முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் பலாத்காரம் செய்தால்? (2)



Image result for gayathri sai metoo
ஒருவர் லெஸ்பியனாய் இருப்பதில் தவறில்லை, அப்படி இருப்பதானாலே அவர் சொல்வது பொய்யாகி விடாது. ஆனால் ஒரு சந்தர்பத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரே மற்றொரு சந்தர்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. எப்படி நானா படேகர் எனும் நடிகர் தனுஷ்ஸ்ரீயை பாலியல் ரீதியாய் துன்புறுத்த வாய்ப்புண்டோ அதே போல தனுஷ்ஸ்ரீயும் ராக்கியை துன்புறுத்த சாத்தியம் உண்டு. நானா படேகரிடம் செயல்படும் ஆணாதிக்கவாதமே தனுஷ்ஸ்ரீயிடமும் செயல்படுகிறது. சொல்லப் போனால், தனுஷ்ஸ்ரீயை விட நானா படேகர் கூடுதல் கண்ணியத்துடனே நடந்திருக்கிறார். அவர் கேங் ரேப் செய்வேன் என்றெல்லாம் தனுஷ்ஸ்ரீயை மிரட்டவில்லையே? மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ய முயலவில்லையே?

1)   காயத்ரி சாய்- விஸ்வதர்சினி பிரச்சனை:


காயத்ரி சாய் எனும் நடிகை சமீபத்தில் MeTooவில் பரபரப்பை ஏற்படுத்தினார்ஒரு மூத்த பத்திரிகையாளர்ஸ்வாமி - தன் வீட்டுக்கு வந்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் அவரை கண்டித்து தான் வெளியேற்றியதாகவும் அவர் கூறினார். இதை ஸ்வாமி மறுத்தார். அவர் தரப்பு இது: காயத்ரி சாய் அவரது கணவர் எம்.ஆர். சாய்நாத்துடன் ஹாங்காங்கில் வாழ்ந்து வந்தார். சாய்நாத் ஒரு வங்கியில் பணிபுரிந்தார். ஒருநாள் அவர் உடல்நலமின்றி இறந்து போக காயத்ரி கோடிக்கணக்கான காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அந்த மரணம் குறித்த சில சந்தேகங்கள் காவல்துறைக்கு எழுந்தது. விசாரணையில் இருந்து தப்பிக்கும் முகமாக காயத்ரி சென்னைக்கு புலம்பெயர்ந்தார். ஸ்வாமி இந்த வழக்கு குறித்து ஒரு புலனாய்வு பத்திரிகையில் எழுத காயத்ரிக்கும் அவருக்குமான உறவு கசந்தது. இதை அடுத்து காயத்ரி MeToo புகாரை தனக்கெதிராய் எழுப்புவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் சமரசம் செய்வதற்கு 5 கோடி ரூபாய் கேட்பதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறார். காயத்ரி ஒரு பிரபலம் அல்லவென்பதால் இந்த வழக்கு தொடர்ந்து மக்கள் கவனத்தில் இருக்கவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து நடந்த சில சம்பவங்கள் நாம் கவனிக்க வேண்டியவை. பல பாலியல் வழக்குகள் போலியாய் சமைக்கட்டவையோ எனும் ஐயத்தை எழுப்புபவை.

ஸ்வாமியுடன் இந்த மோதல் ஏற்பட்ட பிறகு காயத்ரிக்கு ஒரு தோழி துணை நின்றார். அவர் பெயர் விஸ்வதர்சினி. இவர் காயத்ரியை அடிக்கடி சந்தித்து சமூக வலைதளங்களில் இந்த வழக்கை முன்னெடுப்பதற்கான உதவிகளை செய்து வந்தார். பின்னர் ஒருநாள் எக்குத்தப்பான ஒரு சம்பவம் நடந்தது. காயத்ரியின் வீட்டில் இருவரும் இருக்கும் போது அவர் மது போதையில் விஸ்வதர்சினியிடம் தவறாக நடந்து கொள்ளத் துவங்கினார். விஸ்வதர்சினி மறுத்தும் அவர் அவரை விடவில்லை. தொடர்ந்து அத்துமீறிக் கொண்டே இருந்திருக்கிறார். அங்கிருந்து விஸ்வதர்சினி கிளம்பி வீட்டுக்கு வந்து அதிர்ச்சியில் குழப்பத்தில் இருக்கையில் போனில் அழைப்பு வருகிறது. காயத்ரி மறுமுனையில். கடும் வசைகளை அவர் தொடர்ந்து பொழிகிறார். எனக்கு இணங்காவிட்டால் உன்னை அழித்து விடுவேன் என மிரட்டுகிறார். காயத்ரிக்கு மாபியாக்களிடம் தொடர்புண்டு என நினைக்கும் விஸ்வதர்சினி உண்மையிலேயே பயந்து போகிறார். இதன் பின்னர் அவர் காயத்ரியின் நண்பர்கள் மற்றும் ஸ்வாமியிடம் பேசுகிறார். அப்போதே காயத்ரி பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்ட தகவல்கள், ஐயங்கள், கேள்விகள் அவர் விஸ்வதர்சினியின் பார்வைக்கு வருகின்றன. அவர் தனக்கு நடந்த அநீதி, தன் மீது பாய்ந்த பாலியல் வன்முறை பற்றி பேஸ்புக் லைவ் கொடுத்தார். இப்போது காயத்ரிக்கு கிடைத்த கவனத்தில் நூறில் ஒரு மடங்கு கூட விஸ்வதர்சினிக்கு கிடைக்கவில்லை. ஆண் செய்யாத பட்சத்தில் எந்த பாலீயல் குற்றத்தையும் பொருட்படுத்த தேவையில்லை எனும் நமது பொது சமூகத்தின், ஊடகங்களின், போராளிகளின் அணுகுமுறை தடித்தனமானது.


எனது “MeToo: சில விமர்சனங்கள்” நூலில் இருந்து.

நூலை இணையம் வழி வாங்க:


https://www.udumalai.com/meetoo-vimarsanangal.htm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.