முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: யஷிகாவின் யுக்தியும் தர்க்க விளையாட்டும் (1)


 Image result for yashika anand
யஷிகா தன்னை உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத இறுக்கமான பெண்ணாக காட்டிக் கொண்டு வருகிறார். ஆனால் அவருக்கு உள்ள சமூகக் கூச்சமோ, தன்னை பிறர் ஏற்க மாட்டார்கள் எனும் வருத்தம் தரும் விலகல் மனநிலையோ அல்ல. அவர் தெளிவானவர். பார்க்கிறவர்களிடம் எல்லாம் கலகலத்து இளிக்க மாட்டாரே அன்றி தேவையான போது மிக தளுக்காக பேசி மக்களை தன் வசம் இழுக்கவும் பயன்படுத்திக் கொள்ளவும் தெரிந்தவர்.

சமூகமாக்கலிலும் அவர் சுணங்கியவர் அல்ல. அவரால் தனக்கென ஒரு அணியை உருவாக்கி அதனுள் மகிழ்ச்சியாய் தன்னிறைவாய் இருக்க முடியும். தனக்கு அவசியமில்லாதவர்களை எந்த தயக்கமும் இன்றி பத்தடி தள்ளி வைக்கவும், தேவையான போது சேர்ந்து கொள்ளவும் தெரியும். இதனால் தான் டீனேஜ் பெண் என்றாலும் அவர் வயதை மீறிய முதிர்ச்சி பெற்றவர் என பிக்பாஸ் வீட்டுக்குள் பலரும் அவரை அடையாளப்படுத்துகிறார்கள்.
தன் இறுக்கத்தையும் பேச்சுத்திறனையும் அளவாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த தெரிந்தவர் யஷிகா. இதற்கு இரு உதாரணங்கள் தருகிறேன்.
மஹத்துடன் அவர் காதல் வயப்பட்டிருக்கிறார் எனும் கதை வழக்கமான பிக்பாஸ் திரைக்கதையின் ஒரு பகுதியென்றே ஆரம்பத்தில் இருந்து நம்பிக் கொண்டிருந்தேன். இறுதி வரை இருவரும் உண்மையிலேயே நெருக்கமாய் இருக்கிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் தரப்படவில்லை. ஆனால் அவர்கள் பரஸ்பரம் காதலை வெளிப்படுத்தும்படி பிக்பாஸே ஒரு வாரத்தில் தூண்டி விட்டார்.
Image result for yashika anand
இருவருக்கும் பேச வேண்டிய கட்டாயம். மஹத் மிக குழப்பமாய் “நான் யஷீகாவை நோக்க ஈர்க்கப்பட்டது உண்மை தான்…. ஆனால் நான் அவரிடம் முழுக்க வயப்பட்டதாய் சொல்ல முடியாது. அதாவது நான் வந்து” என்றெல்லாம் மென்று முழுங்கினார். இதற்கு ஒரு காரணம், அவருக்கு வெளியே நிஜமாகவே ஒரு காதலி உண்டு, அவர் பிக்பாஸ் விளையாட்டுக்காய் தன் காதலை முறித்துக் கொள்ள தயாராக இல்லை. பிக்பாஸுடனான காதல் உடன்பாட்டை மீறவும் அவரால் முடியாது. யஷீகாவுக்கு வெளியே காதலர் உண்டா என நாம் அறியோம். ஆனால் அவர் ஒரு அளவுக்கு மேல் இந்த பாவனை பந்தத்தில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஆக, மஹத் தன் மதில் மேல் பூனை காதலை வெளிப்படுத்தினதும், யஷிகா அதைப் பிடித்துக் கொண்டு “நான் அவரை ஒரு சமயம் விரும்பினேன் தான். ஆனால் அவர் தான் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு இது மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்துக்கிறது” என எந்த உணர்ச்சியுமின்றி எந்திரத்தனமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார். தனது எந்திரத்தனத்தை நியாயப்படுத்த “எனக்கு என் உணர்ச்சிகளை வெளிக்காட்ட தெரியாது, அது என் பலவீனம்” எனக் கூறினார். ஆனால் இது உண்மை அல்ல.
தன் பெற்றோரை மேடையில், பிளாஸ்மா டிவியில், கண்ட போது யஷிகாவின் கண்கள் குளமாகின. Freeze டாஸ்கின் போது பிற பங்கேற்பாளர்களின் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வந்த போது கூட்டமோடு கூட்டமாய் யஷீகா அழுது தேம்பினார். ஊருக்காக அழ முடிந்தவரால் தன் காதலுக்காய் ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு இதயத்தின் வலியை காட்ட முடியாதா, தேம்பியபடி தன் துயரத்தை முன்வைக்க முடியாதா? முடியும். அந்தளவு கல்லுரிமங்கைகளாய் பெண்கள் இருப்பதில்லை.
ஆனால் இந்த இடத்தில் யஷிகா “உணர்ச்சியற்ற பெண்” எனும் பிம்பத்தை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி, தான் மஹத்தை விரும்பினாலும் அதை ஏன் வெளியே சொல்ல விரும்பவில்லை என்பதை நம்பும்படி சொல்லி விட்டார். அதே போல, முகத்தை மரமாக வைத்துக் கொண்டு தன் காதல் வாக்குமூலம் சற்றே போலியானதோ எனும் தோற்றத்தையும் ஏற்படுத்தினார். மஹத்தால் இது முடியவில்லை. அவரது குழப்பம் அப்பட்டமாய் தெரிந்தது. ஆனால் யஷிகாவோ இரு முனைகளிலும் ஸ்கோர் செய்தார்.
1)   தான் காதலித்து கைவிடப்பட்டவள் எனும் இரக்கவுணர்வைத் தூண்டும் பிம்பத்தை தோற்றுவித்தார்.
2)   அதேவேளை, தான் வெளிப்படுத்தும் காதல் ஒருவேளை முழுக்க உண்மையல்லவோ எனும் சித்திரத்தையும் ஏற்படுத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...