தில்லி டேர் டெவில்ஸ் அணியின்
ரிஷப் பண்ட் எனக்கு இளம் யுவ்ராஜ் சிங்கை நினைவுபடுத்துகிறார். டிரைவ் மற்றும் கட்
ஷாட்களின் அந்த பவர், கால் பக்கம் அவர் அடிக்கும் flicky ஷாட்கள். கூடுதலாய் பண்டிடம்
அபாரமான கற்பனையும் உள்ளது. இன்றைய சன் ரைஸர்ஸுக்கு எதிரன ஆட்டத்தில் முஸ்தபீசுரின்
இரண்டு கால் பக்க புல்டாஸ்களை அவர் மிட் ஆனுக்கும் மிட் விக்கெட்டுக்கும் இடையில் மணிக்கட்டை
சொடுக்கி அபாரமான இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். முன்பு ஜெ.பி டூமினி தென்னாப்பிரிக்காவுக்காய்
டெஸ்ட் போட்டிகளில் முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் ஆடும் போது அடித்த ஷாட்கள் நினைவு
வருகின்றன. அடுத்த மூன்று வருடங்களில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் ஆட வேண்டும். இல்லாவிட்டால்
நஷ்டமே!
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்