் கவிஞர்கள், கவிதை வாசகர்களிட கட்டணம் வாங்குவதில் அர்த்தமில்லை. ஆகையால் இது முழுக்க இலவசம்தான். நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கிறேன். ஏற்கனவே கவிதை எழுதுவதற்கான வகுப்புகளை நடத்தி இருக்கிறேன். ஆனால் இது அப்படியானது அல்ல. என் நோக்கம் இங்கு கவிதையெழுதச் சொல்லித் தருவதல்ல. வாசிப்பதற்கு...

துன்பமின்றி துன்பத்தை எழுதுவது

புக்காவஸ்கியை வாசிப்பது எப்போதுமே மிகச்சிறந்த மதுவை அருந்தும் அனுபவம். அவரது மிகச்சிறந்த படைப்புகள் செக்ஸில் திளைப்பதற்கு ஈடான புலனின்பத்தைத் தருவதுண்டு. ஆனால் "ஹாலிவுட்" ஒரு தரமான மது மட்டுமே. ஒரு நாவலாக இது எழுந்து வரவில்லை. அவரது அனுபவங்களின் குறிப்புகள் அவரது திரைக்கதை படமாக்கப்பட்டதை ஒட்டித் தொகுக்கப்பட்டுள்ளன. படத்துக்கான திட்டமிடலிலும் துவங்கி படம் எடுத்து வெளியாகி அதை ஒரு மாதத்திற்குப் பின் புக்காவஸ்கி ஒரு திரையரங்கில் குறைவான பார்வையாளர்கள் மத்தியில் பார்த்துவிட்டு ஒருவித நிறைவற்ற நிறைவுணர்வுடன் வெளிவருவதுடன் நாவல் முடிகிறது. ஆனால் அது சரியான முடிவு அல்ல. நாவலின் மையச் சிக்கலை அவர் கண்டடையவே இல்லை. முழுக்கவே வெளியுலகின் அலைகழிப்புகள் மத்தியில் அவர் தன்னைக் கண்டடையும் தத்தளிப்பு தெரிகிறது. ஒரு படைப்பாளியாக அவரது வலிமை இந்த அகவுலகம்தான். அவரது அந்தரங்கமான அன்றாட உலகம்தான். சினிமா உலகின் பல சிக்கல்களை, வேடிக்கைகளை, அபத்தங்களை, தனிமனிதர்களுக்கு அது இழைக்கும் கொடூரங்களைப் பற்றிப் பேசும் கவனம் புக்காவஸ்கியின் ஆதாரமான நெருக்கடிக்குள் நாவலைக் கொண்டு செல்ல விடாமல் தடுக்கிறது....

இன்னொரு மனம்

  இந்நூலுக்கு இந்த வாரம் மட்டுமே ஆச்சரியமாக இருவர் விரிவாக விமர்சனம் செய்துள்ளார்கள். ஒருவர் என் நீண்டகால நண்பர். சக-எழுத்தாளர். திகட்டத் திகட்டப் பாரட்டித் தள்ளிவிட்டார். அரைமணிநேரம் போனில் புத்தகத்தை இரண்டு முறைகள் தான் படித்ததையும், அது தந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். இன்னும் நிறைய பேரைப் படிக்கச் சொல்லப் போகிறேன் என்றார். நிறைய எழுத வேண்டும் எனும் உற்சாகம் பாராட்டுக்களில் இருந்தே கிடைக்கின்றன. அவர் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும். அடுத்தது மா. அண்ணாமலையின் விரிவான நேர்மையான விமர்சனம். அவருக்கும் என் அன்பு. நான் இன்னொன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் - எழுதுவது குறித்து, எழுத்தாளராக இருப்பது குறித்து எனக்கு இப்போதுள்ள கேள்விகளும் கவலைகளும் முற்றிலும் வேறாக மாறி வருவதை உணர்கிறேன். எழுத்துக்கும் மரணத்துக்குமான, எழுத்துக்கும் இல்லாமல் போவதற்கும், தன்னையே அழிப்பதற்குமான தொடர்பு என்னவென்று சிந்திக்கிறேன். காலம் என்னை மிகவும் பயமுறுத்துகிறது. ஆச்சரியமாக என் நண்பரான ஒரு அயல்மொழிக் கவிஞரும் இதே கவலையுடன் சதா இருப்பார். நான் அவரைக் கிண்டல் செய்வேன். இப்போது அது என்னையும் தொற்றிக் க...

"எழுத்தாளராக இருப்பது எப்படி?" - மா. அண்ணாமலை விமர்சனம்

  நூல் : எழுத்தாளராக இருப்பது எப்படி? ஆசிரியர் : ஆர். அபிலாஷ் வெளியீடு : எழுத்து பிரசுரம் பக்கங்கள் : 332 வகை : துறைசார் நூல் எழுத்தாளர் என்ற ஒற்றை வார்த்தையை சிறு செடியாய்க் கொண்டு 332 பக்கத்தில் கிளைகள், சிறுகிளைகள், குறுங்கிளைகள் என அடர்த்தியான ஒரு பெருமரமாய் வளர்த்திக் காட்டியுள்ளார் அபிலாஷ். அபிலாஷிடம் எனக்குள்ள சிக்கலே இருமுறை படிக்க வைப்பது. இந்நூலையும் அவ்வாறே செய்வித்தார். அந்தளவிற்கு தரமானதுதான். எழுத்துத்துறை பற்றி இதற்கு முன்னர் சி. சரவண கார்த்திகேயனின் 'ரைட்டர் ' நூலும், பாராவின் 'எழுதுதல் பற்றிய குறிப்புகளும்' அறிமுகமாகி இருந்தன. இரண்டுமே தன் அனுபவ குறிப்புகள். இந்நூலும் அனுபவங்களை அடிக்கடி பேசினாலும் ஒரு எழுத்தாளனின் சிக்கல்களை ஆழ்ந்து பேசி இருப்பதால் அவற்றிலிருந்து வேறுபடுகிறது. கூடவே தத்துவார்த்தமான பார்வையும் இணைந்து தமிழ் இலக்கிய, வெகுஜன ‍ , வணிக எழுத்தாளர்களின் இருப்பைப் பேசுகிறது. ஒரு எழுத்தாளனை எழுதுவதற்கு ஆயத்தப்படுத்தி; அவன் எழுத்துக்களை வளர...

சில கேள்விகள்

  சாரு "அன்பு" நாவல் குறித்த நிகழ்ச்சியொன்றி ஆற்றிய உரையொன்றில் சொல்கிறார்: "யாரையும் திருத்த முயலாதீர்கள். சமூகத்தை மாற்ற முயலாதீர்கள். யாரிடமும் அன்பு காட்டுகிறேன் எனக் கட்டுப்படுத்தாதீர்கள். உங்களால் உங்களை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். அதைச் செய்யுங்கள் போதும்." நான் இக்கூற்றைக் குறித்தே சில நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். சில கேள்விகள் இதை ஒட்டி எழுகின்றன. சுலபத்தில் விடை கிடைக்காத கேள்விகள்: பிறரிடம் அக்கறை செலுத்தும்போது அதில் இயல்பாகவே ஒரு வன்முறை செயல்படத் தொடங்குகிறது. இதை எப்படித் தவிர்க்க முடியும்? தன்னை பிறருக்காக வதைப்பதே வாழ்தலுக்கு, இருத்தலுக்கு விரோதமானது, இது ஒட்டுமொத்தச் சமூகத்தை குற்றவுணர்வில் ஆழ்த்தி வாழ்வை எந்திரத்தனமாக்குகிறது என்று கர்த்தரைக் குறித்து நீட்சே சொல்கிறார். சமூக அக்கறை, அறம் சார்ந்த மதிப்பீடுகளை எங்கே வைப்பது? மற்றமையின் அறத்தைப் பொருட்படுத்தாமல் உன் அறத்தில் கவனம் செலுத்து என சாரு சொல்கிறாரா? இதை அறவியலில் எப்படிப் பரிசீலிப்பது? 'என்னால் யாருக்கும் தீங்கு வராமல் கவனமாகத் தவிர்க்கிறேன், அதுவே என்னால் இயன்ற நன்மை...

மரணத்தின் சாளரம்

  நான் தினமும் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சில நிமிடங்களில் அல்லது வினாடிகளில் தற்கொலை செய்து இறந்து போகும்போது அதுவரை அவர் இறந்ததன் பொருள் என்ன, நாம் இருப்பதன் பொருளென்ன எனும் அதிர்ச்சியான கேள்விகள் தோன்றுகின்றன. நாகார்ஜுனர் சொல்வதைப் போல வாழ்தலும் சாதலும் நிபந்தனைக்கு உடபட்டதுதானா எனக் கேள்வி எழுகிறது. எதுவும் தன்னளவில் 'இருப்பதில்லையா'? இந்தக் கேள்வி நமது காலத்தை உபயோகமாகச் செலவழிக்க மிகுந்த உத்வேகம் தருகிறது. செயலுக்குள் மட்டுமே நம்மால் சர்வ நிச்சயமாக உண்மையாக இருக்க முடிகிறது. நமது பிரக்ஞையும் உடலும் ஒரு புள்ளியில் இணையும் செயலில். பூமியின் ஒவ்வொரு துடிப்பிலும் நாம் நமது அகத்தை அறியச் செய்யும் செயலில். அது நமக்கு மகிழ்ச்சியும் அளிப்பதானால் அதிலேயே முடிந்தளவுக்கு அதிகமான நேரத்தை, முடிந்தளவுக்கு உண்மையுடன் செலவழிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மரணம் நமக்கென திறந்து காட்டும் சாளரத்தின் வழி எனக்கு இது மட்டுமே தெரிகிறது. இச்சாளரத்தின் வெளியே தென்படும் அங்கீகாரம், புகழ், செல்வாக்கு, சமூகத்தொடர்பு வலை, ஆதரவு, பயண வாய்ப்புகள், மேடை வாய்ப்புகள் முக்கியமாகத் தோன்றவில்லை. மரணத்தின் ...

தேசிய அல்லது சர்வதேச மதிப்புள்ள விருதுகளை எப்படித் தோற்றுவிக்கிறார்கள்?

  முதலில் தேசிய விருதுகள். இவை தொடர்ந்து அரசியல் சாய்வாலோ செல்வாக்காலோ மதிப்பிழந்து வந்தாலும் சாகித்ய அகாடெமி போன்றவற்றின் மதிப்பு அடிப்படையில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக சில நல்ல படைப்பாளிகளுக்கு அது விருதளித்துள்ளது, அதை நமது தேசியம் அங்கீகரிக்கிறது என்பதாலே உருவாகிறது. ஒவ்வொருமுறை மோசமான படைப்பாளிகள் தேர்வு செய்யப்படும்போதும் அது மதிப்புக் குறைவதைக் காண்கிறோம். தேர்வு சரியானதும் மதிப்பும் கூடுகிறது. அகாடெமியின் தேர்வுகள் மீதுள்ள புகார்கள், பரிந்துரைகள் நியாயமானவை. அதையெல்லாம் நடைமுறைப்படுத்த நாம் சரியான நபர்களை அரசியலில் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான நபர்கள் அகாடெமிக்குள் சென்று நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும். இந்தியர்களின் முக்கியமான பிரச்சினை நாம் நேர்வழியை ஏனோ நம்புவதில்லை. தொடர்ந்து நாம் புறக்கணிப்பட்டதாக, நாம் அதிக மதிப்புக்குத் தகுதியானவர்கள் என நம்புகிறோம். நமது வாசகச் சூழலும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். இயல்பாகவே வாய்ப்புக் கிடைத்து உள்ளே போகும் சிலர் குறுக்குவழியில் தமக்கும் தமக்குச் சார்பானவர்களுக்கு விருது வாங்கிக் கொடுக்க விழைகிறார்கள். சிலநேரங்களில் கட்சிக் க...