முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (2)

Image result for balachandra menon
பாலசந்திர மேனன்
Image result for director lal
லால்

Image result for anoop menon
அனூப் மேனன்


மலையாளத்தில் பிரசித்தமான இயக்குநர் ஹீரோ என்றால் பாலசந்திர மேனன். கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என டைட்டில் கார்டில் பெயர் போடும் தமிழ் சினிமா வித்தகர்களுக்கு இணையானவர் இவர். 40க்கு மேல் படங்களை இயக்கி இருக்கிறார்; 100க்கு மேல் படங்களில் நடித்திருக்கிறார். மத்திய வர்க்க வாழ்க்கையின் நெருக்கடிகள், சிக்கல்கள், பகடி என வண்ணமயமான படங்களை எடுத்த இவரை நாம் விசுவுடன் ஒப்பிடலாம். அவரது படங்களின் (அவர் நடிக்காமல் இயக்கிய படங்களில் கூட) மைய தொனி அவரது உரத்துப் பேசும் குரல் தான், அந்த குரல் ஒலிக்கும் சமூக விமர்சனம் தான். தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்ற இயக்குநர் இல்லை என்றாலும் எனக்கு பிடித்தமான பல படங்களை இயக்கி இருக்கிறார். இவர் எழுத்தாளரும் (பத்து நூல்களை வெளியிட்டிருக்கிறார்) பாடகரும் கூட. ஒரு நடிகராக சுமாரானவர்.
இதற்கு அடுத்து ஸ்ரீனிவாசன். ஆனால் அவரும் நடிகராகி பிரபலமாகிய பின்னரே இயக்குநரானார்.

அடுத்து லால். இவரது நிஜப்பெயர் மைக்கேல். லால் இயக்குநராகும் முன்னரே கொச்சின் கலாபவன் எனும் பிரசித்த மிகிக்றி குழுவில் செயலாற்றியவர். நடிப்புப் பயிற்சி பெற்று இயக்குராகி மீண்டும் நடிப்புக்கு வந்தவர். ஆரம்பத்தில் இவர் தன் நண்பர் சித்திக்குடன் இணைந்துராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்”, “காட் ஃபாதர்”, “வியட்நாம் காலனி”, “இன் ஹரிஹர் நகர்போன்ற பெரும் வணிக வெற்றி பெற்ற படங்களைத் தந்த பின் அவர் நடிப்பை நோக்கி நகர்ந்தார். லாலுக்கு நிறைய நல்ல பாத்திரங்கள் கிடைத்தது. இயல்பாகவே நடிப்புத் திறன் வாய்ந்தவர் அவர். ரகுவரனைப் போன்ற ஒருவித நெர்வஸான உடல்மொழி, வேகவேகமான சைகைகள், ஆழமான குரல் அவரது சிறப்புகள்.”களியாட்டம்படம் ஷேக்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தின் மறு ஆக்கம். அதில் வரும் எதிர்நிலை பாத்திரம் இயாகோ; அதை ஏற்று நடித்து லால் பெரும் பாராட்டுகளைப் பெற்றார். அதே போலதலப்பாவுபடமும் மையபாத்திரம் வழங்கி இவருக்கு புகழும் அங்கீகாரமும் பெற்றுத் தந்தது. மோகன்லாலுடன் இணைந்து அவர் நடித்தகன்மதம்பார்வையாளர்களுக்கு தனி விருந்தாக அமைந்தது. மோகன்லால் ஒரு பக்கம் நிச்சலமான இறுக்கமான நடிப்பு பாணியை பின்பற்றினால் இவரோ அதற்கு நேர்முரணாய் சதா (அன்பிலும் கோபத்திலும் பொறாமையிலும்) கொந்தளிக்கும் ஒரு உன்னத நண்பனாக தோன்றியிருப்பார். மோகன்லாலுடன் நடிக்கும் போது மற்றொரு நடிகர் நம் கவனத்தை ஈர்ப்பது சுலபமல்ல. Salt N’ Pepper படத்தில் இவர் நடித்த பாத்திரம் ராதா மோகனின் படங்களில் பிரகாஷ்ராஜ் செய்யும் பாத்திரங்களுக்கு இணையானது. தீவிரம், ரௌத்ரம், கோபம், மென்மை என எல்லா எல்லைகளையும் தொடுவது இவரது நடிப்பு. கடந்த பத்தாண்டுகளில் மலையாளத்தின் எந்த முக்கிய படத்தை எடுத்துப் பார்த்தாலும் இருக்குமளவுக்கு அங்கு நீக்கமற நிறைந்தவர். தமிழில் 15 படங்களில் நடித்திருக்கிறார் -இவற்றில்சண்டைக்கோழியில்இவரது பாத்திரம் மறக்க முடியாததாய் அமைந்தது (தமிழர்கள் இவரை இயக்குநர்-நடிகராக பார்ப்பதில்லை என்றாலும்). மலையாளத்தின் இயக்குநர்-நடிகர்களில் மிகச்சிறந்த நடிகர் லால் தான்.

அனூப் மேனன் இயக்குநராகவில்லை என்றாலும் தான் எழுதிய திரைக்கதைகளில் பிரதான வேடம் ஏற்று நடிப்பவர் (இவரை திரைக்கதையாள-நடிகர் எனலாம்). இவரும் நடிகராக அறிமுகமான பின்னரே வேறு துறைகளில் கால் பதித்தார். இவர் திரைக்கதை எழுதிய Beautiful படம் கொஞ்சம் உலக சினிமா பாணியில் எடுக்கப்பட்டதுநிறைய தனிமையான சட்டகங்கள், இறுக்கமான நிற அமைப்பு, தனிமனிதர்களின் துயரம் என. இப்படம் வணிக வெற்றியும் பெற்றது. “பகல் நக்ஷ்த்ரங்கள்பட்த்தில் மோகன்லாலுடன் (அவரது மகனாக) நடித்தார். இரண்டுமே நடுநிலை சினிமா ஸ்டைலில் எடுக்கப்பட வணிக கதைகளைக் கொண்ட நல்ல படங்கள். ஒரு நடிகராக இவர் மோகன்லாலின் சாயல் அதிகமாய் கொண்டவர்.
 இந்த நால்வரும் கூட ஒரு விதிவிலக்கே. மலையாளத்தின் மிகச்சிறந்த இயக்குநர்களில் பலரும் கேமராவுக்கு முகம் காட்டியதில்லை. ஒரு சிலர் இருக்கிறார்கள்.
இந்தியை எடுத்துக் கொண்டால் முதலில் நினைவுக்கு வருபவர் அமீர் கான். “தாரே சமீன் பார்இவர் இயக்கிய முக்கியமான படம். ஆனால் அமீர் கான் இயக்கத்தை விட படத்தயாரிப்பிலே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இயக்குநர்-நடிகராக நமக்கு அதிக பரிச்சயமான மற்றொருவர் மகேஷ் மஞ்சிரேக்கர்.
அடுத்து பர்ஹான் அக்தர். இவர் கவிஞர் ஜாவேத் அக்தரின் மகன். இயக்குநர் ஸோயா அக்தர் இவரது தங்கை. நடன இயக்குநரும் நடிகையுமான பரா கான் மற்றும் இயக்குநர் சஜீத் கான் இவரது உறவினர்கள். பர்ஹான் இயக்குநராக தான் முதல் வெற்றியை பெற்றார். இவரது முதல் படமான தில் சஹ் தா ஹெநான் திரும்பத் திரும்ப பார்க்கும் ஒரு இடைநிலை பொழுதுபோக்கு படம்.  மூன்று நண்பர்கள் (அமீர் கான், அக்ஷய் கன்னா, சயிப் அலிகான்), அவர்கள் வாழ்வில் வரும் பெண்கள், அவர்களது தனிப்பட்ட நெருக்கடிகள், அவற்றில் இருந்து அவர்கள் பாடம் பெற்று முதிர்வது, என்ன நடந்தாலும் நட்பை கெட்டியாய் பிடித்துக் கொள்வது ஆகியவற்றை சித்தரிக்கும் நெகிழ்ச்சியான படம். இந்திய சினிமாவின் புரொமேன்ஸ் படங்களின் முன்னோடி என இதைச் சொல்லலாம். இதில் ஓவியராய் வரும் அக்ஷய் கன்னா தன்னை விட வயது முதிர்ந்த பெண்ணை நேசிக்கும் (”மோகமுள்ளைநினைவுபடுத்தும்) காட்சிகள் அவ்வளவு கவித்துவமாய் சொல்லப்பட்டிருக்கும். அந்த கிளைக்கதையை நினைக்கும் போதெல்லாம் எனக்கு புல்லரிக்கும், கண்களில் நீர் துளிர்க்கும். ஆனால் இப்படத்துக்குப் பின்னர் அக்தரால் நல்ல படங்களை இயக்க இயலவில்லை. (டான், டான் 2 போன்ற மசாலா படங்களை ஷாருக்கானை வைத்து எடுத்து வணிக வெற்றி பெற்றார் என்றாலும்.) இயக்கத்தில் இருந்து வழுவி படத்தயாரிப்பிலும் நடிப்பிலும் ஈடுபட்டார். பாடகர் மற்றும் திரைக்கதையாளராகவும் ஜொலித்தார்.
பர்ஹான் அழகர். கலங்கலான குரல் கொண்டவர். நுணுக்கமான உணர்ச்சிகளை முகத்திலும் உடல்மொழியிலும் காட்டும் திறன் படைத்தவர். ஒரு இயக்குநராக தன்னால் தொடர்ந்து சாதிக்க இயலாததை நடிகராக செய்தார் எனச் சொல்லலாம். இவர் மில்க்கா சிங்காக நடித்த பாக் மில்க்கா பாக்பிலிம்பேர் சிறந்த நடிகர் விருதை பெற்றுத் தந்தது. பர்ஹான் நடித்த படங்களில் எப்போதும் என் தனிப்பட்ட தேர்வுலக் பை சேன்ஸ்தான்.
இதற்கு அடுத்த தான் இயக்கியஸ்டான்லி கெ டப்பாபடத்தில் நடிக்கவும் செய்து பெயர் பெற்ற அமோல் குப்தேவை குறிப்பிடலாம். சமீபத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப் (“இமைக்கா நொடிகள்”) படத்தில் நடித்து ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.
(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...