முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (8)



Image result for நான் கடவுள் திரைப்படம்

(எனது தொண்ணூறுகளின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

1)   16. மலையாள சினிமாவில் எழுத்தாளர்களின் பங்கு அதிகம். அங்கு நிறைய நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அப்படியான சூழல் தமிழில் இல்லாதது குறித்து ஒரு எழுத்தாளராக உங்களுக்கு வருத்தம் உண்டா?


ஆர். அபிலாஷ்: யாருக்குத் தான் மலையாள பண்பாட்டுச் சூழலைக் கண்டு விசனம் இருக்காது? அங்கு சுமாரான படைப்பாளிகளுக்குக் கூட பெரும் அங்கீகாரமும் கவனமும் கிடைக்கிறது. சினிமாவில் திரைக்கதையாளனாய் மட்டுமே வசதியாய் புகழுடன் வாழ முடியும். நம்மால் பெருமூச்சு மட்டுமே விட இயலும்.

17. தமிழின் மிகத் தீவிரமான எழுத்தாளர்கள் எல்லாம் சினிமாவில் வசனம் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம் திரைப்படக் கலை மேன்மை அடைகிறதா? அல்லது எழுத்தாளர்கள் தங்கள் சாரத்தை இழந்துவிடுகிறார்களா?

ஆர். அபிலாஷ்: எழுத்தாளன் எப்போதுமே சாரம் இழப்பதில்லை. அவன் கொலை செய்து சிறை சென்றாலும் சோரம் போவதில்லை. பிறகு சினிமா எப்படி அவனை மாற்று குறைக்கும்? இது தமிழில் நிலவும் ஒரு மூட நம்பிக்கை மட்டுமே.

தமிழில் திரை எழுத்தாளர்களுக்கு தனித்த இடம் என்றுமே இருந்ததில்லை. மலையாளத்தில் பரதன் போன்ற இயக்குநர்கள் கூட திரைக்கதைப் பொறுப்பை திரை எழுத்தாளர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். திரைக்கதையை தம் கற்பனையில் காட்சிபூர்வமாய் உருவாக்குவதே இயக்குநரின் பணி. ஆனால் இங்கே நீண்ட காலமாய் இயக்குநரே கதை, திரைக்கதை, இயக்கம் என ஆதியும் அந்தமுமாய் இருப்பதே கௌரவம் எனும் நிலை நிலவுகிறது. அது மட்டுமல்ல நமது இயக்குநர்கள் நாயகனாக நடிக்கவும் ஆசைப்படுகிறார்கள். தமிழில் நாயகியின் இடத்தை மட்டுமே அவர்கள் எடுக்க மாட்டார்கள். மற்றபடி நாயகன், காமிடியன், தயாரிப்பாளர், உபநடிகன் என நம் இயக்குநர்கள் ஆல்ரவுண்டர்களாய் இருந்து வருகிறார்கள். இதனால் இங்கு திரை எழுத்தாளனுக்கான ஒரு இடம் உருவாகி அதற்காய் ஆட்கள் பயிற்சி பெற்று தயாராக வருவது நிகழவில்லை.

கலைஞானம், அனந்து போன்று திரைக்கதை ஆலோசகர்களே இங்கு இருந்திருக்கிறார்கள். தமிழின் சிறந்த படைப்பாளிகளான எஸ்.ரா, ஜெ.மோ போன்றோர் திரைக்கதை எழுத செல்லும் போது அவர்கள் கதை ஆலோசனையில் பங்கேற்பது, வசனங்களை எழுதுவது போன்ற குறைந்தபட்ச பணிகளையே செய்கிறார்கள். மலையாளத்தில் எம்.டி வாசுதேவன் நாயர் ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதும் போது அதில் அவரது தாக்கம் தனித்து தெரியும். ஆனால் இங்கோ இயக்குநர் படத்தில் தன் ஆதிக்கமே அதிகம் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். ஜெ.மோவின்ஏழாம் உலகம்பாலாவின் இயக்கத்தில் படமான போது அது எப்படி முற்றிலும் உருமாறியது என்பதைப் பார்த்தோம்.
நம் எழுத்தாளர்களை நான் குறைகூற மாட்டேன். அவர்களை முழுக்க பயன்படுத்திக் கொள்ளும் சூழல் இன்னும் இங்கே உருவாகவில்லை.
இன்னொரு பக்கம், சினிமாவை காட்சிபூர்வமாய் கண்டு திரைக்கதையை வடிக்கும் நுட்பத்தையும் நம் படைப்பாளிகள் கற்க வேண்டும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...