Skip to main content

Posts

Showing posts from September, 2014

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஜெயா வழக்கு தீர்ப்பும் அதிமுகவினரின் நாடகமும்

ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என்பது ஒரு முக்கியமான தீர்ப்பு. அந்த நீதிபதியின் குசும்பைப் பாருங்கள். 3 வருடம் என்றால் இன்றே ஜாமீன், அல்லாவிட்டால் இன்றைக்காவது சிறையில் இருப்பார் என ஒரு வருடம் கூட்டிக் கொடுத்துள்ளார். ஏனென்றால் தண்டனை பெயருக்குத் தான், ஜெயலலிதா ஜெயிலில் தண்டனை அனுபவிக்க மாட்டார் என அவர் அறிவார். அதனால் குறைந்தது ஒன்று ரெண்டு நாளாவது உள்ளே இருக்கட்டும் என நினைத்திருக்கிறார் போலும்.

பிச்சை ஏன் ஒரு தொழிலாக இல்லை?

தி.நகரில் ஒரு நாற்பது வயதுள்ள பெண்ணைப் பார்த்தேன். நடைபாதையில் நின்று வருவோர் போவோரிடம் தன் தீயில் கருகிய முகத்தை காட்டி பிச்சை கேட்டார். ஒரு சிலர் கொடுத்தனர். கொடுக்காத போது அவரது முகம் கோபத்தில் கோண முணுமுணுத்தார். அது சரியாய் வியாபாரம் ஆகாத கடைக்காரரின் எரிச்சல் போல் இருந்தது. அல்லது மேலாளரிடம் தேவையின்றி திட்டு வாங்கிய பி.பி.ஓ ஊழியனின் முகபாவம் போல். அவரிடம் நியாயமாய் வேலை செய்யும் ஒருவரின் தன்னம்பிக்கை இருந்தது. கருகின முகம் தவிர அவரது மிச்ச உடல் வலுவாக ஆரோக்கியமாக தோன்றியது. சொல்லப் போனால் தன்னைக் கடந்து பையை இடுக்கி, வியர்வை கசகசக்க கொண்டையை அசைத்தபடி நடந்து வீட்டுக்கு போகும் அலுவலக பெண்களை விட வலுவாக இருந்தார்.

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனைப் பெண்களும் அறம் பற்றின சில கேள்விகளும்

கோலாப்பூரை சேர்ந்த அஞ்சனா பாய் ஒரு திருடி. அவர் ஒரு லாரி ஓட்டுநரை மணந்தார். அவர் ஓடிப் போனார். அதன் பின் அவர் மோகன் என்பவருடன் வாழ்ந்தார். அஞ்சனா பாய்க்கு இரு பெண்கள்: ரேணுகா மற்றும் சீமா. போலீஸ் அடிக்கடி வீட்டுக்கு வந்து தொந்தரவு பண்ண மோகன் தாங்க முடியாமல் தன் திருட்டு மனைவியை விட்டு இன்னொரு பெண்ணை மணந்து இரு குழந்தைகள் பெற்றுக் கொண்டார். கணவன் பிரிந்த பின் அஞ்சனா திருட்டுத் தொழிலை தன் இரு பெண்களுடன் இன்னும் மும்முரமாக செய்தார். ஒருநாள் திருடும் போது பிடிபடுகிறார். அப்போது அவரது பெண்ணின் குழந்தை கீழே விழுந்து விட கூட்டத்தின் கவனம் கலைகிறது. இந்த இடைவெளியில் மூவரும் தப்பிக்கிறார்கள். அன்று அஞ்சனா கூட்டத்தில் திருடும் போது குழந்தைகளை வைத்திருந்தால் பொதுமக்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என உணர்கிறார். அதற்காக அவர் குழந்தைகளை கடத்தி பயன்படுத்துகிறார். பிடிபடும் போது குழந்தையை காட்டி இரக்கத்தை உருவாக்கி தப்பிக்கிறார்.

ஜென் பிரக்ஞை

எஸ்.ஆர்.எம் பல்கலையில் நடந்த பிரக்ஞை பற்றின கருத்தரங்கில் இன்று பேசினேன். அதன் எழுத்து வடிவம். மேற்கத்திய உளவியலில் மனதை மூன்றாக பிரிக்கிறார்கள் Conscious – போத மனம் Subconscious - ஆழ்மனம் Unconscious - நனவிலி கீழைத்தேய மரபில் நமக்கு அப்படி ஒரு பிரிவு இல்லை. நாம் பொதுவாக பிரக்ஞையை உணர்தல் எனும் பொருளில் புரிந்து கொள்கிறோம். அதாவது ஒரு கூட்டத்தின் பகுதியாக, இயற்கையின் பகுதியாக உணர்தல். மேற்கத்திய மரபில் மனிதனை சமூகத்தின் ஒரு தனிக்கூறாக பிரித்து பார்க்கிறார்கள். அவனுக்கு ஒரு தனி அடையாளம் உண்டு. அவன் தனிமனிதன். அவன் தனியாக தன் பார்வையில் இருந்து சிந்திக்கிறான். சிந்தித்து உலகை தொகுத்துக் கொள்கிறான்.

உம்மத்

சர்மிளா சய்யதின் “ உம்மத் ” நாவல் படிக்கும் போது இது என் பாணி எழுத்து என மனதில் சட்டென பட்டது . அவரது   பொறுமையாய் நிதானமாய் மனதின் போக்குகளை படம் பிடிக்கும்விதமாய் கதை சொல்லும் விதம் பிடித்திருக்கிறது . இவ்வகை நாவல்கள் இப்போது அருகி விட்டன .

புத்தரும் அவர் மனைவியும்

நேற்று அண்ணா நூலகம் போனேன். தமிழ் நூல்கள் ரெண்டாவது நிலையில். நான் தவறுதலாய் மூன்றாவது நிலைக்கு போய் விட்டேன். அங்கே தத்துவ நூல்கள் இருக்கும். சரி படிப்போமோ என தேடி எடுத்தேன். புத்தர் பற்றின மூன்று புத்தகங்கள். அதில் ஒன்று புத்தரின் வாழ்க்கையின் கதைகள். சின்ன நூலாய் அழகாய் இருந்தது. எழுதியவர் பெயர் சின்னதாய் கீழே போட்டிருந்தார்கள். கவனிக்கவில்லை. உள்ளே மிக அழகான படங்கள் இருந்தன. வழவழ தாள்கள். கெட்டி அட்டை. இங்கிலாந்தில் பதிப்பித்திருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களுக்கான நூல் என நினைத்துக் கொண்டேன். போக போக மொழி இவ்வளவு கவித்துவமாய் கூர்மையாய் இருக்கிறதே என நினைத்தேன். அதனோடு ஒரு அபாரமான சரளத்தன்மையும். பின்னட்டையை பார்த்தேன். ஓஷோவின் ஒரு மேற்கோள். ஓஷோவை ஏன் போட்டிருக்கிறார்கள் என முன்னட்டையை கவனமாய் பார்த்தால் ஓஷோவின் நூல் அது. அட!

வாசிப்பின் ஆறு பலன்கள் – ஆர்.அபிலாஷ்

1. வாசிப்பு மொழி வளத்தை அதிகரிப்பதால் சரளமாக பேசுவதற்கு உதவும். என்னுடைய வகுப்பில் பல மாணவர்கள் தமிழில் கூட நினைத்ததை சொல்ல முடியாது திணறுவதை பார்க்கிறேன். ஆனால் வாசிப்பு பழக்கம் உள்ள மாணவர்கள் சரளமாக தன்னம்பிக்கையாக பேசுகிறார்கள்.

மனித குணம் இயல்பா வளர்த்தெடுப்பதா? (Nature versus Nurture ): ஒரு விவாதம்

கேணி கூட்டம் பற்றின என் விவாதத்தை ஒட்டி நண்பர் எம்.ராஜா எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினார். அதற்கு எனது பதிலும் அவரது எதிர்வினையும் மனித குணம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பது பற்றி நல்ல விவாதமாக அமைந்தது. இந்த கடித பரிவர்த்தனைகளை அவரது அனுமதி பெற்று பிரசுரிக்கிறேன்:

சன் டிவியில் எனது பேட்டி

கேணி கூட்டம்: ஒரு கேள்வியும் பதிலும்

நான் கேணி கூட்டத்தில் போன ஞாயிறு பேசினதை ஒட்டி பிரேம் என்பவர் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். இது முக்கியமான விவாதமாக படுவதால் அவரது அனுமதி பெற்று என் பதிலையும் சேர்த்து பிரசுரிக்கிறேன். வணக்கம் அபிலாஷ், நேற்று நடைபெற்ற கேணி கூட்டத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இருந்தேன். Extemporic ஆக இருந்தாலும் அது ஒரு சிறந்த உரையாகவே இருந்தது. ஆனால் கருத்தின் பின்புலத்தில் எனக்கு சில முரண்பாடுகள் உள்ளன.

மலைச்சொல் சார்பில் அபிலாஷிற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம் - லக்‌ஷ்மி சரவணகுமார்

எழுத்தாளனாய் வாழ்வது குடும்பத்துக்கு செய்யும் துரோகம் தான் . முன்பாக மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதையிலிருந்து … “ யாரைப் பார்த்தாலும் ஒட்டுவேன் என் கால்களின் ஆல்பத்தில் எல்லாக் கால்களையும் பெட்டிக்கடியில் ஒளித்து வைத்துவிடுவேன் அந்நியர் பார்த்துவிடாமல் என் போலியோ கால்களை மட்டும் ….” இது ஊனமுற்ற ஒருவரின் வலியைச் சொல்வதாக இருந்தாலும் அவர்களின் உலகை எப்போதும் தன்னிரைவு அற்றதாகவும் நம்பிக்கையற்றதாகவும் மாற்றிவிடுகிறது . ஆனால் அபிலாஷின் எழுத்துக்கள் இதில் இருந்து வேறு ஒன்றை நமக்குக் காட்டுவதாய் இருக்கிறது . அபிலாஷின் எழுத்துக்களில் மிகுந்திருப்பது வாழ்வையும் சமூகத்தையும் ஊடறுக்கும் பார்க்கும்

கால்கள் நாவலுக்கு ஒரு கடிதம்

(இக்கடிதம் ஒரு நல்ல விமர்சனமாகவும் இருப்பதால் எழுதியவரின் அனுமதி பெற்று வெளியிடுகிறேன்) அன்புள்ள அபிலாஷ் வாழ்த்துக்கள் . உங்களுக்கு இளம் எழுத்தாளர் பரிசு கிடைத்ததற்கு மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் . உங்களுடைய இன்றிரவு நிலவின் கீழ் நூலையும் படித்தேன் , நல்ல முய்ற்சிகள் . இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி மேன்மேலும் படைப்புத் துறையிலும் எழுத்திலும் வெற்றிகளை ஈட்டுக . உங்கள் கால்கள் நாவலை எங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் .

இந்தியா அடுத்த உலகக் கோப்பை வெல்லுமா?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றியை ஒட்டி சச்சின் இந்திய அணியால் அடுத்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மட்டையாட்டம் வலுவானது. பந்து வீச்சு சுமார். களத்தடுப்பு செம கூர்மை. ஆனால் உலகக் கோப்பை ஒரு நீண்ட தொடர். அதில் தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும். எல்லாவிதமான பந்து வீச்சுகளையும் சமாளிக்க வேண்டும். தொடர் முழுக்க நன்றாக ஆடி விட்டு ஒரு ஆட்டத்தினால் இறுதி சுற்றுக்கு போக முடியாத அணிகள் உண்டு.

ஒரு கடிதமும் பதிலும்

இரு வட்டங்கள்: உள்ளே வெளியே //நான் பொதுவாக எனக்கு வரும் கடிதங்களை பிரசுரிப்பதில்லை. அவை தனிப்பட்ட பரிவர்த்தனைகள். ஆனாலும் சிலவேளை ஆழமான கேள்விகளை எழுப்பும் கடிதங்கள் வரும். அவற்றை பிரசுரிப்பதன் மூலம் நல்ல ஒரு விவாதத்தை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அதில் ஒன்று கீழே தாமஸ் சூசன் எழுதியிருப்பது. அவருக்கான என் பதிலையும் இங்கு தந்திருக்கிறேன். (முறையாக அவரிடம் அனுமதி பெற்றே பிரசுரிக்கிறேன்)//

பேஸ்புக்கும் ஜெயமோகனும்

“ எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா ?” என்ற ஜெ . மோவின் கட்டுரை படித்தேன் . அவர் சொல்வது போல் பேஸ்புக் எழுத்தாளனின் மொழியை தட்டையாக்கும் என நான் நம்பவில்லை . எழுத்து நடை உங்கள் ஆளுமையின் வெளிப்பாடு . ஆளுமை மாறாவிட்டால் அதுவும் மாறாது .

எனக்கு இன்னும் மனம் பேதலிக்கவில்லை

மூன்று வகையான வாழ்த்துக்கள் உள்ளன. எனக்கு யுவ புரஸ்கார் கிடைத்ததை ஒட்டி பேசிய ஆட்கள் மூலம் தெரிந்து கொண்டேன். ஒன்று என்னை வாசிக்கிறவர்களின் வாழ்த்துக்கள். நான் இதை மதிக்கிறேன். அவர்கள் என் குடும்பம் போல. ரெண்டாவது என்னைத் தெரிந்த, ஆனால் என்னை வாசிக்காதவர்களின் வாழ்த்துக்கள். அவர்கள் நான் கபடிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றாலும் இதே போல் வாழ்த்துவார்கள். அவர்களின் அன்புக்காக நன்றி கூறி ஏற்றுக் கொண்டேன்.  அடுத்து நான் யாரென்றோ என்ன எழுதுகிறேன் என்றோ தெரியாமல் பத்திரிகையில் என் படம் பார்த்து அழைத்து வாழ்த்துபவர்கள். இவர்களிடம் பேசத் தான் ரொம்ப சங்கடமாக இருந்தது. நான் முன்னர் ஒரு மலையாளப் படம் பார்த்தேன். குருவாயூர் கோயில் மண்டபத்தில் கூட்டமாக பல ஜோடிகளுக்கு திருமணம் நடக்கும். அதில் ஒரு அவசரத்தில் ஒரு ஜோடி மாறி விடும். நாயகனுக்கு அப்படி ஒரு அழகான பெண் மனைவியாவாள். அப்பெண் மிக கடுப்பாகி அவனுடன் பேசவோ வாழவோ மறுப்பாள். இந்த பெண்ணைப் போலத் தான் இந்த மூன்றாவது வகை வாழ்த்தாளர்கள்.

நகுலன்: ஒரு ஆளுமை, பல பார்வைகள் - ஆர்.அபிலாஷ்

இன்மை.காமில் நகுலன் சிறப்பிதழுக்காக அவரைப் பற்றி எழுத்தாளர்களிடம் பேட்டி எடுத்த போது இவ்வளவு வேறுபட்ட கருத்துக்கள் தமிழில் வேறெந்த கவிஞனைப் பற்றியும் எழுமா என வியப்பேற்பட்டது. சில எழுத்தாளர்களை அவர்களின் பின்புலம், சிந்தனைப்பள்ளி, அரசியல் சார்ந்து வெறுக்கலாம். படிக்கலாமலேயே நிராகரிக்கலாம். கடுமையாக திட்டலாம். அது போல் கொண்டாடலாம். ஆனால் வெவ்வேறு விதமாய் ஒருவரது கவிதைகளை வாசகன் வாசித்து அர்த்தப்படுத்துவது, அதன்வழி பல முரண்பட்ட கருத்துநிலைகளை அடைவது என்பது வேறு. நகுலனுக்கு இது நிகழ்கிறது.