முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உம்மத்


சர்மிளா சய்யதின்உம்மத்நாவல் படிக்கும் போது இது என் பாணி எழுத்து என மனதில் சட்டென பட்டது. அவரது  பொறுமையாய் நிதானமாய் மனதின் போக்குகளை படம் பிடிக்கும்விதமாய் கதை சொல்லும் விதம் பிடித்திருக்கிறது. இவ்வகை நாவல்கள் இப்போது அருகி விட்டன.


ஒரு கதையை விறுவிறுப்பாய் வேகமாய் சொல்ல வேண்டும் எனும் வணிக பாணி இன்று இலக்கிய, இடைநிலை நாவல்களில் வேரூன்றி உள்ளது. பல நாவல்கள் ஒரு சின்ன நீண்ட கதையை போல் உள்ளன. சில நாவல்கள் சினிமா திரைக்கதை போல் உள்ளன. ஆனால் நாவல் என்பது மனதின் பல்வேறு விரியும் தன்மைகளை படம் பிடிக்கும் எழுத்துவகை. ஆக அது இயல்பாகவே முடுக்கி விட்ட பொம்மைக்கார் போல் ஓடாது. பொறுமையாய் சென்னை டிராபிக் போலத் தான் நகரும். ஆனால் நிச்சயம் அலுப்பு தட்டாது. ஒரு நல்ல நாவலுக்கு சாவகாசமான தளர் ஓட்டம் முக்கிய குணம். அப்போது தான் நின்று நிதானமாய் கவனித்து பதிவு பண்ண இயலும். ”உம்மத்சரியான வேகத்தில் எழுதப்பட்டுள்ளது பிடித்திருக்கிறது. இயல்பாகவே இப்படியான நாவல்கள் பேஸ்புக், இணைய பயனர்களின் அதிரடி பரபரப்பை தூண்டாது. ஆனால் நாவல் என்பது இணையத்தில் ஆவி பறக்க அள்ளித் தின்பவர்கள் மட்டுமே படிக்கிற வஸ்து அல்லவே! இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் வெளியே! எப்போதுமே வெளியே இருப்பவர்கள் தாம் என்னைப் பொறுத்தவரையில் முக்கியம்.
ஸ்ர்மிளா சய்யித் ஏற்கனவே கவிஞர் என்பதால் அவரது உரைநடைக்கு ஒரு தனி அழகு கூடியிருக்கிறது. அங்கங்கே வழுக்குத் தரை போல் தோன்றினாலும் பொதுவாக மனதை மீட்ட வைக்கும் மொழி அவருக்கு கை கூடியிருக்கிறது. அவரது நாவல் தொடர்ந்து மனதை பற்றி பேசுகிறது என்பது எனக்கு பிடித்த இன்னொரு விசயம். இன்று புற உலக நாவல்கள் அதிகமாகின்றன. அதில் தவறில்லை. இத்தகைய நாவல்கள் சிலவேளை வெறும் பத்திரிகை அறிக்கைகளின் தொகுப்பு போல் ஆகின்றன. ஈழப்போர் பற்றின அறிக்கை நாவல்களும் வரலாம். ஆனால் ஈழப்போரில் சம்மந்தப்பட்ட சில பெண்களின் மன வாழ்க்கையை பேசுவதும் முக்கியம் தான்.  
“உம்மத்” படிக்கும் போது அறுபதுகளில் இங்கு எழுதப்பட்ட நாவல்கள், மொழியாக்க ரஷ்ய நாவல்கள் நினைவு வருகின்றன. நாம் மெல்ல மெல்ல இழந்து வருகிற ஒரு நாவல் வகையை மீட்டு வருகிறார் ஸர்மிளா.

இன்னொரு சந்தர்பத்தில் “உம்மத்” பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...