குமுதத்தில் வெளிவரும் எனது கிரிக்கெட்டோகிராஃபி தொடரில் அசருதீன் பற்றி எழுதுவதற்காய் இணையத்தில் தகவல்களை
தேடிக் கொண்டிருக்கையில் அசர் பற்றின ஆலன் லேம்பின் ஒரு மேற்கோள் மாட்டியது. அவர் கூறுகிறார்:
“அசருதீனுக்கு பேட்டிங்
என்பது சம்போகம் போல. அவர் பாட்டுக்கு வந்து செய்து விட்டு கிளம்பி விடுவார்”
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments