![]() |
| அமெரிக்காவில் திருநங்கை ஒருவரை பலாத்காரம் செய்த்தற்காக கைது செய்யப்பட்ட இரு
பெண்கள் |
கல்லூரி மாணவிகளின் லெஸ்பியன் பலாத்கார வழக்குகள்:
2005இல் அமெரிக்காவின் மஸச்சூஸட்ஸ் மாகாணத்தில் உள்ள ஸ்மித் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவி தனது இரு லெஸ்பியன் காதலிகளான ரேச்சல் மற்றும் அகஸ்தாவுடன் அவர்களின் வீட்டுக்கு சென்றார். படுக்கையறையில் மதுவருந்தி விட்டு மூவரும் உடலுறவில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ரேச்சலும் அகஸ்தாவும் அம்மாணவியை கைவிலங்கிட்டு கட்டிப் போட்டு விட்டு பலாத்காரம் செய்தனர். சேடோமெஸோக்கிஸ பாணியில் கன்னத்தில் திரும்பத் திரும்ப அறைந்தனர்; ஒரு பெண் அவளது கால்களை பிடித்துக் கொள்ள இன்னொருவள் அவளது அடிவயிற்றை கத்தியால் கீறியிருக்கிறாள். இதன் பிறகு டில்டோ கொண்டு பிறப்புறுப்பை துளைத்திருக்கிறார்கள். இந்த மாணவி பின்னர் கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்திட, அவர்கள் காவல்துறையினரை அணுக, வழக்கு சீராக நடந்து ரேச்சல் மற்றும் அகஸ்தாவுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதைப் பற்றி எழுதும் அலெஸ்ஸாண்டிரா எனும் பிளாகர் அக்கல்லூரி லெஸ்பியன்களின் கூடாரம் என்றும், நீண்ட காலமாய் லெஸ்பியன் பலாத்காரங்கள் அங்கு நடைபெற்று வந்ததென்றும், கல்லூரி நிர்வாகம் பல குற்றங்களை லெஸ்பியன் போராளிகளுக்கு அடிபணிந்தும் தமது பெயர் கெடக் கூடாதென்றும் குற்றங்களை மூடி மறைத்து வந்தனர். மேற்சொன்ன குற்றம் தான் முதன்முறையாய் விசாரணைக்குள்ளான லெஸ்பியன் பலாத்காரம்.
மேரி கிளேர் இணையதளத்தில் கோவா பெக் மேலும் பல இத்தகைய வழக்குகளை விவரிக்கிறார். அலைனா எனும் கல்லூரி மாணவி தன் லெஸ்பியன் தோழிகளால் போதை மருந்து கலந்த கொக்கோ கோலா அளிக்கப்பட்டு பலாத்காரம் பண்ணப்பட்டார். அலைனா அதிர்ச்சியில் ஒடுங்கிப் போனார். குற்றம் இழைத்த இப்பெண்கள் பலாத்காரத்தை காணொளி பதிவு செய்திருந்தனர். இதை அவர்கள் லீக் செய்ய, அலைனா பொறுக்க முடியாமல் கல்லூரி நிர்வாகத்தினரை அணுகு புகார் தெரிவித்தார். ஆனால் நிர்வாகமோ “நீ ஒரு லெஸ்பியனா என்ன?” எனும் மட்டம் தட்டியதுடன் மேற்கொண்டு விசாரிக்க மறுத்து விட்டனர்.
கலிபோர்னியாவை சேர்ந்த சாரா எனும் லெஸ்பியன் தன் தோழியுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். ஆரம்பத்தில் இனிமையான இணக்கமாய் இருந்த தோழி பின்னர் மனவியாதி கொண்டவராய் உருக்கொண்டார். தினமும் மிரட்டல், அடி, வன்முறை, வசை என சித்திரவதை. எவ்வளவு செக்ஸ் வைத்துக் கொண்டாலும் அவருக்கு திருப்தி இராது. ஒருநாள் ஸ்டிராப் ஆன் எனும் பெல்டில் பொருத்திய டில்டோவுடன் வந்த அவர் சாராவை பலவந்தம் செய்தார். இருவரும் ஜோடிகள் என்பதால் சாராவை பலாத்காரம் செய்ய தனக்கு உரிமையுண்டு என அவர் நம்பினார். அது மட்டுமல்ல அடுத்த ஆறு மாதங்களும் அவருக்கு பண உதவி செய்யவும் செய்தார். காசு தர மறுத்த போதெல்லாம் அவர் சாராவை அடித்தார். சாரா வீட்டு விட்டு தப்பித்து ஓடிய போது அவர் கத்தியுடன் துரத்தி சென்றார். பிறகு கடன் பெற்று அவரை நார்த் கரோலினாவுக்கு அவர் அனுப்பிய பின்னர் தான் சாரா தப்பித்தார்.
2015இல் பெர்க்லியில் எல்லா எனும் பெண்ணுக்கும் இதே போன்றதொரு பலாத்கார அனுபவம் நடக்கிறது. காதலிக்குப் பதிலாய் எதேச்சையாய் சந்தித்த ஒரு பெண் இவர் விசயத்தில் வில்லி ஆகிறார். வீட்டுக்கு வரும் அவர் வெளியேற மறுக்கிறார். திரும்பத் திரும்ப வந்து பலாத்காரம் பண்ணி விட்டுப் போகிறார். பிறகு ஒரு தோழியின் உதவியுடன் எல்லா இந்த ரேப்பிஸ்டிடம் இருந்து தப்பிக்கிறார்.
எனது “MeToo: சில விமர்சனங்கள்” நூலில் இருந்து.
நூலை இணையம் வழி வாங்க:
https://www.udumalai.com/meetoo-vimarsanangal.htm

கருத்துகள்