வாசக சாலை அமைப்பு வரும் சனிக்கிழமை நடத்தும் விவாத நிகழ்ச்சியில் என் நாவலான “கதை முடிவுக்கு வந்து விட்டீர்களை” தேர்ந்தெடுத்துள்ளார்கள். பொதுவாக இந்த அமைப்பினர் தம்மைக் கவர்ந்த படைப்பை தான் தேர்ந்தெடுப்பார்கள். முழுக்க அகவயமான தேர்வு. போன முறை அவர்கள் காலபைரவன் கதைகள் பற்றின உரையாடல் நடத்தின போது நான் கலந்து கொண்டு பேசினேன். கால பைரவனை யாரும் கவனிக்காத வேளையில் இவர்கள் அவரது படைப்புகளின் முக்கியத்துவத்தை நினைவுறுத்தி நிகழ்ச்ச்சி நடத்தினார்கள் என்பது முக்கியம். சனிக்கிழமை கட்டாயம் வந்து விடுங்கள் நண்பர்களே!
மேலதிக விபரங்கள் விரைவில்....

கருத்துகள்