
நேற்று குமுதம் ஆசிரியர் ப்ரியா
கல்யாணராமன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்: “உங்கள் ஸ்டைல் நன்றாக உள்ளது. நல்ல
வரவேற்பு”. அதைப் படிக்க மிகவும் உற்சாகமாய் இருந்தது. எடிட்டர்கள் சுலபத்தில் பாராட்ட
மாட்டார்கள். அவர்கள் சந்தேகக் கண் கொண்ட மனைவியைப் போல. அதனால் தான் எனக்கு எடிட்டர்களின்
பாராட்டுச் சொற்கள் தனி மகிழ்ச்சி தரும். நான் இதுவரை இலக்கிய பத்திரிகைகளில் மட்டுமே
எழுதி வந்திருக்கிறேன். அதனால் வணிக பத்திரிகை ஆசிரியர்களுக்கு இலக்கிய ரம்பத்தால்
அறுத்து விடுவானோ என பயமாய் இருக்கும். “ரொம்ப இலக்கியத்தனமா எழுதாதீங்க” என கையை அழுத்தமாய்
குலுக்கி சொல்வார்கள். ஆனால் ப்ரியா கல்யாணராமன் ”கிரிக்கெட்டோகிராஃபியில்” என்னை சுதந்திரமாய்
எழுத அனுமதித்தார். முதல் சில கட்டுரைகள் தவிர என் மொழியை திருத்தாமலே பிரசுத்தார்கள்.
என் மொழி ஒரு வணிக பத்திரிகையிலும் உறுத்தாமல் உள்ளது என்பதில் திருப்தி. ப்ரியா கல்யாணராமனுக்கு
என் நன்றிகள்.
Comments